Dear comrade: செம.. என்ன படம்ங்க இது.. ‘பாபி-லில்லி’யின் காதலைக் கொண்டாடும் ரசிகர்கள்!

விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Recommended Video

Dear Comrade Movie Public Opinion | 'டியர் காம்ரேட்' செமயா இருக்கு.. மக்கள் கருத்து

சென்னை: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள டியர் காம்ரேட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குனர் பரத் கம்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ருதி ராமசந்திரன், ராவ் ரமேஷ், அனிஷா குருவில்லா, ரகு பாபு, சுகன்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இப்படத்தின் இசையமைப்பாளர்.

விஜய் தேவரகொண்டா:

டியர் காம்ரேட் படம் குறித்து டிவீட் செய்துள்ள விஜய் தேவரகொண்டா, " காம்ரேடுகளுக்கான நாள் வந்துவிட்டது. உறவுகள், உணர்வுகள், பயணம் மற்றும் பாபி - லில்லியின் வளர்ச்சியை போய் அனுபவியுங்கள். ஒரு குழுவாக எங்களுக்கு இன்றைய தினம் உணர்வுப்பூர்வமான நாள்", என குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை:

படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், "டியர் காம்ரேட் ஒரு பயணம். இதில் நானும் பங்கெடுத்தது பெருமை. பாபிக்கும் லில்லிக்கும் இடையிலான உறவு எங்களுக்கு பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். அதை அனுபவித்து காதலை பரப்புங்கள்", எனக் குறிப்பிட்டுள்ளார்.

காம்ரேட் வேணும்:

"என்னப் படம்ங்க இது. ஆமா.. நிச்சயமா ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காம்ரேட் வேணும். என்னுடைய காம்ரேட் எனது அப்பா. லவ் யூ அப்பா. உங்கள மிஸ் பண்றேன்", என இவர் தெரிவித்துள்ளார்.

ரொம்ப ஸ்லோ:

"டியர் காம்ரேட் படத்தின் கதை சிறப்பாக உள்ளது. ஆனால் அதை சொன்ன விதம் மிகவும் ஸ்லோ. ஆவரேஜ் படம் தான். என்னுடைய மதிப்பெண் 5க்கு 2.2" என இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X