For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dear Comrade Review: ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு காம்ரேட் நிச்சயம் வேணும்... டியர் காம்ரேட்..!

|
Dear Comrade Movie Public Opinion | 'டியர் காம்ரேட்' செமயா இருக்கு.. மக்கள் கருத்து

Rating:
3.0/5
Star Cast: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தண்ணா, ஜெயப்பிரகாஷ், ராவ் ரமேஷ், அனிஷ் குருவில்லா
Director: பாரத் கம்மா

சென்னை: நம் வீட்டு பெண்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனும் கருத்தை காதலின் மூலம் உரக்கச் சொல்கிறது டியர் காம்ரேட்.

தமிழில் தூத்துக்குடி தான் கதைக்களம். கல்லூரி மாணவரான விஜய் தேவரகொண்டா ஒரு காம்ரேட். அதாவது எதற்கும் அஞ்சாத ஒரு போராளி. அதனாலேயே ஸ்டூடன்ஸ் யூனியன் தலைவராக செயல்பட்டு வருகிறார். எதற்கெடுத்தாலும் அடிதடி தான். இதனால் ஊரில் உள்ள அரசியல்வாதிகள் உள்பட பெரும்புள்ளிகளின் பகைக்கு ஆளாகிறார்.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

கிரிக்கெட் பிளேயரான ராஷ்மிகா தனது உறவினர் திருமணத்துக்காக தூத்துக்குடி வருகிறார். அவர் மீது காதலில் விழுகிறார் விஜய். ஆனால் விஜய்யின் காதலை முதலில் ஏற்க மறுக்கும் ராஷ்மிகா, பின்னர் அவரை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பிக்கிறார். மழை மாலை நேர காதல் கவிதையாய் வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கும் வேளையில், விஜய்யின் முரட்டு குணம் அவருடைய காதலை முறிக்கிறது.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

விஜய்யும் - ராஷ்மிகாவும் பிரிகிறார்கள். அதற்கு பிறகு தான் விஜய் ஒரு உண்மையான காம்ரேட்டாக மாறுகிறார். ராஷ்மிகாவை ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து மீட்கிறார். அது என்ன என்பதே டியர் காம்ரேட் சொல்லும் வலுவான சேதி.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

எந்த துறையாக இருந்தாலும், பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பாலியல் தொல்லைகள். ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்றால், அதற்காக மேலதிகாரியிடம் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே முடியும் எனும் நிலைதான் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலவுகிறது. அதை உடைக்க, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காம்ரேட் நிச்சயம் வேண்டும் என்கிறார் இந்த டியர் காம்ரேட்.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

நல்ல கருத்து தான் ஆனால் அதை நீண்டடடட.... பயணமாக, 3 மணி நேர படமாக சொல்லியிருப்பது தான் பிரச்சினை. காட்சிகள் விறுவிறுப்பாக நகர வேண்டும் என நினைக்கும் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம், இவ்வளவு நிறுத்தி நிதானமாக மெசேஜ் சொல்லியிருக்க வேண்டாம். இடைவேளை வரும் போதே ஒரு முழு படம் பார்த்த உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. எனவே இரண்டாம் பாதியில் பொறுமை பறிபோகிறது.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

'இம்கி இம்கி காவாலே' விஜய் தேவரகொண்ட - ராஷ்மிகா ஜோடியின் கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது. ப்ப்பா... ராஷ்மி நீங்க எவ்வளவு க்யூட் தெரியுமான்னு ஜொல்லுவழிய வைத்துவிடுகிறார் நம் இளசுகளை. ஆனால் தியேட்டரைவிட்டு வெளியே போகும் போதும் நாமும் ஒரு காம்ரேடாக மாறவேண்டும் எனும் எண்ணத்தை தான் பசங்க மனதில் விதைக்கிறது படம். அதுதான் டியர் காம்ரேடின் வெற்றி.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

எத்தனையோ காதல் படங்களை நாம் பார்த்துவிட்டோம். இருந்தாலும் இந்த காதலும் நம்மை ரசிக்க தான் வைக்கிறது. காதலை கவிதையாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாரத் கம்மா. கண்டதும் காதல் என்றில்லாமல், ராஷ்மி மீது விஜய் காதலில் விழும் அந்த தருணம் முதிர்ச்சியான காதல் அனுபவம்.

டியர் காம்ரேட் ஒரு வாழ்க்கை பயணம். அதை அனுபவித்தால் மட்டுமே படத்தை முழுமையாக நம்மால் உணர முடியும். நாற்பது வயதை கடந்த எந்தவொரு ஆணுக்கும் இந்த கதை ஒட்டறது கடினம். ஆனால் இளமை ததும்ப, நெஞ்சை நிமிர்த்தி, முரட்டுகாளையாக திரியும் இளவட்ட பசங்களுக்கு இந்த காம்ரேட் ரொம்பவே டியராகிவிடுவார். பொண்ணுங்களுக்கும் தான்.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரையும் ஆடியன்ஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு காட்சியும் நிறுத்தி நிதானமாக செல்கிறது. காதலை, அன்பை, வலிமையை, உண்மையான போராட்டம் எது என்பதை புரியவைப்பதற்காக கதையோட்டத்தை மெதுவாக நகர்த்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அது தான் படத்தின் பிரச்சினையும் கூட. நிற்கக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில், பொறுமை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது என்பதை படக்குழு உணர்ந்திருக்க வேண்டும்.

விஜய் தேவரகொண்டா ஒரு சர்ப்ரைஸ் ஆக்டர். காதல், ஆக்ஷன், கோபம், ரொமான்ஸ் என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார். அசால்ட்டான அவருடை மேனரிசம் தான் யூத்களை இழுக்கும் மேக்னட். முந்தைய படங்களை போலவே இதிலும் கலக்கியிருக்கிறார்.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

விரசமில்லாத அந்த கண்கள், வெள்ளந்தியான சிரிப்பு, பக்கத்துக்கு வீட்டு பொண்ணு போல உருவம்... வாவ்... ராஷ்மிகா... என்னா க்யூட்ப்பா இந்த பொண்ணு. தமிழ்நாட்ல சீக்கிரமா ராஷ்மிக்கு ஒரு ஃபேன் கிளப் ஆரம்பிச்சுடுவாங்க நம்ம பசங்க. இம்கி இம்கி ராஷ்மி காவாலே..!

இவங்க ரெண்டு பேரை தவிர படத்துல வேறு யாரும் பெரிசா மனசுல நிக்கல. ராஷ்மிகயோட அக்கா, அப்பா, வில்லன், விஜய்யின் நண்பர்கள் என எல்லாருமே செம ஃபிட். நிறைய கேரக்டர்ஸ் இருந்தாலும் விஜய் - ராஷ்மியை தாண்டி வேறு யாரையும் பற்றி பேச தோனல.

Dear Comrade review: A beautiful love stroy with a strong message

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு ஆப்டா சூட்டாகியிருக்கு. தமிழில் மெதுவாக பாடல்கள் ஹிட்டாகும். பின்னணி இசையில் உண்மையிலேயே கலக்கி இருக்கிறார் ஜஸ்டின்.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு பல லேண்ட்ஸ்கேப்புகளை அழகாக படம் பிடித்திருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் விஜய் தேவரகொண்டாவின் பயணக் காட்சிகள் எல்லாம் கவிதையாய் திரையில் தோன்றுகிறது. சுஜித் எடுத்தக்காட்சிகளை வீணாக்கக்கூடாது என்பதற்காக அப்படியே வைத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீஜித். அதனால் படம் நீநீநீநீநீளமாகிவிட்டது.

உண்மை தான்... ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு காம்ரேட் அவசியம் வேணும்!

English summary
The bilingual movie Dear Comrade starring Vijay Devarakonda, Rashmi Mandana in lead roles is beautiful, peotic love story with a strong message.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more