For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Dagaalty Review : சந்தானம்- யோகி பாபு கவுன்டர் கலாயில் கலக்கும் டகால்டி

  By
  |

  Rating:
  3.0/5
  Star Cast: சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு, ராதா ரவி, சந்தான பாரதி
  Director: விஜய் ஆனந்த்

  சென்னை: திருச்செந்தூர் பெண்ணை மும்பைக்கு கடத்தும் அசைன்மென்ட்டை ஹீரோ அசால்டாக முடித்தாரா இல்லையா என்பதுதான், டகால்டி.

  மும்பையில், டகால்டி வேலை செய்யும் சந்தானமும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரு தொழில் தவறு காரணமாக, ராதாரவியிடம் மாட்டும் சந்தானம், தப்பிக்கும் முயற்சியில் அங்கு புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத் தனக்குத் தெரியும் என்று பொய் சொல்கிறார்.

  Dagaalty Public Opinion | Santhanam | Rithika Sen | Yogi Babu

  கோடீஸ்வர கிரியேட்டர் அசோக் சாம்ராட் கற்பனையாக வரைந்த அழகானப் பெண்ணின் ஓவியம் அது. அவருக்காக அந்தத் தோற்றம் கொண்டப் பெண்ணைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம்.

  அசைன்மென்ட்

  அசைன்மென்ட்

  அந்தப் பெண் கிடைத்தால், பத்து கோடி ரூபாய் என்கிற அசைன்மென்ட் ஹீரோ சந்தானத்துக்கு வருகிறது, இப்போது. அவர் அந்தப் பெண்ணை எங்கு கண்டுபிடித்து, எப்படி மும்பையில் சேர்க்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி, டிராவல், ஆக்‌ஷனோடு கலகலப்பாகச் சொல்லியிருக் கிறார்கள்.

  சிறுத்தை சிவா, அட்லீ

  சிறுத்தை சிவா, அட்லீ

  வழக்கம் போல சந்தானத்தின் கலாய் ஒன் லைனர்களில் களைகட்டுகிறது தியேட்டர். 'நீ இவ்ளோ பெரிய நடிகனாவேன்னு எதிர்பார்க்கலைடா' என்று யோகிபாபுவை வாங்குவதில் இருந்து, 'என் எய்மே அஜித் அல்லது விஜய்யை வச்சு படம் பண்ணி பெரிய டைரக்டர் ஆகறதுதான்' என்கிற ஹீரோயினிடம், 'அப்ப சிறுத்தை சிவா, அட்லீலாம் என்ன பண்ணுவாங்க?' என்றும் 'ஏழரை மணிக்கு வரலைன்னா, ஏழு நாற்பதுக்கு வருவேன்..' என அங்காங்கே சந்தானம் அடிக்கிற பஞ்ச், நச்.

  ஆக்‌ஷன் காட்சிகள்

  ஆக்‌ஷன் காட்சிகள்

  ராதாரவியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும்போதும், இயக்குனர் கனவில் இருக்கும் ஹீரோயினை அழைத்துகொண்டு அலையும் போதும், ஒவ்வொரு வில்லன்களிடமும் மாட்டி தவிக்கும்போதும் சந்தானம் நன்றாக நடிக்கிறார். அவரது ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் கெத்து. ஹீரோயின் ரித்திகா சென், அறிமுகம் என்று சொல்ல முடியாதபடி லூசு பொண்ணு கேரக்டரில் இயல்பாகப் பொருந்தி போகிறார்.

  ஷாருக்கானுக்கு கதை

  ஷாருக்கானுக்கு கதை

  அப்பாவியாக, ஊரில் சினிமா கனவில் இருப்பது, ஷாருக்கானுக்கு கதை சொல்ல போறோம் என்ற பொய்யை உண்மையென நம்பி கனவு காண்பது, தான் மாட்டிக்கொண்டது தெரிந்து கலங்குவது என கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார் ரித்திகா. பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கும் சவீதாவின் குரல் இவருக்கும் அபபடியே பொருந்துகிறது.

  பிரம்மானந்தம்

  பிரம்மானந்தம்

  வரும் இடங்களிலெல்லாம் சிரிப்பை வரவைக்கிறார் யோகிபாபு. அவரும் சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் செம. ராதாரவி வித்தியாசமான கெட்டப் போட்டு வில்லன் வேலை செய்கிறார். மெயின் வில்லன், தருண் அரோரா பிரமாண்டமாக அறிமுகமாகி, ஹீரோவின் கையால் சின்னபின்னமாகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பிரம்மானந்தம், பிரம்மாதானந்தம்.

  சிரிப்பு கிளைமாக்ஸ்

  சிரிப்பு கிளைமாக்ஸ்

  படத்தில் சந்தானபாரதி, ரேகா, ஸ்டன்ட் சில்வா, நமோ நாராயணன், மனோபாலா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். விஜய் நரேனின் பின்னணி இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது. யூகிக்க முடிகிற காட்சிகள், நம்ப முடியாத ஆக்‌ஷன் காட்சிகள் உட்பட சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் அந்த கடைசி 20 நிமிட சிரிப்பு கிளைமாக்ஸ், அதை அப்படியே மறக்கடித்து விடுவது படத்தின் பிளஸ்!.

  English summary
  சென்னை: திருச்செந்தூர் பெண்ணை மும்பைக்கு கடத்தும் அசைன்மென்ட்டை ஹீரோ அசால்டாக முடித்தாரா இல்லையா என்பதுதான், டகால்டி.மும்பையில், டகால்டி வேலை செய்யும் சந்தானமும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரு தொழில் தவறு காரணமாக, ராதாரவியிடம் மாட்டும் சந்தானம், தப்பிக்கும் முயற்சியில் அங்கு புகைப்படத்தில் இருக்கும் பெண்ணைத் தனக்குத் தெரியும் என்று பொய் சொல்கிறார்.கோடீஸ்வர கிரியேட்டர் அசோக் சாம்ராட் கற்பனையாக வரைந்த அழகானப் பெண்ணின் ஓவியம் அது. அவருக்காக அந்தத் தோற்றம் கொண்டப் பெண்ணைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம்.Santhanam's Dagaalty movie is a comedy mass masala
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X