For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : விஷாலின் சக்ரா திரைவிமர்சனம்

  |

  Rating:
  2.5/5

  நடிகர்கள்: விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸான்ட்ரா, ரோபோ ஷங்கர், ஷ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, கே.ஆர். விஜயா,

  இசை: யுவன் ஷங்கர் ராஜா

  இயக்கம்: எம்.எஸ். ஆனந்தன்.

  சென்னை : நடிகர் விஷால் நடித்து தயாரித்த சக்ரா திரைப்படம் வெளியாகி பல ரத பட்ட கருத்துக்களை சந்தித்து வருகிறது

  சண்டைக்கோழி 2,அயோக்யா,ஆக்ஷன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

  சக்ரா திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் வர இப்பொழுது அதன் திரை விமர்சனத்தை காண்போம்.

  இரும்புத்திரை பட பாணியிலேயே

  இரும்புத்திரை பட பாணியிலேயே

  சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவதோடு அந்த படங்களை தயாரித்தும் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்து வரும் விஷால் இப்பொழுது இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா படத்தில் நடித்து வெற்றியை மீண்டும் ருசி பார்க்க ஆசைப்பட்டு உள்ளார் .

  ரெஜினா கெஸன்ட்ரா

  ரெஜினா கெஸன்ட்ரா

  இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பக்கம் இருந்தாலும் ரெஜினா கெஸன்ட்ரா தான் மாஸ் காட்டுகிறார் . இரும்புத்திரை பட பாணியிலேயே சக்ரா படமும் உருவாகியிருக்க காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை அமைத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் எம் எஸ் ஆனந்தன்.தன்னால் ஆன முயற்சியை செய்து விஷாலை குஷி படுத்தும் விதமாக காட்சிகளை அமைத்து கொடுத்து உள்ளார் . ஆனால் ரசிகர்கள் இரும்புத்திரை படத்தை ஒப்பிட்டு பேசாமல் இருக்க முடியவில்லை என்பது தான் வேதனையான விஷயம்

  பிஜிஎம் தெறிக்க

  பிஜிஎம் தெறிக்க

  பொதுவாக ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலே விஷாலுக்கு தண்ணி பட்ட பாடு என இருக்க ஆக்ஷனுடன் டெக்னாலஜி கலந்த, இப்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிம்பிள் அண்ட் நீட் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகு ஏற்றி உள்ளார் இயக்குனர் .மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பிஜிஎம் தெறிக்க படத்தின் ஸ்வாரஸ்யத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

  மிகப்பெரிய கொள்ளை

  மிகப்பெரிய கொள்ளை

  தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு நாளுக்கு நாள் அடுத்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ அதே போல் ,அதன் மூலம் எவ்வாறெல்லாம் ஆபத்துக்கள் வருகிறது என்பதையும் விருவிருப்பு குறையாமல் காட்டியிருக்கிறார்கள் . சுதந்திர தினத்தன்று ஹேக்கிங் செய்யப்பட்டு மிகப்பெரிய கொள்ளை ஒன்று நடைபெறுகிறது அதன் பின் என்ன நடக்கிறது அதை எவ்வாறு ஹீரோ கண்டுபிடித்தார் என்பது தான் கதை. சென்ற ஆண்டே வெளியாக இருந்த சக்ரா திரைப்படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஓடிடியில் வெளியாவதாகவும் சொல்லப்பட்ட நிலையில் இப்போது கடைசியாக பிப்ரவரி 19ஆம் தேதி நேரடியாக திரையில் வெளியாகி ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

  விஷாலுக்கு மற்றுமொரு வெற்றி

  விஷாலுக்கு மற்றுமொரு வெற்றி

  மேலும் சக்ரா படத்தை பார்க்கும் போது இரும்புத்திரை பார்த்தது போலவே ஒரு ஃபீல் இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வர விஷாலுக்கு மற்றுமொரு வெற்றிப் படமாக சக்ரா இருக்கும் என்று சிலர் சொல்லிக்கொண்டு போனாலும் , அடப்போங்க பாஸ் வேற வேலை இல்லை, சொன்ன விஷயத்தையே சொல்லிக்கிட்டு என்று பலர் அலுத்து கொண்டுபோவதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது .

  டேட்டா பேஸ்

  டேட்டா பேஸ்

  சாமான்ய மனிதர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு கம்பெனி , பல விதமான டேட்டா பேஸ் வைத்து உள்ளது .அந்த டேட்டாக்களை ( தகவல்களை ) கொண்டு வயதானவர்கள் ,தனிமையில் இருப்பவர்கள் என்று டார்கெட் வைக்கிறது ஒரு கும்பல் . நடிகர் பாண்டுவின் மகன் பிண்டுவிற்கும் நடிகர் டெல்லி கணேஷின் மகன் மஹாவிற்கும் இந்த படத்தில் வித்யாசமான கதாபாத்திரங்கள். கொடுத்த வேலையை கட்சிதமாக செய்து உள்ளனர் இருவரும் . பிளம்பர் ,கார்பெண்டர் , எலெக்ட்ரிசியன் என்று வீட்டிற்கு யார் வந்தாலும் ஒரு விதமான பயம் ஏற்பட வேண்டும் என்றும் பொது மக்கள் இந்த படத்திற்கு பிறகு மேலும் முன்னெச்சிரிக்கையாக செயல் பட வேண்டும் என்று இயக்குனர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் .

  அசோக சக்ரா

  அசோக சக்ரா

  விஷால் மிகவும் மதிக்கும் குடும்பத்தின் பெருமை என்று சொல்லும் "அசோக சக்ரா"வை கொள்ளையர்கள் லவட்டி கொண்டு போக , அதை துரத்தி துரத்தி தேட விஷால் கடைசியில் அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இந்த சக்ரா படத்தின் மொத்த கதை. ஹேக்கிங் , டிஜிட்டல் உலகத்தின் ஆளுமை என்று நடுவே ஏதேதோ உள்ளே சொருகி ரெஜினாவை மிகவும் அழகாக காட்டியது தான் மிச்சம் . ரோபோ ஷங்கரின் காமெடி பெரிதாக எடுபட வில்லை . நீண்ட நாட்களுக்கு பிறகு கே ஆர் விஜயாவை பாட்டியாக இந்த படத்தில் பார்த்தது பழமை விரும்பிகளுக்கு ஒரு ஆனந்தம் .

  அனாவசியமாக

  அனாவசியமாக

  படத்தின் பல காட்சிகள் தேவை இல்லாமல் திணிக்க பட்டு விஷால் ஒரு அதி புத்திசாலி என்று நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள் . ஆனால் அந்த காட்சிகள் அனைத்தும் லாஜிக் மீறல் என்பது தான் நிதர்சனமான உண்மை . ஷ்ரத்தாவின் முன் கோவம் எதார்த்தமாக இருந்தாலும் விஷாலின் தலையீடு காட்சியிலும் கதையிலும் அதிகம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . நான் மிலிட்டிரிகாரன் மவன் டா அசோக சக்ராவை திருடனவன் எவன் டா என்பது தான் இந்த படத்தின் பன்ச் லைனாக பார்க்கப்படுகிறது . எது எப்படியோ பல போராட்டங்களுக்கு பிறகு படம் வெளியானதே மேல் என்று பட குழுவினர் பலர் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்றனர் . விஷாலின் சக்ரா சுழற்சி கம்மி , ரசிகர்கள் தான் சுழல வைக்க முயற்சி செய்ய வேண்டும் .

  English summary
  Actor vishal acted movie "chakra " got released and the script revolves around various investigations with cops along with a military man. regina has played a different role and lots of appreciation for her new effort is being applauded. shradha srinath is the pair for vishal and the film is screened in several screens of tamilnadu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X