Bramayugam Review: பிரம்மயுகம் விமர்சனம்.. கொடுமன் போட்டியாக மிரட்டும் மம்மூட்டி.. அலறவிடும் ஹாரர்!

Rating:
3.5/5

நடிகர்கள்: மம்மூட்டி, அர்ஜுன் அசோகன்

இசை: கிறிஸ்டோ சேவியர்

நேரம்: 2 மணி நேரம் 19 நிமிடங்கள்

இயக்கம்: ராகுல் சதாசிவன்

திருவனந்தபுரம்: பூதகாலம் படத்தை இயக்கி மிரட்டிய ராகுல் சதாசிவன் இந்த முறை மம்மூட்டிக்காக 17ம் நூற்றாண்டை சேர்ந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். குஞ்சமன் போட்டி என்கிற மாந்திரீகனின் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யங்கள் குறித்த கதைகள் கேரளாவில் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அதை வைத்து இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கினார். ஆனால், கடைசி நேரத்தில் குஞ்சமன் போட்டியின் வாரிசுகள் தொடுத்த வழக்கு காரணமாக கொடுமன் போட்டியாக மம்மூட்டியின் பெயர் மாற்றப்பட்டது.

படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரத்தின் பெயரே மாறும் அளவுக்கு ஒரு மெர்சலான கதையை கண்டுபிடித்து மம்மூட்டிக்காக ராகுல் சதாசிவன் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் பாணன் எனும் பாட்டுப் பாடும் நபராக தேவன் எனும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் அசோகன் நடித்திருக்கிறார். கொடுமன் போட்டியாக மம்மூட்டியும், சமையல்காரன் கதாபாத்திரத்தில் சித்தார்த் பரதனும் யட்சியாக ஆடையில்லாமல் அமல்டா லிஸ்ஸும் நடித்துள்ளனர்.

Bramayugam Review in Tamil: Mammoottys mind blowing acting will haunting audience

பிரமயுகம் கதை: 17ம் நூற்றாண்டில் அரசவையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக அங்கிருந்து தனது நண்பனுடன் இணைந்து தப்பித்து காட்டுக்குள் ஓடி வருகிறான் தேவன். திக்குத்தெரியாத காட்டுக்குள் வந்து தனது நண்பன் கோராவுடன் தேவன் சிக்குகிறார். இரவில் கோராவை யட்சி மோக வலையில் விழ செய்து இழுத்துச் செல்கிறது. தனது நண்பனை காப்பாற்ற போராடும் தேவன் ஒரு கட்டத்தில் அதிலிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருக்கும் பாழடைந்த மேன்சனுக்குள் செல்கிறார். ஆனால், அது கொடுமன் போட்டியின் வீடு என்பது தெரியாது. உள்ளே வரும் தேவனை அன்புடன் உபசரித்து அடைக்கலம் கொடுக்கும் கொடுமன் போட்டி சில நாட்களில் வெளியே போக நினைக்கும் தேவனை வெளியே போக அனுமதிக்கவில்லை. அப்போதுதான் கொடுமன் போட்டியின் அமானுஷ்ய வீட்டில் தேவன் சிக்கியிருப்பது தெரிய வருகிறது. அதிலிருந்து தேவன் தப்பித்தானா? இல்லையா? என்பது தான் இந்த பிரம்மயுகம் படத்தின் கதை.

Bramayugam Review in Tamil: Mammoottys mind blowing acting will haunting audience

மம்மூட்டியை பார்த்தாலே பயந்து வருது: ரோர்ஷா எனும் பேய் படத்தில் இதற்கு முன் மம்மூட்டி நடித்திருப்பார். கடைசி வரை பல விஷயங்கள் புரியாமலே இருக்கும். கன்னூர் ஸ்குவாட், காதல் தி கோர் படங்களில் வெரைட்டி காட்டி நடித்திருப்பார். ஓரினச் சேர்க்கையாளராக காதல் தி கோர் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து 72 வயதில் மிரட்டிய மம்மூட்டிய இந்த படத்தில் கொடுமன் போட்டி எனும் மாந்திரீகனாக அலற விடுகிறார். அவரது நிழலை பார்த்தாலே டிராகுலா படத்தில் வரும் தாத்தா டிராகுலாவின் நிழல் பார்த்தால் வரும் நடுக்கம் வருகிறது. நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்துக் கொண்டு தனது பார்வையாலும், குரலாலும் அவர் கொடுக்கும் ஹாரர் எஃபெக்ட் வயிற்றை கலக்குகிறது.

Bramayugam Review in Tamil: Mammoottys mind blowing acting will haunting audience

பிளஸ்: இந்தியாவில் வெளியான ஹாரர் படங்களில் தும்பாட் படத்தை பலரும் பாராட்டி வந்த நிலையில், அந்தளவுக்கு மலையாளத்திலும் ஒரு கதை இருக்கு என்பதை ராகுல் சதாசிவன் எடுத்து இயக்கிய விதம் சிறப்பு. கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டியும் அவரிடம் சிக்கி தவிக்கும் தேவன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் அசோகன் அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார். பிளாக் அண்ட் ஒயிட் ஹாரர் படமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். ஷெனாத் ஜலாலின் ஒளிப்பதிவு மிரட்டல். அதே போல கிறிஸ்டோ சேவியரின் பிஜிஎம் பீதியை கிளப்புகிறது. சாதாரண பேய் படத்தையும் தாண்டி சாதிய அடக்குமுறைக்கு எதிரான கருத்தையும் உள்ளே வைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

Bramayugam Review in Tamil: Mammoottys mind blowing acting will haunting audience

மைனஸ்: படத்திற்கு பலமாக இருக்கும் கருப்பு வெள்ளை காட்சிகளே மைனஸ் ஆகவும் சில இடங்களில் மாறி விடுகிறது. தியேட்டரில் பார்த்து மிரளும் இடங்களில் கருப்பு வெள்ளை நல்ல ஹைடெக் ஒளிப்பதிவை கொடுக்கவில்லை. குறைவான பட்ஜெட் காரணம் என்பது தெரிகிறது. சில குறைபாடுகள் இருந்தாலும் மம்மூட்டியின் அனுபவம் வாய்ந்த நடிப்பு அத்தனையையும் மறக்கடிக்க செய்து ஹாரர் விரும்பிகளுக்கான வரப்பிரசாதமாக இந்த படம் மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X