சொல்லி அடிச்ச சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம் இதோ!

சென்னை: கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான 80ஸ் பில்டப் படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன் காலையிலேயே வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு விமர்சனம் கொடுத்திருக்காரே எப்படி இருக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து விமர்சனத்தை பார்த்தவர்களுக்கு ப்ளூ சட்டை மாறனே பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துட்டாரே என படத்தை பார்க்க தயாராகி வருகின்றனர்.

ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் என்றால் படம் நல்லா இருக்கோ இல்லையோ, விமர்சனம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என முதல் 3 நாட்களுக்கு டிக்கெட் புக்கிங்கை ஹவுஸ்ஃபுல் ஆக்கி விடுவார்கள். ஆனால், மற்ற நடிகர்கள் படங்கள் என்றால் உஷாராக விமர்சனங்களை பார்த்து விட்டு நல்லா இருந்தா தியேட்டருக்கு சென்று பார்ப்பது சுமார் என சொல்லி விட்டாலே பொறுமையாக ஓடிடியில் பார்ப்பது என மாறிவிட்டனர்.

Blue Sattai Maran Vaddakkupatti Ramasamy Review is here

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி: கடந்த ஆண்டு சந்தானத்துக்கு முதலில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் அவர் நடித்து வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் சொதப்பி விட்டன. இந்நிலையில், டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா டீம் உடன் சந்தானம் இணைந்து நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 600 தியேட்டர்களில் சந்தானம் படம் வெளியாகி உள்ளது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: பொதுவாகவே படங்கள் கொஞ்சம் சரியில்லை என்றாலும் வச்சு செய்து விடும் ப்ளூ சட்டை மாறன் கடந்த ஆண்டு வெளியான சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நிலையில், அந்த படத்தை பலரும் தியேட்டருக்கு சென்று பார்த்தனர். இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கும் பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளார்.

முதல் பாதி சுமார், இரண்டாம் பாதி சூப்பர்: சமீப காலமாக வெளியாகும் படங்கள் எல்லாமே முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதி மொக்கையாகவும் இருந்து வரும் நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படம் அதற்கு மாறாக முதல் பாதியில் படத்துக்கான கட்டமைப்பை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இரண்டாம் பாகத்தில் கடைசி வரை கலக்கலான காமெடி காட்சிகளை வைத்து கரை சேர்த்து விட்டார் என ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.

சந்தானத்துக்கு ஜாக்பாட்: இந்த வாரம் 4 படங்கள் வெளியானாலும் அனைத்தும் சிறு படங்கள் தான். கடந்த வாரம் வெளியான படங்களில் சிங்கப்பூர் சலூன் டல் அடித்து விட்ட நிலையில், சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படம் பெரிய அளவில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படம் வரும் வரை வடக்குப்பட்டி ராமசாமி ஓடும் என தெரிகிறது. அந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் வந்தால் தான் தப்பிக்கும் என்பதால், சந்தானம் 2024ம் ஆண்டு ஆரம்பத்திலேயே வெற்றியை ருசிப்பார் என தெரிகிறது.

காமெடி வொர்க்கவுட் ஆகியிருக்கு: சந்தானம் படத்தில் காமெடி வொர்க்கவுட் ஆனால் தான் அந்த படத்தை பார்க்க முடியும். டிக்கிலோனா படத்திலும் காமெடி வொர்க்கவுட் ஆகியிருந்தது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்திலும் அது பக்காவாக கனெக்ட் ஆனது. இந்நிலையில், இரண்டாம் பாதி முழுக்க தியேட்டரில் ரசிகர்களின் சிரிப்பொலி கேட்பதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X