Dear Review: டியர் விமர்சனம்.. இந்த வாரமாவது ஜி.வி. பிரகாஷுக்கு வெற்றி கிடைக்குமா?.. படம் எப்படி?

Rating:
2.5/5

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

நேரம்: 2h 14m

இயக்கம்: ஆனந்த் ரவிச்சந்திரன்

சென்னை: ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து இந்த வாரமும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் படம் வெளியாகிறது என்பதே அவருக்கு மிகப்பெரிய நெகட்டிவிட்டியை உருவாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே போல ரசிகர்களை கஷ்டப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷும் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடித்துள்ள நிலையில், இந்த படம் நல்லா இருந்தால் கூட ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்களா? என்பது பெரிய கேள்வி தான்.

படத்தின் கதையும் அப்படியே மணிகண்டன் நடித்து வெளியான குட் நைட் படத்தில் இடம்பெற்ற குறட்டை படத்தின் கதை. காதல், ஆக்‌ஷன் படங்கள் வந்துக் கொண்டு தானே இருக்கிறது. அதே போலத்தான் குறட்டை என்பது ஒரு ஜானர். அதில், இன்னொரு படம் வந்தால் என்ன தவறு என்றும் இந்த படம் குட் நைட் படத்துக்கு முன்பாக 4 வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பித்து விட்டோம் என்றெல்லாம் பேட்டியில் விளக்கம் கொடுத்தாலும், ரசிகர்கள் இந்தப் படத்தை குட் நைட் படத்துடன் தான் கம்பேர் செய்து பார்ப்பார்கள்.

Dear Review in Tamil  Aishwarya Rajesh awsome performance only saves the film

அதையும் தாண்டி ஆனந்த் ரவிச்சந்திரன் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், இளவரசு, நந்தினி மற்றும் ரோகிணியை வைத்து மேஜிக் செய்தாரா அல்லது குறட்டை விட்டாரா? என இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

டியர் கதை: சின்னதா ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜுன் (ஜி.வி. பிரகாஷ்) லேசா சத்தம் கேட்டாலும் எழுந்து விடும் பழக்கம் கொண்டவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். அதன் காரணமாகவே திருமணம் லேட்டாகி வருகிறது. பெரிய சேனலில் வேலைக்கு செல்ல வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், தூங்க கூட முடியாமல் ஒரு கட்டத்தில் தனது வேலையையே இழக்கிறார். இதற்கு மேல் செட்டாகாது என நினைக்கும் அவர் தீபிகாவிடம் டைவர்ஸ் கேட்க, அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் டியர் படத்தின் கதை.

Dear Review in Tamil  Aishwarya Rajesh awsome performance only saves the film

படம் எப்படி இருக்கு?: குட் நைட் படத்துடன் இந்த படத்தை எந்தளவுக்கு கம்பேர் செய்து ஓட்ட முடியுமோ சோஷியல் மீடியாவில் பலரும் ஓட்டி விட்டார்கள். தனியாக டியர் படம் எப்படி இருக்கு என்பதை மட்டும் இங்கே பார்க்கலாம். செத்தும் ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த ரவிச்சந்திரன் ஃபீல் குட் மூவியை கொடுக்கவே முயற்சி செய்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் படங்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த படத்திலும் அவரது நடிப்பில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் தெரியாமல் இருப்பது பிரச்சனையை கிளப்புகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் செம போல்டாக இந்த படத்திலும் ஹீரோ யாரா இருந்தாலும் தூக்கி சாப்பிட்டு தனது நடிப்பை வெளிப்படுத்தும் வேலையை பார்த்துள்ளார்.

பிளஸ்: குட் நைட் படத்தை விட புரொடக்‌ஷன் வேல்யூ இந்த படத்தில் நல்லாவே தெரிகிறது. ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷை தாண்டி காளி வெங்கட் மற்றும் பிளாக்‌ஷீப் யூடியூப் புகழ் நந்தினியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரோகிணி, இளவரசு உள்ளிட்டோர் தங்கள் தேர்ந்த நடிப்பை அளவாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர். பின்னணி இசை படத்திற்கு பலம். கணவன் - மனைவி உறவின் ஆழத்தையும் அர்த்தத்தையும் இந்த படமும் பாடம் எடுத்திருக்கிறது.

மைனஸ்: 'குட் நைட்' படத்துக்கு முன்னதாக இந்த படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் இது சூப்பர் ஹிட் அடித்திருக்கும். இரண்டாம் பாதியில் எடிட்டர் இரக்கமின்றி சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X