Deadpool & Wolverine Review: ‘டெட்பூல் & வோல்வரின்’ விமர்சனம்.. தெறிக்கவிட்டதா? திணறவிட்டதா?

Rating:
3.5/5

நடிகர்கள்: ரியான் ரெனால்ட்ஸ், ஹியூ ஜேக்மன்
இசை: ராப் சைமன்சன்
இயக்கம்: ஷான் லெவி

சென்னை: எக்ஸ்மேன் படத்தில் பார்த்து வியந்த வோல்வரின் கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹியூ ஜேக்மன் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் முதன்முதலில் கசிந்தவுடனே டெட்பூலுடன் வோல்வரினா காம்பினேஷனே கலக்கலாக இருக்கே என ரசிகர்கள் கொண்டாடினர்.

லோகி வெப்சீரிஸ், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து மல்டிவெர்ஸ் கான்செப்ட்டை கசக்கி பிழிந்து விட்ட நிலையில், இந்த படத்திலும் லேடி டெட்பூல் முதல் நாய்க்குட்டி டெட்பூல், புட்டி பால் டெட்பூல் என ஏகப்பட்ட வேரியண்ட்ஸ் வந்துக் கொண்டே இருக்கின்றன.

Deadpool  amp amp  Wolverine  Review  Ryan Reynolds                            amp amp

இயக்குநர் ஷான் லெவி அந்த கொண்டாட்டத்தை எந்தளவுக்கு தியேட்டரில் படமாக கொண்டு வந்திருக்கிறார் என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

அடல்ட்ஸ் ஒன்லி: மார்வெல் மனமிறங்கி ஏ சான்றிதழ் படமாக இந்த படத்தை கொடுத்திருப்பதே இளைஞர்களுக்கு செம எண்டர்டெயின்மென்ட் தான். டெட்பூல் படங்களில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு ஏகப்பட்ட ஆபாச வசனங்கள் படம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. தயவு செய்து சூப்பர் ஹீரோ படம் என உங்கள் குழந்தைகளை எல்லாம் படத்திற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டாம். நண்பர்களுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணி பார்க்கும் படமாகவே இது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் டப்பிங்கிலும் சென்சார் கை வைக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளனர்.

டெட்பூல் அண்ட் வோல்வரின் கதை: தன்னுடைய உலகம் அழிவதை கூட கண்டுக்கொள்ளாத டெட்பூல் தனக்குப் பிடித்த நவகிரக நண்பர்கள் சேர்ந்து அழிவதை தடுக்க நினைக்கிறார். மார்வெலின் ஆண்டவரே நான் தான் என நினைத்துக் கொண்டு சுற்றும் டெட்பூலுக்கு ஒரு கட்டத்தில் வோல்வரின் தான் ரியல் காப்பான் என தெரிய வர, செத்துக் கிடக்கும் ஸ்டீல் எலும்புக் கூடு வோல்வரினில் இருந்து பல்வேறு வோல்வரின் வேரியண்ட்டுகளை தேடி அலைந்து ஒன்றுக்கும் உதவாத குடிகார வோல்வரினை கண்டுபிடிக்கிறார். மஞ்சள் நிற சூப்பர் ஹீரோ சூட்டில் செம மாஸாக வரும் வோல்வரின் டெட்பூலின் லட்சியத்திற்கு உதவினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

Deadpool  amp amp  Wolverine  Review  Ryan Reynolds                            amp amp

ஏகப்பட்ட ஏ ஜோக்ஸ்: டபுள் மீனிங் காமெடி எல்லாம் இல்லைங்க, டோட்டலாவே ஸ்ட்ரெயிட் மீனிங் காமெடி காட்சிகள் தான். டெட்பூலின் வாயை திறந்தாலே காதுகளில் தேன் வந்து பாய்கிறது என்பது போல முக்கிய உறுப்பை வைத்து அடித்துள்ள ஏ ஜோக்ஸ் டெட்பூல் வேரியண்டுகளுடன் அதிகமாகவே படத்தில் நிரம்பி வழிகிறது. ஆனால், அதே சமயம் ஒவ்வொரு ஜோக்கிற்கும் தியேட்டரே விழுந்து சிரிக்கும் அளவுக்கு அதை புத்திசாலித்தனமாக கையாண்டு இருக்கும் விதமும் தமிழ் டப்பிங் டீமுக்கும் தனி அப்ளாஸை கொடுத்து விடலாம். அடுத்து மார்வெல் ஆபாசக் காட்சிகளை வைக்காமல் இருந்தால் சரி.

ஆக்‌ஷன் அதகளம் எப்படி?: வோல்வரின் மற்றும் டெட்பூல் நடித்தால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வரமால் இருந்தால் எப்படி பாஸ் என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு எல்லாம் வெயிட் பண்ணவில்லை. ஒவ்வொரு வேரியண்டும் டெட்பூலை நொங்கெடுத்து அனுப்பும் காட்சிகளே ஆக்‌ஷன் அதகளம் தான். அதே போல அந்த மஞ்சள் சூட் போட்டுக் கொண்டு மாஸ் காட்டும் வோல்வரினும் காருக்குள் வைத்து டெட்பூலை குமுறு கஞ்சி காய்த்து விடுகிறார்.

ஸ்பெஷல் கேமியோ இருக்கா?: ஏகப்பட்ட ஸ்பெஷல் கேமியோக்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அளவுக்கு இந்த படத்தில் உள்ளன. ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் ஸ்பாய்லர் அலர்ட் பண்ணிடாதீங்க என கேட்டுக் கொண்ட நிலையில், டெட்பூல் போல தயாரிப்பு நிறுவனத்தை ஓட்டும் விதமாக ஸ்பாய்லர் அலர்ட் செய்து விடலாமா என்றும் தோன்றுகிறது. நாளைக்கு படம் வெளியானவுடனே சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் அதை தாராளமாக செய்து விடுவார்கள் என்பதால், முடிந்தவரை சீக்கிரமாக தியேட்டருக்குப் போய் படத்தை பார்த்துவிடுங்க, அதுவரை சோஷியல் மீடியா பக்கமே போக வேண்டாம்.

Deadpool  amp amp  Wolverine  Review  Ryan Reynolds                            amp amp

பிளஸ்: ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹியூ ஜேக்மனின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் கச்சிதமாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள், செட் வொர்க், பிஜிஎம், சிஜி வொர்க் என அனைத்துமே டாப் நாட்ச் லெவல் என்றே சொல்லலாம். குறிப்பாக படத்தின் ஹைலைட்டே காமெடி டயலாக்குகள் தான். ரியான் ரெனால்ட்ஸ் பெயரும் ரைட்டர் பெயரில் இடம்பெற்றிருப்பதால், மார்வெல், டிசி, 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் என விஜய் டிவி சம்பளம் கொடுக்கல என செல்ஃப் ட்ரோல் செய்வது போல இங்கேயும் செல்ஃப் ட்ரோல் காமெடிகள் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. அந்த குக் வித் கோமாளி காமெடியும் ரகளை தான்.

மைனஸ்: டெட்பூல் அண்ட் வோல்வரின் படத்தில் மைனஸ் என்றால் வெயிட்டான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பது தான் ரொம்பவே வருத்தத்தை கொடுக்கிறது. மூளைக்குள் கை விட்டு குடாய்ந்து என்ன நினைக்கிறோம். எதற்காக வந்திருக்கிறோம் என்பதை எல்லாம் கண்டு பிடிக்கும் அந்த வில்லன் கதாபாத்திரம் நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? என்றே புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு செய்யும் செயல்கள் கிளைமேக்ஸில் லேசாக இல்லை பயங்கர குழப்பமாகவே உள்ளது. இதற்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே என்று தான் எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் இந்த டெட்பூல் அண்ட் வோல்வரின் மார்வெல் ரசிகர்களுக்கு ஒரு தியேட்டர் கொண்டாட்டம் படம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X