Breakfast Review: 'பிரேக்ஃபாஸ்ட்' பழைய கஞ்சி.. பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை: 'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் 'பிரேக்ஃபாஸ்ட்'. இந்த படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்.

பிரேக்ஃபாஸ்ட்: பெரிய தொழிலதிபரின் மகள் ரோஸ்மின். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த ராணவ்க்கு தனது நிறுவனத்திலேயே வேலை வாங்கி கொடுக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. காதல் விஷயத்தை ரோஸ்மின் அப்பாவிடம் சொல்ல அவர் காதலை ஏற்க மறுக்கிறார். இதனால், தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்துகொள்ளும் ரோஸ்மின் திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைவர இருவரும் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

Breakfast  review   kasthuri
Photo Credit:

படத்தின் கதை: அங்கு நீதிபதி இருவரையும் கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார். அந்த கவுன்சிலராக இருக்கும் கஸ்தூரி, இவர்களின் கதையை போல வேறு ஒரு கதையை சொல்லுகிறார். அதன்பின், ராணவ், ரோஸ்மின் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தின் கதை. இரண்டு விவாகரத்து கதையை ஒரே கதையாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர். இந்த நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் காதல் கதையை எடுத்தாரோ அதே போல ஒரு கதை தான் இது. ஆனால், இந்த கதையில் ஒரு அழுத்தமே இல்லை படம் முழுக்க கஸ்தூரி பேசிக்கொண்டே கொண்டு இருக்கிறார்.

பழைய கஞ்சி: இந்த படத்தில் விவாகரத்துக்கான காரணங்கள் சண்டைகள் எல்லாம் பார்த்து பார்த்து அழுத்துப்போன அதறபழசு படத்தை பார்க்க பார்க்க தூக்கம் சொக்குது. சம்பத்குமார் ஒவர் ஆக்ஷன் செய்து படம் பார்ப்பவர்களை கடுப்பாக்கி இருக்கிறார். இயக்குநர் காந்தி கிருஷ்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தை எடுத்து இருக்கிறீர்கள். ஆனால், படம் பார்க்கும் போது 40 வருடத்தில் நடந்த கணவன் மனைவி பிரச்சனை தான் நினைவுக்கு வருது. படத்திற்கு 'பிரேக்ஃபாஸ்ட்' என பெயர் வைத்து இருக்கிறீர்கள், அப்போது சூடா சுவையா தரணும் அதைவிட்டுவிட்டு இப்படியே பழச கொடுத்தா எப்படி என பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X