மக்களை கவர்ந்திழுக்கும் அதிரடித் திரைப்படம் ‘‘தபங் 3“

Rating:
3.0/5
Star Cast: சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சுதீப்
Director: பிரபு தேவா

சென்னை : தபங் படத்தின் கடைசி பாகம் தான் இந்த தபங் 3. இதில் சிறுவயதில் ஹீரோ எப்படி போலீஸ் ஆனார். வில்லன்களை எப்படி அழித்தார் என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கு இந்த தபங் 3. வழக்கம் போல இந்த படத்திலும் சல்மானின் சிக்ஸ் பேக்கை காட்டும் காட்சி ரசிக்கும்படி உள்ளது.

இது தபங் வரிசையில் வரும் மூன்றாவது பாகம், ரசிகர்களுக்கு நன்கு அறிந்த கதை தான்,போலீஸ் அவரின் வாழ்க்கை சுற்றி நடக்கும் நிகழ்வே கதை. சல்மான் கான் கடந்த பாகங்களை போல தனது மனைவியுடன் ரோமான்ஸ் தனது தம்பியை அடிக்கடி தொந்தரவு செய்வதுமாக இருக்கிறார் மற்றும் ரவுடிகளை துவம்சம் செய்கிறார்.

Dabang movie review

சில பெண்களை பாலியல் வேலை செய்ய கடத்தி அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஒரு கும்பல் அழைத்து வருகிறது. இதை அறிந்த போலீஸ் நாயகனான சல்மான் கான் அவர்களை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலின் தலைவன் போலீஸ் அதிகாரியை பழிவாங்க துடிக்கிறான். படத்தின் முதல் பாகத்தில் சல்மான் கானின் சிறு வயது காலத்தை காட்டுகின்றனர், அவருக்கும் சாய்ய் என்பவருக்கும் நடக்கும் காதல் கதை தான் முதல் பாதி.

Dabang movie review

ஆங்காங்கே கைதட்டல் மற்றும் விசில் சத்தம் என்று படம் ரசிக்கும் அளவிற்கு உள்ளது. சல்மான் கான் சட்டையை கழற்றி தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டி வில்லன்களை துவம்சம் செய்யும் காட்சி ரசிகர்களை விசில் போடவைத்துள்ளது.

படத்தில் வரும் சண்டை காட்சிகள் ராவாக உள்ளன, மேலும் சல்மான் கானின் எண்ட்ரிக்கு வரும் சண்டை காட்சி தேவையில்லை என்று ரசிகர்களின் கருத்து. இப்படத்தை பார்க்கும் போது அடுத்த என்ன அடுத்த என்ன என்பதை அறிய முடிகிறது.

Dabang movie review

சல்மான் கான் அவரின் நடை, உடை பாவனை அனைத்தும் எப்பொழுதும் உச்சமே. காமெடியை படத்தில் உள்ளே திணித்தாகவே இருக்கிறது. இதுதான் படத்தின் ஒன்லைன் சூப்பர், ஆனால் திரைக்கதை அமைத்த விதம் சுமார். சுதிப் தனக்கு கொடுத்த வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். சுதிப் மற்றும் சல்மான் கான் மோதும் காட்சிகள் ரசிகர்களுக்கு டிரிட் ஆக அமைந்துள்ளது.

சோனாக்ஷி சின்ஹா முந்தைய பாகங்களை போல இதிலும் போலீஸ் அதிகாரியின் மனைவியாகவே வருகிறார், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து உள்ளார்.

Dabang movie review

சாய்ய் இளம்வயது சல்மான் கானின் காதலியாக நடித்துள்ளார், சாய்ய் இப்படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார். சல்மான் கானின் தம்பியாக வரும் ஆர்பாஸ் கான் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

Dabang movie review

படம் ரொம்ப இழுத்துக்கிட்டு போற மாதிரி இருக்கு படத்தை இன்னமும் கொஞ்சம் எடிட் செய்து இருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில் சல்மான் கான் படத்திற்கு தேவையான அனைத்தும் இப்படத்தில் உள்ளது. படம் கமர்ஷியால் ஆக அமைந்துள்ளது, படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி தான் திரைப்படத்தின் உச்சம். மொத்தத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் ஒரு அதிரடித் திரைப்படம் என்று சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X