twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பாக்கிகளுடன் மோதிக் கொள்ளும் பங்காளிகள்.. ரத்தத்தால் ‘செக்கச் சிவந்த வானம்’ - விமர்சனம்

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் இன்று ரிலீசாகியுள்ளது.

    |

    Rating:
    3.0/5
    Star Cast: விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய், அர்விந்த் சுவாமி, ஐஸ்வர்யா ராஜேஷ்
    Director: மணி ரத்னம்
    சென்னை: தந்தையின் இடத்தை பிடிக்க மகன்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை இரத்தமும் சதையுமாக சொல்கிறது செக்கச் சிவந்த வானம்.

    இந்த படத்தின் கதையை தெரிந்து கொள்வதற்கு முன், கதாபாத்திரங்களின் அறிமுகத்தை முடித்துவிடலாம்.

    Chekka chivantha vaanam movie review

    ரவுடியாக வாழ்க்கையை ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து நிற்பவர் சேனாபதி (பிரகாஷ்ராஜ்). சேனாபதி - ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த்சாமி). அவருடைய மனைவி சித்ரா (ஜோதிகா), துணைவி பார்வதி (அதிதி ராவ் ஹிதாரி). சென்னையில் அப்பாவுக்கு துணையாக அடிதடி வேலைகளை செய்து வருகிறார்.

    இரண்டாவது மகன் தியாகு (அருண் விஜய்). மனைவி ரேணு (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் குழந்தைகளுடன் துபாயில் ஷேக்குகளுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறார்.

    Chekka chivantha vaanam movie review

    மூன்றாவது மகன் எத்தி (சிம்பு). செர்பியாவில் காதலி சாயாவுடன் (டயானா எர்ரப்பா) இணைந்து ஆயுதம் கடத்தும் தொழில் செய்து வருகிறார்.

    மூத்த மகன் வரதனின் பள்ளி தோஸ்த் இன்ஸ்பெக்டர் ரசூல் (விஜய் சேதுபதி). மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆகி சரக்கும் கையுமாக வரதன் அண்ட் பிரதர்ஸ் உடன் சுற்றி திரிகிறார்.

    Chekka chivantha vaanam movie review

    இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இப்போது கதைக்கு போகலாம். தந்தை சேனாபதியின் இடத்தை பிடிக்க மூன்று மகன்களுக்கும் ஆசை. இந்நிலையில் சேனாபதி மற்றும் அவரது மனைவி மீது திடீர் தாக்குதல் நடக்கிறது. இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சேனாபதியை கொல்ல முயன்றது எதிரணியைச் சேர்ந்த சின்னப்பதாஸ் (தியாகராஜன்) என சந்தேகப்படுகிறார் வரதன். உண்மையில் சேனாபதியை கொல்ல முயன்றது யார் என்பதே படத்தின் கதை.

    ஒரு பாராவுக்குள் அடங்கிவிடும் இந்த கதையை தான், முழு நீள படமாக டெவலப் செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 35 ஆண்டுகளில் அவருக்கு இது 26வது படம். இத்தனை ஆண்டுகளாக சினிமா எடுத்துக்கொண்டிருப்பதற்கு, மணிரத்னத்தின் இந்த நிதானம் தான் காரணம்.

    Chekka chivantha vaanam movie review

    திரைக்கதை, வசனம், பாடல்கள், ரொமான்ஸ் என இது ஒரு அக்மார்க் மணிரத்னம் படம். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருமே மனதில் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு பாத்திர படைப்புகள் கச்சிதம். தனது வழக்கமான ஸ்டைலிஷ் காட்சி அமைப்புகளால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். ஆனால் ஆக்‌ஷன் படம் என்பதற்காக இவ்வளவு வன்முறையும், கொலைகளும் தேவைதானா மணி சார்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மென்சாரலாக கடந்து போகிறது மழை குருவி பாடல். செவந்து போச்சு நெஞ்சே பாட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தாலும் கூட முணுமுணுக்க வைக்கிறது. ஆனால் பாடல்கள் அனைத்தும் காட்சிகளின் வழியே கடந்து செல்கின்றன. மணிரத்னம் படத்தில் தனியாக பாடல்கள் இல்லாதது ஏமாற்றம் தான்.

    பாடல்களைவிட பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ரஹ்மானின் பின்னணி இசை, படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

    Chekka chivantha vaanam movie review

    படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், முதல் இடம் விஜய் சேதுபதிக்கு தான். அறிமுக காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை கலகலப்பாக கொண்டு செல்கிறார். அதுவும் சிம்புவுடனான காட்சிகள் அனைத்தும் அப்ளாஸ் அள்ளுகிறது.

    தனது தனித்த நடிப்பால் விஜய் சேதுபதியை ஆங்காங்கே ஓவர்டேக் செய்கிறார் சிம்பு. சிம்புவின் நடிப்பு சிறப்பு. இவருக்கு அடுத்தப்படியா ஜோதிகா படத்தை ஆக்கிரமித்து கொள்கிறார். ஹீரோ மாஸ் படம் தான் என்றாலும் தனது கம்பீரமான நடிப்பால், அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.

    அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து இப்படம் நிச்சயம் முக்கியமானதாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. பாடிலாங்குவேஜில் மிரட்டுகிறார்.

    அருண் விஜய், அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஜெயசுதா, டயானா என படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

    Chekka chivantha vaanam movie review

    சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளை தெறிக்க தெறிக்க காட்சிப்படுத்தியிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி நீளம் கொஞ்சம் அதிகம்.

    விதவிதமான லொகேஷன்கள் கண்களுக்கு குளிரூட்டுகின்றன. ஆனால் காதை பிளக்கும் துப்பாக்கி சத்தம் எரிச்சல் அடைய செய்கின்றன. என்ன தான் அண்ணன், தம்பிகளுக்குள் பகை இருந்தாலும், இப்படியா மோதிக்கொள்வார்கள். நிச்சயமாக குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது.

    அதேபோல் படத்தின் மற்றொரு குறை, எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதையும், பழைய க்ளைமாக்சும் தான். இரத்தக்கறையால் அதிகம் செவந்திருக்கிறது இந்த வானம். கொஞ்சம் ரங்கோலி கோலமும் போட்டிருக்கலாம்.

    English summary
    Director Maniratnam is back with his action packed thriller movie chekka chivantha vaanam. The movie is a complete package for action lovers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X