விஜய்சேதுபதியின் முத்து என்கிற காட்டான்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: விஜய் சேதுபதியின் "முத்து என்கிற காட்டான்" வெப் தொடர் மார்ச் 27ந் தேதியான நேற்று ஜியோஹார்ட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில், மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு ஆகியோர் நடித்துள்ளனர். மதுநீலகண்டன் ஒளிப்பதிவில், ராஜேஷ் முருகேசன் இசையில் இத்தொடரை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். இயக்குனர் மணிகண்டனுடன் அஜித்குமார் இணைந்து இந்த தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை பார்க்கலாம்.

"முத்து என்கிற காட்டான்" வெப் தொடரின் ஆரம்பத்தில் ஒரு காட்டுப்பகுதியில் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை கிடக்கிறது. அந்த தலைக்கு அருகில் பணம், ஒரு கடிதமும் உள்ளது. அந்த தலையை வைத்து போலீசார் இவன் யார் என்பது குறித்து விசாரிக்க தொடங்கியது போது தான், இறந்தவர் பெயர் முத்து என்பது தெரியவர போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி ஊர் ஊராக செல்கின்றனர். அப்போது தான் முத்து என்பவன் வாட்ச் ரிப்பேர் செய்பவர் என்றும், சிலர் இவன் கண்மணி நடனக்குழுவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பான் என்றும் பலர் பலவிதமான கருத்தை சொல்கின்றனர். இப்படி விசாரணை சென்று கொண்டு இருக்க, இந்த முத்து யாரு, இவரை யார் கொன்றது என அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதை நகர்கிறது.

Vijay sethupathi   Muthu Engira Kaattaan  Review
Photo Credit:

முத்து என்கிற காட்டான்: 10 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் முதல் 3 எபிசோடுகளை மட்டும் தான் போட்டு காட்டினார்கள். அந்த 3 எபிசோடும் அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த 7 எபிசோடுகளும் ஜவ்வுமிட்டாய் போல இழுத்துவிட்டார்கள். இந்த 7 எபிசோடுகளும் சுவாரசியம் இல்லாமல் போனதற்கு காரணமே படத்தில் பல காட்சிகளை தேவையே இல்லாமல் எடுத்து வைத்து சொதப்பி இருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற திரில்லர் படத்தில் ஒவ்வொரு ரகசியத்தையும் உடைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் படம் முடிந்த பின்பும் குழப்பமாவே இருக்கு.

எப்பாசாமி முடியல: "முத்து என்கிற காட்டான்" வெப் தொடரின் டிரைலர் வெளியான போது இந்த படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தோன்றும். ஆனா, படத்தை பார்த்த பிறகு இந்த படத்தை எவனையும் பார்க்க விடக்கூடாது என்று தான் நினைக்கத் தோன்றும் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X