Conjuring Kannappan Blue Sattai Review: "அந்த கன்றாவி கதை” கன்ஜூரிங் கண்ணப்பன் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: சதீஷ், ரெஜினா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கன்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

கன்ஜூரிங் கண்ணப்பன் ப்ளூ சட்டை விமர்சனம்
சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள கன்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சதீஷுடன் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கன்ஜூரிங் கண்ணப்பன் படத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இந்தப் படத்துக்கு விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை, இது ஒரு கன்றாவியான கதை என வெளுத்து வாங்கியுள்ளார். அதாவது, இந்தப் படத்தோட கதைன்னு பார்த்தா இது ஒரு பேய் காமெடி படம். வழக்கமா இந்த மாதிரி படங்கள பார்க்கப் போறதா இருந்தா மூளைய கழட்டி பாக்கெட்டுல வச்சிட்டு போங்கன்னு சொல்வோம். அதேமாதிரி கதை என்னாவா இருக்கும்ன்னு சொன்னா... ஊருக்கு ஒதுக்குப் புறமா ஒரு பாழடைஞ்ச பங்களா இருக்கும்.
அது தேவை இருக்கோ தேவை இல்லையோ... அது உள்ள ஒரு நாலு பேர் போவாய்ங்க... அங்க ஒரு பேய் இருந்துகிட்டு அது இவங்கள பாடா படுத்தும். அந்த பேய்க்கும் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கும். அதுக்கப்புறம் என்னாச்சுங்குறது கதையா இருக்கும். அந்த கன்றாவி புடிச்ச கதைய தான் லட்சம்வாட்டி எடுத்துட்டாய்ங்கள... லட்சத்து ஓராவது வாட்டி எடுத்துருக்காய்ங்க.
இதே இடத்துல நாங்களும் நின்னுகிட்டு இதே கதைய ஒரு லட்சம் தடவ சொல்லிருக்கோம். இந்த கேமராவும் அங்க இருந்துட்டு கேப்சர் பண்ணிருக்கு. இந்த கேமராவுக்கு மட்டும் கை இருந்துருந்தா இந்நேரம் என்னைய ஓங்கி அப்பிருக்கும் என தனக்குத் தானே பங்கமாக ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்தப் படத்த எடுத்துவங்க மட்டும் இந்த கேமராகிட்ட மாட்டிருந்தா அதுவே விரட்டி விரட்டி அடிச்சிருக்கும்.
ஹோட்டல்ல சட்டி நிறைய மாவு வச்சிருந்து, அதுல கல் தோசை, நைஸ் தோசைன்னு சுட்டாலும் எல்லாமே ஒரே டேஸ்ட் தான். அப்படி இந்தப் படத்துல ஒரு ப்ளேவர் சேர்க்குறோம்ன்னு சொல்லிட்டு ட்ரீம் கேப்சர்ன்னு வச்சிருக்காங்க. ஆனா அத ஸ்க்ரீன்ல ஒர்க்அவுட் பண்ணல, அப்படி நடந்திருந்தா தியேட்டர்ல குபீர் சிரிப்பு கிளம்பிருக்கும். ஆனா இது வழக்கம்போல பேய் படமா வந்துருக்கு. டிடி ரிட்டர்ன்ஸ் படம் மாதிரியே எடுத்தாலும், அந்தப் படத்துல இருந்த காமெடி இதுல ஒர்க்அவுட் ஆகல.
இந்த மாதிரி ஒரு லட்சம் படம் வந்துடுச்சு, இதுல பேய் ஏரியாவும் ஒர்க்அவுட் ஆகல, காமெடியும் இல்ல. மொத்தத்துல ஒரே கதைய லட்சத்தி ஓராவது தடவையும் பார்ப்பேன்னு அடம் பிடிக்குற ரசிகர்கள் தாராளமா பாருங்க என, கன்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











