For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Brahmastra Review: மார்வெலுக்கு டஃப் கொடுத்ததா? இல்லை மண்ணைக் கவ்வியதா? பிரம்மாஸ்திரம் விமர்சனம்!

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள்: ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான், மெளனி ராய்
  இசை: ப்ரீதம்
  இயக்கம்: அயன் முகர்ஜி

  சென்னை: இந்திய புராண கதைகளை மையமாக வைத்து ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வந்த நிலையில், இந்து மதத்தின் புராண கதைகளை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் இந்த பிரம்மாஸ்திரம்.

  இயக்குநர் முகர்ஜி இந்த படத்துக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன் என சொல்வதும், 5 ஆண்டுகளாக ஷூட்டிங் செய்ததும் எந்தளவுக்கு பலன் கொடுத்தது என்பதை பாக்ஸ் ஆபிஸ் தான் முடிவு செய்யும்.

  பிரம்மாண்டங்கள் நிறைந்து காணபட்டாலும் அதற்கான திரைக்கதை மற்றும் அழுத்தமான கதை இருக்கிறதா? என தேடிப் பார்த்தால் எங்கேயும் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..அனைவர் முன்னிலையிலும் தலைகுனிந்து நின்ற பாக்கியா!பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..அனைவர் முன்னிலையிலும் தலைகுனிந்து நின்ற பாக்கியா!

  என்ன கதை

  என்ன கதை

  அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் தானோஸுக்கு அத்தனை சக்தி கல் கிடைத்ததும் உலக மக்கள் தொகையில் பாதியை ஒரு சொடுக்கில் காலி செய்வது போல, ரயா தி லாஸ்ட் டிராகன் அனிமேஷன் படத்தில் எப்படி உடைந்து போன டிராகன் சக்தியின் ஒவ்வொரு துண்டையும் ஒன்றாக ஒட்ட வைத்து சூறாவளியை அழிக்கின்றனரோ அதே போன்ற ஒரு கதை தான் பிரம்மாஸ்திரம் படத்தின் கதையும்.

  ஹீரோவே ஒரு அக்னி அஸ்திரம்

  ஹீரோவே ஒரு அக்னி அஸ்திரம்

  டிஜே ஷிவாவாக ஜாலியான பையனாக இருந்து வரும் ரன்பீர் கபூர் இஷா எனும் ஆலியா பட்டை பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழ, அவனுக்குள் இருக்கும் அந்த அக்னி சக்தி வெளிப்படுகிறது. அதன் பின்னர், தனக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சியும், தீய சக்திகளிடம் இருந்து தன்னையும் தனது காதலியையும் அந்த பிரம்மாஸ்திரத்தையும் எப்படி காப்பாற்றினார் என்பதை 2.50 நிமிடம் சொல்லி உள்ளனர். (இது முதல் பாகம் தான்)

  மிரட்டலான கார் சேஸிங்

  மிரட்டலான கார் சேஸிங்

  ஷிவா ஷிவா என மூச்சுக்கு 300 முறை ஆலியா பட் கொடுக்கும் லவ் டார்ச்சர்களை பார்த்து முதல் பாகத்தில் அனைவரும் வெளியே இடைவேளைக்கு முன்பே இண்டர்வெல் விட கிளம்பி விட்டனர். ஆனால், அவர்களை மீண்டும் சீட்டுக்கு கொண்டு வருவதே இடை வேளைக்கு முன்பு வரும் அந்த மிரட்டலான கார் சேஸிங் சீன் தான். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அப்படியொரு காட்சி படம் பார்க்க சென்றவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. (வாண்டா) மெளனி ராய் ரன்பீர் கபூரையும் ஆலிய பட்டையும் துரத்த அங்கிருந்து தப்பித்து இமய மலையில் உள்ள அமிதாப் பச்சனிடம் வந்து தஞ்சம் அடைவதோடு ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிகிறது.

  அஸ்திரங்களின் லெக்சர்

  அஸ்திரங்களின் லெக்சர்

  அமிதாப் பச்சன் அஸ்திரங்கள் என்றால் என்ன, ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் என்ன சக்தி, நீயே ஒரு அக்னி அஸ்திரம் தான். உடைந்து 3 துண்டுகளாக ஒவ்வொரு இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த 3 பாகங்களையும் ஒன்றாக இணைத்து விட்டால் பிரம்மாஸ்திரம் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தையே ஜுனூன் (மெளனி ராய்க்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம்) அழித்து விடுவாள் என பெரிய லெக்சரே கொடுத்து ஒரு வழியாக்கி விடுகிறார்.

  பிளஸ்

  பிளஸ்

  ஷாருக்கான் குறைவான நேரமே வந்தாலும் அவரது காட்சிகள் படத்திற்கு ரசிகர்களை வரவழைக்கும். நாக சைதன்யாவுக்கு அமீர்கான் படத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை விட காளை சக்தியுடன் மிரட்டலாக எதிரிகளை பந்தாடும் நாகர்ஜுனாவின் போர்ஷன் மிரட்டுகிறது. பிரம்மாஸ்திரத்தை விட உலகில் பெரிய அஸ்திரம் காதல் தான் என்கிற கரு நன்றாகவே உள்ளது. முதல் பாகத்தில் ஷிவா உள்ள நிலையில், இரண்டாம் பாகத்தில் தேவ் ஆக அஜய் தேவ்கன் வரப் போகிறாரா? சல்மான் கான் வரப்போகிறாரா? என்கிற கேள்விகள் ரசிகர்களை சற்றே ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் ப்ரீத்தமின் பின்னணி இசை சூப்பர். மார்வெல் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு VFX மிரட்டலாகவே உள்ளது. சில சர்ப்ரைஸ் கேமியோக்களும் உள்ளன.

  மைனஸ்

  மைனஸ்

  ஆனால், இயக்குநர் எங்கே சறுக்குகிறார் என்று பார்த்தால், திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதும் இடத்தில் தான். பல ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களை நம்ம ஊர் மைதாலஜியுடன் சேர்த்து சொல்கிறேன் என மொக்கைப் போட்டுள்ளார். குழந்தைகளையாவது படம் கவரும் என்று பார்த்தால், காதல் காட்சிகளை வைத்து ரம்பம் போட்டுள்ளார். தேவா தேவா என்கிற ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களை தூக்கி இருக்கலாம். சில சூப்பரான காட்சிகள் இருந்தாலும், ஒட்டுமொத்த படத்தையும் காப்பாற்ற அது உதவவில்லை. கோப்ரா படத்தை போல 20 நிமிடத்தை கட் செய்தால் கொஞ்சம் தப்பிக்கும்!

  English summary
  Brahmastra Movie Review in Tamil (பிரம்மாஸ்திரம் விமர்சனம்): Ranbir Kapoor and Alia Bhatt laser show not engaging the audience very to the core movie. First Part of Brahmastra is a one time watchable only.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X