Bramayugam Review: மம்மூட்டி வரும் போதெல்லாம் மரண பயம்.. பிரம்மயுகம் ட்விட்டர் விமர்சனம்!

திருவனந்தபுரம்: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 15ம் தேதியான இன்று வெளியான படம் பிரம்மயுகம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்து டீசர், டிரெய்லர் என அனைத்தும் ஹாரர் படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு படு மிரட்டலாக இருந்தது. இந்நிலையில், இன்று வெளியான படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் வேறலெவல் படம் என கொண்டாடி வருகின்றனர்.

மம்மூட்டி 72 வயதிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமாகவும் நல்ல கதைகளுடன் ஹிட் படமாகவும் எப்படித்தான் கொடுத்து வருகிறார் என்கிற மேஜிக் மலையாளத்தில் மோகன்லாலுக்கே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Bramayugam Review: Twitter fans wonder after watching Mammoottys outstanding performance

மோகன்லாலை தூக்கி சாப்பிட்ட மம்மூட்டி: மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள் ஓடுகின்றன. ஆனால், அடுத்து வரிசையாக சொதப்புகின்றன. கடைசியாக நேரு படம் ஓடியது. ஆனால், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் செல்ஃப் எடுக்கவில்லை. ஆனால், மம்மூட்டி கடந்த ஆண்டு கன்னூர் ஸ்குவாட், ஜோதிகாவுடன் இணைந்து நடித்த காதல் தி கோர் என பேக் டு பேக் வெற்றி கொடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பிரம்மயுகம் படத்தின் மூலம் மிரட்ட ஆரம்பித்து விட்டார்.

இந்திய சினிமாவின் முகம்: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்றால் அது இன்னமும் மம்மூட்டி தான் என்றும் மனுஷன் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் இருந்து நடிப்பில் மிரட்டுவது வரை பிரித்து மேய்கிறாரே என ரசிகர்கள் பிரம்மயுகம் பார்த்து விட்டு பிரமை பிடித்தது போல மாறி கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Bramayugam Review: Twitter fans wonder after watching Mammoottys outstanding performance

மைண்ட் பிளோயிங்: Mind = Blown! என பதிவிட்டு இயக்குநர் ராகுல் சதாசிவன் பிரபல ஹாலிவுட் ஹாரர் இயக்குநர் ஜார்டன் பீலேவுக்கு சவால் விடும் அளவுக்கு இந்தியாவில் ஒருத்தர் இருக்கிறார் என்பதை நிரூபித்து விட்டார் என இயக்குநரையும் அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அலற விட்டுள்ள மம்மூட்டியையும் பாராட்டி உள்ளார்.

Bramayugam Review: Twitter fans wonder after watching Mammoottys outstanding performance

தொடர்ந்து 4வது வெற்றி: நண்பகல் நேரத்து மயக்கம், கன்னூர் ஸ்குவாடு, காதல் தி கோர் படங்களை தொடர்ந்து 4வது வெற்றியை பிரம்மயுகம் படத்தின் மூலம் மம்மூட்டி பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கொத்தா படமே ஓடாத நிலையில், வரிசையாக வெற்றி வாகை சூடி வருகிறார் மம்மூட்டி.

Bramayugam Review: Twitter fans wonder after watching Mammoottys outstanding performance

மம்மூட்டி வரும் போதெல்லாம் மரண பயம்: பிரம்மயுகம் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபில் மம்மூட்டி வரும் இடங்களில் எல்லாம் 8 முறை பயந்து அலறி விட்டேன். என் அருகில் இருந்த ஒரு நபருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல அந்தளவுக்கு படத்தை பார்த்து பயந்து விட்டார். இப்படியொரு ஹாரர் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. மம்மூட்டி என்ன மனுஷன்யா இப்படியா ஒரு ஹாரர் படத்தை மலையாள சினிமா ரசிகர்களுக்கு கொடுப்பார் என ரசிகர்கள் படத்தை பார்த்து மிரண்டு போய் கொண்டாடி வருகின்றனர்.

Bramayugam Review: Twitter fans wonder after watching Mammoottys outstanding performance

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X