Comali Review: 90களுக்கு ஒரு காமெடி ட்ரிப் போகனுமா... ஜாலியா கைப்பிடித்து அழைத்து செல்லும் கோமாளி!

Rating:
3.0/5

Recommended Video

Comali Movie Audience Opinion

சென்னை: படத்தின் ஒன்லைன் ஏற்கனவே நமக்கு தெரிந்தது தான். 16 வருடங்கள் கோமாவில் இருந்துவிட்டு மீண்டெழும் ஜெயம் ரவி, இந்த உலகின் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார், அவரை இந்த உலகம் எப்படி கோமாளியாக பார்க்கிறது என்பது தான் படத்தின் கதைக்கரு.

ஜெயம் ரவி ஒரு 90ஸ் கிட். பிளஸ் 2 படிக்கும் அவர், தன்னுடைய பள்ளி தோழியான சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். ஒரு நாள், தன்னுடைய குடும்பத்தின் பாரம்பரிய சிலை ஒன்றை பரிசளித்து, கிரீட்டிங் கார்டு மூலம் காதலை சொல்கிறார்.

Comali review: A commercial entertainer with a need of the hour message

அப்போது ரவுடி பொன்னம்பலத்தை கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடி வரும் கே.எஸ் ரவிக்குமார், சம்யுக்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார். அவரை காப்பாற்ற போகும் போது ஜெயம் ரவிக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு போகிறார்.

ஒரு பெரிய பிரேக்... 16 வருடங்கள் நல்ல தூக்கத்தில் இருந்து எழுகிறார் ஜெயம் ரவி. இத்தனை வருடங்கள் தான் இழந்த வாழ்க்கையையும், நினைவுகளையும் அவர் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை நகைச்சுவையுடன், எமோஷன் கலந்து சுவாரஸ்யமாக சொல்கிறான் இந்த கோமாளி.

Comali review: A commercial entertainer with a need of the hour message

குழந்தைகள் கையில் இருந்து ஸ்மார்ட் போனை பிடிங்கிட்டு, தெருவுல போய் விளையாட விடுங்க என்பது தான் கோமாளி சொல்லும் செய்தி. ஆனால் அதை நியூஸ் ரீல் மாதிரி இல்லாமல், சுந்தர்.சி படம் போல சுவாரஸ்யமாக, கமர்சியலாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்நாதன். டிரெய்லர் போலவே படத்தையும் கலக்கலாக கொடுத்திருக்கிறார்.

பம்பரம், காத்தாடி, கோலி என 80, 90களில் பிறந்தவர்கள் விளையாடி அனுபவித்து ரசித்து, கோமாவில் தொலைத்த பல விஷயங்களை அழகாக மீட்டெடுத்திருக்கிறார். இன்றைய ஸ்மார்ட் போன் கால குழந்தைகளுக்கும், அன்றைய 90ஸ் கிட்சுக்கு இருக்கும் வேறுபாடுகளை மிக ஆழமாக காண்பித்திருப்பதற்காகவே இயக்குனருக்கு கைக்குலுக்கள்கள்.

Comali review: A commercial entertainer with a need of the hour message

பிரதீப் யோசித்த விஷயங்களை மிக அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்கூல் பையன், 35 வயது இளைஞன் என மிக துல்லியமாக வெரைட்டி காட்டுகிறார். அதுவும் கோமாவில் இருந்து மீண்டெழுந்தும், 12வது படிக்கும் மாணவனின் மனநிலையை காட்டும் அவரது நடிப்பு செம தூள். இதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்காகவே ஜெயம் ரவிக்கு தனி பாராட்டுகள். தங்கை தன்னை அவமானப்படுத்தும் காட்சியில் மிக முதிர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். சபாஷ் ஜெயம் ரவி.

கோகோ, பரியேறும் பெருமாள் படங்களுக்கு பிறகு யோகி பாபுவின் காமெடி இதில் தான் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கு. அதுவும் யோகி பாபுவை வெறும் காமெடியனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர நடிகராக உயர்த்தி இருக்கிறார் பிரதீப். ஒவ்வொரு கவுண்டர் டயலாக்கும் காமெடி சிக்ஸர்.

Comali review: A commercial entertainer with a need of the hour message

காஜல் அகர்வாலைவிட சம்யுக்தா ஹெக்டேவின் காதல் தான் க்யூட்டாக இருக்கிறது. இருந்தாலும் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தில் நடித்துவிட மாட்டோமா என காத்திருந்த காஜலுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கே.எஸ்.ரவிகுமார், ஷாரா உள்பட மற்ற நடிகர்களும் சிறப்பாக சம்பவம் செய்திருக்கிறார்கள்.

Comali review: A commercial entertainer with a need of the hour message

ஹிப்பாப் ஆதியின் இசையில், ஒளியும் ஒலியும் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம். 90களின் காலகட்டத்தையும் தற்போதை நவீன உலகையும் மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங் என தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்துமே சபாஷ் சொல்ல வைக்கிறது.

Comali review: A commercial entertainer with a need of the hour message

படம் மூன்று காலகட்டங்களில் பயணிக்கிறது. அதை எந்த குழப்புமும் இல்லாமல் தெளிவான திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிரதீப். ஆனால் இரண்டாம் பாதியில் குடும்பச் சிலை தேடுதல், திருட்டு பிளான் என திசைமாறி பயணக்கிறது கதை.

Comali review: A commercial entertainer with a need of the hour message

எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மனிதம் என்றும் மாறாது என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்த்வதற்காகவே சென்னை வெள்ளத்தை க்ளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அது படத்துடன் ஒட்ட மறுக்கிறது. தேவையில்லாத திணிப்பாகவே தெரிகிறது. இருப்பினும் அதில் சொல்லப்பட்டுள்ள மெசேஜ் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.

நல்ல கருத்தை சுவாரஸ்யமாக சொல்கிறான் இந்த கோமாளி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X