twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Comali: 'காமெடி கலவரம்... நச் க்ளைமாக்ஸ்.. இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவைப்படம்'.. கோமாளி விமர்சனம்!

    கோமாளி திரைப்படத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    |

    Recommended Video

    Comali Movie Audience Opinion

    சென்னை: கோமாளி திரைப்படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இப்படத்தின் டிரெய்லரில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி கோமாளி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

    இப்படம் குறித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

    வாடகை வீட்டில் வசிக்கு பைரவி தயாரிப்பாளர் கலைஞானம் - சொந்த வீடு வாங்கித்தரும் ரஜினி வாடகை வீட்டில் வசிக்கு பைரவி தயாரிப்பாளர் கலைஞானம் - சொந்த வீடு வாங்கித்தரும் ரஜினி

    சரியான எண்டர்டெயினர்

    "நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திருப்திகரமான அதிகாலை காட்சி. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை படத்தை நம்முடன் தொடர்ப்புப்படுத்திக் கொள்ள முடியும். ஜாலியாக ஆரம்பித்து, நல்ல கருத்துடன் முடியும் ஒரு சரியான எண்டர்டெயினர்" என இவர் கருத்து கூறியுள்ளார்.

    காமெடி கலவரம்

    "கோமாளி திரைப்படம் ஒரு காமெடி கலவரம். சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்து படத்தில் சொல்லப்பட்டுள்ளது. படக்குழு சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த ஆண்டில் சிறந்த காமெடி திரைப்படம்", என இவர் விமர்சித்துள்ளார்.

    பயந்தேன்

    "நான் ௯ட சகலகலா வல்லவன் மாதிரி ஆகிருமோன்னு பயந்தேன். ஆனல் காப்பாதீட்டிங்க இயக்குனர் பிரதீப். தலைவனுக்கு சூப்பரான கேரக்டர். ஜெயம் ரவி, யோகி பாபு காமெடி சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கு. முடிவில் ஒரு நல்ல மெசேஜ் சொல்லிருக்காங்க. 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்க்கான படம். நானும் ஒரு 90ஸ் கிட் தான்", என பாராட்டியுள்ளார் இவர்.

    க்ளைமாக்ஸ் சூப்பர்

    "கோமாளி பார்த்தேன். இயக்குனர் பிரதீப் தந்திருக்கும் செம படம். க்ளைமாக்ஸ் காட்சி சூப்பர். ஜெயம் ரவியின் நடிப்பையும், படங்களை தேர்ந்தெடுக்கும் அவரின் திறைமையையும் பாராட்ட வேண்டும். தளபதி பற்றி காட்சிகளுக்கு தியேட்டரே தெறிக்குது", என இவர் புகழ்ந்துள்ளார்.

    English summary
    Positive reviews started coming for Jayam Ravi's Comali movie. The fans are appreciating director Pradeep's work.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X