twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை

    |

    நடிகர்கள் : வி.சிவா
    சிறுவன் அஹான்
    சத்யன்
    தேஜஸ்வி மற்றும் பலர்

    இயக்குனர்: பிரதீப் கிளிக்கர்

    சென்னை: இப்போது தமிழ் சினிமாவில் நாய்கள் சீசன் போல் இருக்கிறது. தொடர்ந்து நாய்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் தான் "பப்பி" என்று ஒரு திரைப்படம் நாய்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது, அவைகளும் ஒரு உயிருள்ள ஜீவன் என்பதை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் ஒரு 5 வயது சிறுவனுக்கும் ஒரு நாய்க்கும் இடையே இருக்கும் உணர்ச்சி பிணைப்பை வெளிக்காட்டும் ஒரு திரைப்படமாக பௌவ் பௌவ் அக்டோபர் 18ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    Bow Bow is an emotional bond between a 5 year old boy with dog

    பெங்களூரைச் சேர்ந்த அஹான் என்ற சிறுவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவருடன் 3 நாய்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றன. இவர்களைத் தவிர வி.சிவா, சத்யன், தேஜஸ்வி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தாய் தந்தையை இழந்த அந்த 5 வயது சிறுவன் தனிமையை உணர்ந்து வருத்தத்தில் இருக்கிறன்.

    அவனுக்கு நண்பர்கள், சொந்த பந்தங்கள் என யாரும் இல்லை. அவன் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு நாய் அவனை தொந்தரவு செய்கிறது. அதன் தொல்லையை தாங்க முடியாத அந்த சிறுவன் அதை எதிர்த்து போராடுவதற்காக தனக்கென ஒரு நாயை வாங்குகிறான். அந்த நாயும் அவனுக்கு தொல்லை கொடுக்கிறது. பிறகு அவர்ளுக்குள் எப்படி உறவு பலப்படுகிறது என்பது தான் பௌவ் பௌவ் படத்தின் மையக்கதை.

    Bow Bow is an emotional bond between a 5 year old boy with dog

    படத்தின் முதல் பாதி முழுவதும் ஒரு சிறிய பகுதியை வைத்தே முடித்திருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் நாய்க்கும் அந்த சிறுவனுக்கும் இடையிலான பாடல்கள் தான் பெரும்பாலும் இருக்கிறது. படத்தின் இறுதியில் ஒரு நாய் எப்படி நன்றி உள்ளதாக இருக்கிறது என்பதை மிகவும் அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் பிரதீப்.

    மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பிறகு, ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த சிறுவனை தேடி வரும் காட்சிகள், அப்போது அவர்களின் உணர்ச்சிகள் மிகவும் அற்புதமாக காட்டப்பட்டுள்ளது, இப்படத்தின் பிளஸ் பாயிண்ட்.

    இதைத் தவிர படத்தில் பெரிய அளவிற்கு எந்த முக்கியமான காட்சிகளும் இல்லை. பெரிய நடிகர்களும் இல்லை. ஒரு சில முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதுவும் பெரிய அளவிற்கு விளக்கமாக விரிவாக காட்சிப்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கின்றன.

    இந்த கதையை ஒரு குறும்படமாக அமைத்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இதை இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பெரிய படமாக எடுத்ததன் காரணம் தெரியவில்லை. படத்தின் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் அந்த சிறுவனின் சேட்டைகள், குறும்புத் தனமான நடிப்பு மட்டுமே.

    Bow Bow is an emotional bond between a 5 year old boy with dog

    அந்த சிறுவனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு காதல் ஜோடி பற்றி காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு ஃபிளாஷ் பேக் ஒன்று தனியாக இருந்தது. அதிலும் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. படம் முழுவதும் துண்டு துண்டாக இருப்பது போல் இருந்தது. படத்தில் இசையமைப்பும் பிட் பிட்டாக இருந்தது, எதுவும் சொல்லி கொள்வது போல் இல்லை.

    ஆனால் முத்தமிழ் மற்றும் ராகுல் காந்தியின் பாடல் வரிகள் சிறப்பாக இருந்தது. நாய்களின் உணர்ச்சியை அழகாக பாடல் வரிகளில் கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கான விஷுவல்ஸ் இல்லாமல் ஒரு முழு நீள சீரியல் போல தொகுப்பாகவே இருந்தது.

    இந்த படத்தின் டைட்டிலே மக்களை ஈர்க்கும் விதத்தில் இல்லை. சிறிய குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு சொல்லாகவே பார்க்கப்படும் பௌவ் பௌவ் என்ற வார்த்தை. குழந்தைகளை ஈர்க்கும் ஒரு வார்த்தையாக இருந்தாலும் இதை குழந்தைகளுக்கு ஏற்ற படம் என்றும் சொல்ல முடியாது. வெகுஜன பார்வையார்களின் ஈர்ப்பை இந்த படத்தின் டைட்டில் பெறுமா என்பது சந்தேகமே.

    Bow Bow is an emotional bond between a 5 year old boy with dog

    படத்தின் முக்கியமான மைனஸ் இது ஒரு சீரியல் போன்ற எபெக்ட் தான் தருகிறது. படத்தில் எடிட்டிங் சரியாக அமையாததால் தொடர்ச்சி என்பது மிஸ்ஸிங். ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது படத்தின் திரைக்கதை. அது இந்த படத்தில் டோட்டல் சொதப்பல்.

    சுமார் இருபது வருடங்கள் காத்திருந்து இப்படத்தை இயக்கியுள்ள டைரக்டர் மேலும் ஒரு நல்ல திரைக்கதையை அமைத்திருக்கலாம், என்பது படம் பார்த்த பலரின் எதிர்பார்ப்பு. ஒரு குழந்தைத்தனத்தோடு இதை பார்வையாளர்கள் பார்த்தால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது எத்தனை பேரால் முடியும் என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்.

    சொல்ல வந்த கருத்தை தெளிவான திரைக்கதையுடன் இன்னும் கொஞ்சம் ஆழமாக அமைத்திருந்தால், இது சிறந்த படமாக அமைய வாய்ப்புகள் இருந்திருக்கும். படத்தை சரியான முறையில் கையாலாத காரணத்தால் இதை பார்வையாளர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Bow Bow is an emotional bond between a 5 year old boy with dog
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X