Bommai Review: எஸ்.ஜே. சூர்யா நடிப்பு வேற லெவல் மிரட்டல்.. ஆனால்? பொம்மை பட விமர்சனம் இதோ!

Rating:
2.5/5
Star Cast: எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி
Director: ராதா மோகன்

நடிகர்கள்: எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: ராதா மோகன்

சென்னை: எஸ்.ஜே. சூர்யாவின் நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்கள் வித்தியாசமான கற்பனையுடன் உருவாக்கப்பட்டு இருக்கும். அப்படியொரு வித்தியாசமான எஸ்.ஜே. சூர்யா ராதா மோகன் மூளைக்குள் சென்று யோசித்தால் எப்படி ஒரு கதை உருவாகுமோ அப்படி ஒரு கதையாக உருவாகி இருக்கிறது இந்த பொம்மை.

அழகிய தீயே, பொன்னியின் செல்வன் (ரவி கிருஷ்ணா படம்) படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான மொழி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Bommai Review in Tamil: SJ Surya an Priya Bhavani Shankars romantic show

அடுத்து அவர் அபியும் நானும், பயணம் உள்ளிட்ட படங்களும் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளின. ஆனால், அதன் பின்னர் அவர் இயக்கிய கெளரவம், உப்புக் கருவாடு, 60 வயது மாநிறம், பிருந்தாவனம், காற்றின் மொழி, கடைசியாக வெளி வந்த மலேசியா டு அம்னீசியா உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் பொம்மை படம் தப்பித்ததா? இல்லையா? என்கிற விரிவான விமர்சனத்தை இங்கே காணலாம்..

பொம்மை கதை: மன நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நாயகன் ராஜு (எஸ்.ஜே. சூர்யா) பொம்மைகள் தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஒரே ஒரு பொம்மை மட்டும் அவரது முதல் காதலி போல தெரிகிறது. அந்த பொம்மையாக பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே. சூர்யா கண்களுக்கு மட்டும் தெரிகிறார்.

அந்த பொம்மையை விற்பனை செய்யக் கூடாது என கடையின் சூப்பர்வைசரிடம் எஸ்.ஜே. சூர்யா கோரிக்கை வைக்கிறார். ஆனால், அவர் வெளியூர் சென்று திரும்பும் போது அந்த பொம்மையை விற்று விடுகின்றனர். அதனால், ஆத்திரமடையும் எஸ்.ஜே. சூர்யா சைக்கோவாக மாறி சூப்பர்வைசரை போட்டுத் தள்ளுகிறார்.

Bommai Review in Tamil: SJ Surya an Priya Bhavani Shankars romantic show

மேலும், காணாமல் போன தனது காதலியை (பொம்மை) தேடி அலைய அந்த பொம்மை ஒரு கடையில் இருப்பதை கண்டுபிடித்து அங்கேயே வேலைக்கு சேர்கிறார். அந்த பொம்மையுடனே தனியாக ஒரு உலகத்தில் வாழ்ந்து வருகிறார். சூப்பர்வைசர் கொலையை விசாரிக்கும் போலீஸார் எஸ்.ஜே. சூர்யாவை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தார்களா? தனது பொம்மையுடன் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ எஸ்.ஜே. சூர்யா என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் இந்த பொம்மை படத்தின் கதை.

பிளஸ்: எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு வேறலெவலில் மிரட்டுகிறது. இறைவி படத்தை நினைவுப்படுத்தும் அளவுக்கு ஒரு காட்சியில் அத்தனை சிறப்பாக நடித்து மாஸ் காட்டுகிறார். அந்த ஸ்டேஷன் காட்சியும் படத்துக்கு பிளஸ் ஆக மாறுகிறது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஸ்டேஷனிலேயே பாட்டு பாடி ஆடும் காட்சியில் கலக்கியிருப்பார். அதை விட இங்கே ரசிகர்களுக்கு செம ட்ரீட் உள்ளது.

பிரியா பவானி சங்கர் பொம்மை போலவே அழகாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை காதலில் விழச் செய்கிறார். உயிரே இல்லாத கல் கூட காமமுறும் என மதன் கார்கி சீதா ராமம் படத்தில் வரிகள் எழுதியது போல இந்த படத்திலும் அழகான பாடல் வரிகளை கொடுத்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அந்த தெய்வீக ராகம் பாடல் டச்சும் வித்தியாசமான அனுபவத்தை சினிமா பிரியர்களுக்கு நிச்சயம் கொடுக்கும். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு அந்த பொம்மை அழகான பெண்ணாக மாறும் காட்சிகளையும், படத்திற்கு தேவையான ஒளி அமைப்பையும் கச்சிதமாக வழங்கி உள்ளது சிறப்பு.

மைனஸ்: ஆனால், பொம்மை படத்தில் பிரச்சனை என்றால், லாஜிக்கை எல்லாம் மீறி இயக்குநர் ராதா மோகன் இந்த படத்தை கவிதையாக செதுக்கிறேன் என்கிற பெயரில் ரொம்பவே ஸ்லோ பேஸில் கொடுத்தது தான். தெரிந்த கதை, தெரிந்த முடிவு என்பது போல நகரும் படத்தில் சுவாரஸ்ய தருணங்களும், சீட் எட்ஜ் கார்னர் த்ரில் அனுபவமும் ரொம்பவே மிஸ்ஸிங். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்காக ஒரு முறை இந்த பொம்மை படத்தை பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X