Captain Miller Review: தனுஷுக்கு லைஃப் டைம் ரோல்.. கேப்டன் மில்லர் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பீரியட் போர் படமாக உருவாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் டிரெய்லரில் கேட்டதை விட அதிக வேட்டுச் சத்தம் ஒவ்வொரு தியேட்டரிலும் இந்த பொங்கலுக்கு கேட்கப் போவது உறுதி. அந்த அளவுக்கு ஆக்ஷன் நிறைந்த காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதே ஆச்சர்யமான விஷயம் தான்.
ஆக்ஷனை தாண்டி வலி நிறைந்த ஒரு எமோஷனல் டிராமா மற்றும் எளிய மக்களை அந்நியர்கள் கொடுமைப்படுத்திய சுதந்திர போராட்டக் கதையாக இந்த படம் உருவாகி உள்ள நிலையில், நிச்சயம் ஒட்டுமொத்த மக்களையும் படம் கனெக்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

இந்த ஆண்டின் சிறந்த படம்: 2024ம் ஆண்டு தொடங்கிய நிலையில், தமிழில் பொங்கலுக்கு வெளியான படமே இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாகவும் தனுஷின் அறிமுக காட்சி இன்னமும் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது என இந்த நெட்டிசன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

முதல் பாதி ஜெயித்து விட்டது: கேப்டன் மில்லர் படம் வெளிநாடுகளிலும் பிற மாநிலங்களிலும் அதிகாலையிலே திரையிடப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாதி வெற்றி என ரசிகர்கள் ஆடுகளம் பட காட்சிகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

ஆட்டம் போடும் தனுஷ் ரசிகர்கள்: கடந்த அண்டு வாத்தி படம் வெளியான நிலையில், அந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. அந்த படத்தை விட அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் தியேட்டர்களில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தியேட்டர்கள் எல்லாம் வெடிக்கப் போகுது: தனுஷின் லைஃப் டைம் ரோலாக கேப்டன் மில்லர் இருக்கும் என்றும் அசுரன் படத்தை விட வெறித்தனமாக உள்ளது. எல்லா தியேட்டர்களும் இந்த பொங்கலுக்கு வெடிக்கப் போகிறது என அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











