விஜய் ஆண்டனி அதை பண்ணும் போதே நெனச்சேன்.. மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் நறுக்!
சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் நேற்று வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் அளித்துள்ளார்.
தொடர்ந்து விஜய் ஆண்டனி படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கும் அதேபோன்ற விமர்சனத்தை தான் கொடுத்துள்ளார். மேலும், மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கிளப்பிய சர்ச்சை தொடர்பாக விஜய் ஆண்டனிக்கு எதிரான கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படத்துக்கு மோசமான விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் சொன்ன நிலையில், அதற்கு எதிராக விஜய் ஆண்டனி பதிவிட்ட போஸ்ட் பஞ்சாயத்தை கூட்டியது.
இயக்குநர் குற்றச்சாட்டு: மழை பிடிக்காத மனிதன் படம் முதல் நாளில் வெளியான போது அந்த படத்தை பார்த்த படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் தனக்கே தெரியாமல் முதல் 1 நிமிடக் காட்சி எப்படி எங்கிருந்து இடம்பெற்றது என்றே தெரியவில்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கி நேற்று வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியும் படத்திற்கான புரமோஷனை ஆரம்பித்து விட்டார்களா? என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: விஜய் ஆண்டனியை கொலை செய்ய நினைக்கும் வில்லன் அவரது மனைவியை கொன்று விட விஜய் ஆண்டனியும் இறந்து விட்டார் என வழக்கை முடிக்கும் சரத்குமார் மறைமுகமாக விஜய் ஆண்டனியை வைத்து வில்லன் கும்பலை தீர்த்துக் கட்டும் படம் தான் இது. ஆனால், இந்த கதையை சரியாகக் கூட திரையில் சொல்லாமல் சொதப்பலாக எடுத்து விட்டார்கள். மழை பிடிக்காத மனிதனாக விஜய் ஆண்டனி வருவது போல படம் பிடிக்காத மனிதனாக ரசிகர்கள் மாறிவிட்டனர் என விமர்சித்துள்ளார்.
விஜய் ஆண்டனி எடிட் பண்ணும்போதே: இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தயாரிப்பாளராக மாறினார். பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி தோல்வியைத் தழுவினார். கடைசியாக வெளியான ரோமியோ படத்தையும் அவரே எடிட் செய்திருந்தார். அப்போதே ப்ளூ சட்டை மாறன் எதுக்கு இந்த வேண்டாத வேலை என விஜய் ஆண்டனியை வம்பிழுத்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி தான் தனது சலீம் படத்தின் காட்சியை வைத்து விட்டாரா? என மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளார்.
விமர்சனம் பிடிக்காத மனிதன்: இந்த விமர்சனத்தை பார்த்து விட்டு விமர்சனம் பிடிக்காத மனிதனாக விஜய் ஆண்டனி மாறிவிடுவார் என்றும் அதன் பின்னர், அன்பே சிவம், குணா போல இந்த படத்தையும் ஆக்கி விடாதீங்க என கமெண்ட் அடிப்பார். அந்த நல்ல படங்களின் பெயர்களையும் கெடுத்து விடுவார் என கடைசியாக வாய்ஸ் ஓவரில் பேசி விளாசி விட்டார். மழை பிடிக்காத மனிதன் படம் பல தடைகளை கடந்து ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், முதல் நாளே இந்த படத்துக்கு இப்படியொரு பிரச்சனை வரும் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். விரைவில் அந்த படத்தின் குழு விஜய் மில்டன் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











