twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேனியல் கிரெய்க் நடித்த பாண்ட் படங்களிலேயே இதுதான் பெஸ்ட்.. No Time To Die எப்படி இருக்கு?

    |

    சென்னை: உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் 007 படமான No Time To Die இன்று வெளியாகி உள்ளது.

    கேசினோ ராயல் படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான டேனியல் கிரெய்கின் கடைசி பாண்ட் படம் இது.

    பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்.. யாருன்னு பாருங்கபிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்.. யாருன்னு பாருங்க

    இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் மெர்சல் கிளப்பியுள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் ரசிகர்கள் இந்த படத்தை எப்படி விமர்சித்துள்ளனர் என்பதை இங்கே காண்போம்.

    இவரா ஜேம்ஸ் பாண்ட்

    இவரா ஜேம்ஸ் பாண்ட்

    கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் திரைப்படத்தில் புதிய ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் அறிமுகமாகும் போது இவர் வில்லன் நடிகர் ஆச்சே எப்படி பாண்ட் கதாபாத்திரத்திற்கு செட் ஆவார் என பலர் விமர்சித்தனர். ஆனால், கேசினோ ராயல் படத்தில் மிரட்டிய டேனியல் கிரெய்க் தொடர்ந்து குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், நோ டைம் டு டை என 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இனி அடுத்த ஜேம்ஸ் பாண்ட் இவர் அளவுக்கு நடிப்பாரா? என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் வரவழைத்து சாதித்து விட்டார்.

    ஏகப்பட்ட தடங்கல்கள்

    ஏகப்பட்ட தடங்கல்கள்

    கொரோனா பரவல் காரணமாக ஏகப்பட்ட முறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. 2020ம் ஆண்டு பிப்ரவரி, 2022ம் ஆண்டு ஏப்ரல், அதே ஆண்டு நவம்பர் இந்த ஆண்டு ஏப்ரல் என ஏகப்பட்ட ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட நோ டைம் டு டை திரைப்படம் கடைசியாக செப்டம்பர் 30ம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. எத்தனை நாட்கள் தள்ளிப் போனாலும் படத்தை பார்த்த ரசிகர்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றே கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குநர் மிரட்டிட்டாரு

    இயக்குநர் மிரட்டிட்டாரு

    25வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான நோ டைம் டு டை திரைப்படத்தை இயக்குநர் கேரி ஃபுகுநாகா இயக்கி உள்ளார். டேனியல் கிரெய்கின் மொத்த வித்தைகளையும் காட்டும் அளவுக்கு திரைக்கதையை வலுவாக அமைத்து காட்சிக்கு காட்சி ரசிகர்களை மெர்சல் காட்டி மிரட்டி உள்ளார் இயக்குநர் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    5 ஸ்டார்

    5 ஸ்டார்

    டேனியல் கிரெய்க் நடித்ததிலேயே சிறந்த ஜேம்ஸ் பாண்ட் என்றால் இது தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும், ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக நேரம் கொண்ட படமாக 2 மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த படம் ஓடினாலும் கொஞ்சமும் போர் அடிக்கவில்லை என 5 ஸ்டார்கள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

    பிராவோ டேனியல் கிரெய்க்

    பிராவோ டேனியல் கிரெய்க்

    இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களிலேயே இது வேற லெவல் ஸ்டன்ட் காட்சிகள், நடிப்பு என ரசிகர்களை சீட் நுனியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நோ டைம் டு டை படம் ஃபெண்டாஸ்டிக்.. பிராவோ டேனியல் கிரெய்க் என இந்த ப்ளூடிக் பிரபலம் பாராட்டி உள்ளார்.

    பாண்ட் பேபி தெறி மாஸ்

    பாண்ட் பேபி தெறி மாஸ்

    ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் ஒரு பக்கம் மிரட்டினால், இன்னொரூ பக்கம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஹீரோயினான பிரபல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸ் சண்டை காட்சிகளில் ஸ்க்ரீன்களை தெறிக்க விடுகிறார் என பாண்ட் பேபியையும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

    தியேட்டர் ட்ரீட்

    மீண்டும் உலகளவில் மக்களை தியேட்டருக்கு கொண்டு வரும் வேலையை டேனியல் கிரெய்கின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் நிச்சயம் செய்யும் என்றும் பல படங்களின் வசூல் சாதனைகளை நோ டைம் டு டை நிச்சயம் முறியடிக்கும் என ஏகப்பட்ட சினிமா டிராக்கர்கள் படத்தை பார்த்த பிறகு உறுதியாக கூறி வருகின்றனர். பெரிய ஸ்க்ரீனில் நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கும் என்பது உறுதி. இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் டேனியல் கிரெய்க் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

    English summary
    Daniel Craig’s last bond film No Time to Die hits the screens all over the world today. Fans and Critics praise Daniel Craig’s outstanding performance in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X