Conjuring Kannappan Review: டிரெய்லர் அளவுக்கு வொர்த்தா இருந்ததா? கான்ஜூரிங் கண்ணப்பன் விமர்சனம்!

Rating:
2.5/5

நடிகர்கள்: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
நேரம்: 2 மணி நேரம் 21 நிமிடங்கள்
இயக்கம்: செல்வின் ராஜ் சேவியர்
ரேட்டிங்: 2.5

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, எல்லி அவ்ராம், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன்.

சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி, யோகி பாபு வரிசையில் நாமும் ஹீரோவாகலாம் என தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சதீஷ்.

Conjuring Kannappan Review in Tamil

நாய் சேகர், ஓ மை கோஸ்ட் படங்களை தொடர்ந்து அவர் நாயகனாக நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் அவருக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்..

கான்ஜூரிங் கண்ணப்பன் கதை: சன்னி லியோன் உடன் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்த சதீஷ் இந்த முறை நானே வருவேன் பட நடிகை எல்லி அவ்ராம் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உடன் இந்த படத்தில் நடித்துள்ளார். கேம் ரெடி பண்ணுவதில் அதிக ஆர்வம் கொண்ட சதீஷ் ஒரு நாள் தெரியாத்தனமாக ட்ரீம் கேட்சர் எனப்படும் சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து அதில் உள்ள றெக்கையை பிய்த்து விடுகிறார். அதன் பின்னர் தூங்கினால் கனவு உலகத்தில் பேய் வீட்டில் மாட்டிக் கொள்ளும் சதீஷ் தன்னை போலவே தனது குடும்பத்தினரும் அதில் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

ஸ்க்ரீன்பிளே எப்படி?: கதைப்படி வித்தியாசமாக இருந்தாலும், படத்தின் ஸ்க்ரீன்பிளேவில் இயக்குநர் ரொம்பவே தடுமாறி உள்ளது தெளிவாக தெரிகிறது. சதீஷ் காமெடி வழக்கம் போல அவர் ஹீரோவாகி வருவதால் இந்த படத்திலும் எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த்ராஜ் தான் படத்தை காப்பாற்றுகின்றனர். சரண்யா பொன்வண்ணன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் மற்றபடி காமெடியும் வொர்க்கவுட் ஆகவில்லை, அந்த பேய் கதையும் பயமுறுத்தவில்லை.

பிளஸ்: புதிய கதைக்களம் படத்திற்கு பலமாக உள்ளது. காமெடி நடிகர்களின் பங்களிப்பு ஒரு சில இடங்களில் நல்லாவே கை கொடுத்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பக்க பலம். விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் பாஸ் மார்க் வாங்கி உள்ளன. சதீஷ் முந்தைய படங்களை விட இதில் நடிக்க முயற்சித்து இருக்கிறார்.

மைனஸ்: திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. பழக்கப்பட்ட பேய் காமெடி படமாகவே இந்த கான்ஜூரிங் கண்ணப்பனும் கடுப்பை கிளப்புகிறது. யுவன் இசையில் நல்ல பாடல்கள் இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு அந்த போர்ஷனிலும் ஏமாற்றம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X