D Block Twitter Review: அருள்நிதி நடிப்பு.. எருமை சாணி விஜய் இயக்கம்.. எப்படி இருக்கு டி ப்ளாக்?

சென்னை: எருமை சாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய்குமார் ராஜேந்திரா இயக்குநராக அறிமுகமாகி உள்ள டி ப்ளாக் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

டிமான்டி காலனி, கே 13 உள்ளிட்ட த்ரில்லர் படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருள் நிதியின் புதிய படம் தான் இந்த டி ப்ளாக்.

கல்லூரி ஹாஸ்டலில் நடக்கும் ஒரு அமானுஷ்ய கதையாக உருவாகி உள்ள இந்த டி ப்ளாக் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்த படம் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

அருள்நிதியின் டி ப்ளாக்

அருள்நிதியின் டி ப்ளாக்

யூடியூபர்கள் சினிமாவில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். எருமை சாணி எனும் யூடியூப் சேனலில் ஹரிஜாவுடன் நடித்து அசத்திய அதே விஜய் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். அருள்நிதிக்கு ஜோடியாக இந்த படத்தில் அவந்திகா மிஷ்ரா ஹீரோயினாக நடித்துள்ளார். கரு பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கெளஷிக் க்ரிஷ் பின்னணியை இசையையும் ரான் ஈதன் யோஹான் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளனர். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பு. டிமான்டி காலனி போல அருள்நிதிக்கு இன்னொரு த்ரில்லான படம் கிடைத்த நிலையில், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கவின் விமர்சனம்

பிக் பாஸ் பிரபலங்களான கவின், அக்‌ஷரா, முகேன் ராவ் மற்றும் யூடியூபர்கள் பலரும் இந்த படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்து பாராட்டி உள்ளனர். புதுமுக இயக்குநர் என்றெல்லாம் இல்லாமல், படத்தை டெக்னிக்கல் ரீதியாக ப்ரில்லியண்ட்டாக இயக்கியுள்ளார் விஜய்குமார் என தனது விமர்சனத்தை கூறியுள்ளார் நடிகர் கவின். அவரது வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி படத்திற்கு பூஸ்ட்டாக மாறி உள்ளது.

விஜய் மில்டன் வாழ்த்து

விஜய் மில்டன் வாழ்த்து

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் நடிகர் அருள்நிதியின் டி ப்ளாக் திரைப்படம் வெற்றிப் பெற வாழ்த்து கூறியுள்ளார். இன்று மாதவனின் ராக்கெட்ரி, அருண் விஜய்யின் யானை மற்றும் அருள்நிதியின் டி ப்ளாக் என மூன்று படங்கள் தியேட்டர்களில் மோதி உள்ளன. இதில், யார் மிகப்பெரிய வசூல் வேட்டையை அடைய போகிறது மற்றும் விமர்சன ரீதியாக எந்த படம் வெல்லப் போகிறது என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும் என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொண்டையை தொறந்துட்டு வந்துடுவானுங்க

தொண்டையை தொறந்துட்டு வந்துடுவானுங்க

யூடியூபர்கள் படம் இயக்கினால் மட்டும் விமர்சனமோ, ரோஸ்ட்டோ வராது. ஆனால், மற்ற இயக்குநர்கள் படம் எடுத்தால் தொண்டையை தொறந்துட்டு வந்துடுவானுங்க என டி ப்ளாக் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனத்தை விளாசி இருக்கிறார் இந்த நெட்டிசன். ஏகப்பட்ட யூடியூபர்களும் இந்த படத்தை பாராட்டியே பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X