Chhaava X Review: ராஷ்மிகா மந்தனாவுக்கு அடுத்த 1000 கோடி படம் ரெடியா?.. சாவ்வா ட்விட்டர் விமர்சனம்!
மும்பை: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய வசூல் வேட்டை படங்களாக மாறி வருகின்றன. இந்தியில் ரன்பீர் கபூர் உடன் இணைந்து அவர் நடித்த அனிமல் திரைப்படம் 900 கோடி வசூலை ஈட்டியது. கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுன் உடன் அவர் இணைந்து நடித்த புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் இந்தியில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சாவ்வா திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் சத்ரபதி சாம்பாஜி மகராஜின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்திய படமாக உருவாகி ரசிகர்களை தியேட்டர்களில் கட்டிப்போட்டு வருகிறது.

பிப்ரவரி 14ம் தேதியான இன்று சாவ்வா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி அதிகாலை காட்சியே அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறியுள்ள நிலையில், பாலிவுட்டுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை இந்த படம் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதன் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சாவ்வா விமர்சனம்: ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் படம் ஸ்பெக்டாக்குலர் என்றும் 4.5 ஸ்டார் ரேட்டிங்கை பாலிவுட்டின் பிரபல விமர்சகரான தரன் ஆதர்ஷ் கொடுத்துள்ளார். லக்ஷ்மண் உத்தேக்கர் இயக்கத்தில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா, அக்ஷய் கன்னா, அஷுதோஷ் ராணா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்திய வரலாற்றையும் இந்திய மன்னர்களின் வீரத்தையும், வஞ்சத்தால் வீழந்த தியாக கதையையும் சிறப்பாக திரையில் கொண்டு வந்து அசத்தியுள்ளனர் என தரன் ஆதர்ஷ் விமர்சித்துள்ளார்.
இந்துக்கள் பார்க்க வேண்டும்: சத்ரபதி வீர சிவாஜி மறைந்த பின்னர் மகாராஷ்ட்ராவை பிடித்து விடலாம் என்கிற கனவுடன் வரும் அவுரங்கசிப்புக்கு சிம்ம சொப்பனமாக சத்ரபதி சிவாஜியின் மகன் சாவ்வா சாம்பாஜி நடத்தும் போர் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்துக்களுக்காக வீர மரணம் அடைந்து உயிர்த்தியாகம் செய்த இவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இந்துக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என பாலிவுட்டில் பயங்கர புரமோஷன் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.
தியேட்டர்களில் திருவிழா: மகாராஷ்ட்ராவில் உள்ள தியேட்டர்களில் முதல் நாள் காட்சியில் ரசிகர்கள் அனைவரும் விக்கி கவுஷலின் ஓபனிங் சீனை தங்களது மொபைல் போனில் படமெடுக்கும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரொம்பவே சிறப்பாக உள்ளது என்றும் இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
படம் முடிந்ததும் பொங்கிய உணர்ச்சி: தாய் நாட்டை காப்பதற்காக வீரமாக போராடி அவுரங்கசிப்பிடம் சிக்கிக் கொண்டு உயிர்த்தியாகம் செய்யும் கிளைமேக்ஸ் உடன் படம் முடிவதாகவும் படம் முடிந்தவுடன் தியேட்டர்களில் சாம்பாஜி மகாராஜுக்கு ஜே என ரசிகர்கள் கோஷம் போடும் வீடியோக்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை சரியல்ல: விக்கி கவுஷல் சாம்பாஜியாக நடித்து மிரட்டியதை விட அக்ஷய் கன்னா அவுரங்கசிப் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். சிறந்த வில்லன் விருது அவருக்குத்தான் இந்த ஆண்டு செல்ல வேண்டும். ராஷ்மிகா மந்தனா சாம்பாஜியின் மனைவியாக கொடுக்கப்பட்ட வேலையை செய்துள்ளார். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசை தான் பெரிதாக படத்தை தூக்கி நிறுத்தவில்லை என சுமித் கடேல் வெறும் 3 ஸ்டார்களை மட்டுமே கொடுத்து படத்தின் குறைகளை கூறியுள்ளார்.
ராஷ்மிகாவுக்கு இன்னொரு 1000 கோடி: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்த படம் இன்னொரு 1000 கோடி படமாக அமைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாகவும் படத்தை பான் இந்தியா ரிலீஸாக வெளியிடவில்லை என்றாலும், இந்தி ரசிகர்கள் புஷ்பா 2, ஸ்ட்ரீ 2 படங்களை கொண்டாடியதை போல இந்த படத்தையும் கொண்டாடி மிகப்பெரிய வெற்றியடைய வைப்பார்கள் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











