Fun Roast Review: கூர்காவா? மணி ஹெய்ஸ்டா? டிவில 'பீஸ்ட்' போட்டா சத்தம் போடாம கதறும் தளபதி ரசிகர்கள்!

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்திருந்தாலும், நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்த 'பீஸ்ட்' படம் ரிலீஸாகி சில ஆண்டுகள் கடந்த பின்பும், இன்னமும் நெட்டிசன்களின் ஆல்-டைம் ஃபேவரைட் ட்ரோல் மெட்டீரியலாகவே இருந்து வருகிறது. டிவில இந்த படம் போட்டா, வெளிய அழ முடியாம மனசுக்குள்ளேயே வெம்பி வெம்பி அழுகுறாங்க நம்ம தளபதி ரசிகர்கள். அந்த அளவுக்கு சின்ன குழந்தைங்க கூட கிண்டல் பண்ற லாஜிக் ஓட்டைகள் இந்த படத்துல இருக்கு. அப்படி 'பீஸ்ட்' படத்தை நெட்டிசன்கள் வச்சு செய்யுற டாப் ஃபன் லாஜிக்ஸ் இதோ.

CM Vijay  Beast Roast
Photo Credit:

யோகி பாபுவோட 'கூர்கா' : நம்ம நெல்சன் சார் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள்ல பண்ண டார்க் காமெடியைப் பார்த்துட்டு, நமக்கும் இது செட் ஆகும்னு ஆசைப்பட்டு தான் தளபதி இந்த படத்துக்குள்ள வந்தாரு. ஆனா படம் ரிலீஸான அன்னைக்கு தியேட்டருக்குப் போன ரசிகர்களுக்குத்தான் தெரிஞ்சது... இது ஏற்கனவே யோகி பாபு நடிச்ச 'கூர்கா' படத்தோட ஜெராக்ஸ் காப்பி, ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் ஹைஜாக் பண்றதும், அங்க நம்ம ஹீரோ 'வீரா' (விஜய்) ரா ஏஜென்டா இருந்து மக்களைக் காப்பாத்துறதும் அப்படியே 'கூர்கா' படத்தோட டிங்கரிங் பார்த்த வெர்ஷன் தான். காமெடி நடிகர் நடிச்ச கதையில உச்ச நட்சத்திரம் நடிச்சதை நெட்டிசன்கள் இன்னமும் வச்சு செய்றாங்க.

CM Vijay  Beast Roast
Photo Credit:

புல்லட் ப்ரூஃப் விஜய்: படம் ஆரம்பிக்கும் போதே நம்ம ஹீரோ வீராவை காஷ்மீர்ல காட்டுறாங்க. அங்க அவரை சுத்தி இருக்குற ஒரு 20, 30 தீவிரவாதிகள் துப்பாக்கியை வச்சு சுடுறாங்க. சுத்தி இருக்குற அம்புட்டு பேரும் சுட்டும் நம்ம தளபதி மேல ஒரு புல்லட் கூட படல, ஆனா அவரு அசால்ட்டா எல்லாரையும் அடிச்சு துவம்சம் பண்ணுவாரு. இதைப் பார்த்த தியேட்டர் ஆடியன்ஸ்க்கு அப்பவே லைட்டா பயம் வர ஆரம்பிச்சது. அதற்கேற்ப படத்துல யோகி பாபுவை பார்த்து விஜய் ஒரு வசனம் பேசுவாரு, "என்ன பயமா இருக்கா... இதுக்கு மேல இன்னும் பயங்கரமா இருக்கும்" அப்படின்னு. "அப்பவே எங்களுக்குப் புரிஞ்சிருக்கணும் சார்... படம் இந்த அளவுக்கு கொடுமையா இருக்கப்போகுதுன்னு.. ஆனா சிக்கிக்கிட்டது நாங்கதான் என ரசிகர்கள் கதறினார்கள்.

என்ன கொடுமை சார்: பயங்கரவாத தீவிரவாதிகள் ஒரு பெரிய ஷாப்பிங் மாலை தங்களோட கட்டுப்பாட்டுல வச்சிருப்பாங்க. சுத்தி கமாண்டோ படை, போலீஸ்னு 'ரெட் அலர்ட்'ல இருக்கும். ஆனா நம்ம ஹீரோ வீரராகவன், எந்தவொரு தடையுமில்லாம சொகுசு காரை ஓட்டிக்கிட்டு மாலுக்குள்ள 'சர்ர்ர்'னு மாஸா என்ட்ரி கொடுப்பாரு. இதைப்பார்த்த நமக்கு "யோவ்... சுத்தி அம்புட்டு போலீஸ் நிக்குது, மால் கதவெல்லாம் லாக் ஆகியிருக்கு... நீ எப்படிப்பா காருக்குள்ள உக்காந்துட்டு மாலுக்குள்ள வந்த? என்று நெட்டிசன்கள் இன்னமும் மண்டையைப் பிச்சுக்கிறாங்க.

CM Vijay  Beast Roast
Photo Credit:

லாஜிக் ரோஸ்ட்: மாலுக்கு வெளிய உட்கார்ந்துட்டு தீவிரவாதிகள் கூட பேச்சுவார்த்தை நடத்துற ஆபீசரா செல்வராகவன் நடிச்சிருப்பாரு. அவர், தீவிரவாதிகள் மிரட்டும்போதெல்லாம், செல்வராகவன் "ஹலோ.. அல்டாஃப்.. ப்ளீஸ்" அப்படின்னு ரொம்ப கூலா கெஞ்சுவாரு. மாலுக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியாம வெளிய இருக்குற கமாண்ட் சென்டர்ல, விடிவி கணேஷ் பண்ற லூட்டியும், செல்வராகவனோட ரியாக்ஷனும் தான் சோசியல் மீடியாவோட ஆகச்சிறந்த ட்ரோல் டெம்ப்ளேட்.

'மணி ஹெய்ஸ்ட்' கதை திருட்டு: கதையை 'கூர்கா'வுல இருந்து சுட்ட இயக்குனர் நெல்சன், படத்தோட மேக்கிங் ஸ்டைலை உலகப் புகழ்பெற்ற 'மணி ஹெய்ஸ்ட்' சீரிஸ்ல இருந்து அப்படியே சுட்டு டிங்கரிங் பார்த்து 'பீஸ்ட்'னு ரிலீஸ் பண்ணிட்டாருன்னு நெட்டிசன்கள் கலாய்த்தார்கள். அதையெல்லாம் தியேட்டர்ல சகிச்சுக்கிட்டு பார்த்த ரசிகர்களுக்குத் தான் 'ஆஸ்கார்' விருது கொடுக்கணும். நெல்சனோட பழைய ஹிட் படங்கள்ல நடிச்ச அத்தனைப் பேரையும் கூட்டிட்டு வந்து மாலுக்குள்ள வச்சு நெல்சன் செஞ்ச இந்த 'டார்க் காமெடி' பரீட்சை, கடைசியில தளபதி ரசிகர்களுக்கு 'டார்க் நைட்மேர்' ஆகிடுச்சு. படம் ரிலீஸாகி சில வருஷம் ஆனாலும், இன்னமும் டிவில இந்த படம் போடும்போதெல்லாம், தளபதி ரசிகர்கள் சத்தம் போடாம ரிமோட்டை மறைச்சு வைக்கிறது தான் இப்போதைய நிதர்சனம்.

Read more about: beast பீஸ்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X