Demonte Colony 2 Review: டிமான்ட்டி காலனி 2 பிரபலங்கள் விமர்சனம்.. சந்தோஷத்தில் பிரியா பவானி சங்கர்!
சென்னை: டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கிய இமைக்கா நொடிகள் திரைப்படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. கடைசியாக சியான் விக்ரமை வைத்து அவர் இயக்கிய கோப்ரா பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.
அதன் பின்னர் மனமுடைந்து போன அஜய் ஞானமுத்து தனக்கு முதன் முதலில் அறிமுகத்தையும் வெற்றியையும் கொடுத்த டிமான்ட்டி காலனி படத்தை கையில் எடுத்து அருள்நிதியை வைத்தே அதன் 2ம் பாகத்தை அட்டகாசமாக செய்துள்ளார்.

அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை நேற்று பிவிஆர் தியேட்டரில் பார்த்த சினிமா பிரபலங்கள் அந்த படத்துக்கு கொடுத்துள்ள விமர்சனம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
சிவகுமார் விமர்சனம்: ஒரே வார்த்தையில சொல்ல வேண்டுமென்றால் படம் எக்ஸ்ட்ராடினரி என நடிகர் சிவகுமார் தனது நெத்தியடி விமர்சனத்தை கொடுத்துள்ளார். அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கண்டிப்பாக தியேட்டரில் இந்த படத்தை பார்க்கலாம் என்றார்.
அருண்பாண்டியன் நடிச்சிருக்காரு: நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் படத்தை பார்த்து விட்டு பாராட்டினர். மேலும், என்னோட அப்பா அருண் பாண்டியன் ரொம்ப நாள் கழித்து இந்த படத்தில் நடித்துள்ளார் என கீர்த்தி பாண்டியன் கூறினார். உடனே மைக் அருகே வந்த அருண் பாண்டியன் இந்த படத்தில் நான் நடித்துள்ளேன். என் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் ரொம்பவே பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
அதுல்யா ரவி முதல் அர்ச்சனா வரை: அதுல்யா ரவி, தான்யா ரவிச்சந்திரன், மம்தா மோகன்தாஸ் பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பல நடிகைகள் இந்த படத்தை பார்த்து விட்டு செம ஹாரர் த்ரில்லர் படமாக டிமான்ட்டி காலனி 2 உருவாகி இருக்கிறது. கண்டிப்பாக நிறைய ஜம்ப் ஸ்கேர் காட்சிகள் ரசிகர்களை தியேட்டரில் மிரட்டி விடும். அஜய் ஞானமுத்து ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியுள்ளார். அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு அட்டகாசம். முதல் பாகத்துடன் கனெக்ட் செய்துள்ள இடமும் சரியாக கனெக்ட் ஆகி ரசிகர்களை படத்திற்குள் கொண்டு சென்று விடுகிறது. சிஜிஐ காட்சிகளும் தரமான மேக்கிங் உடன் உருவாக்கப்பட்டுள்ளது படத்திற்கு கூடுதல் பலம் என தங்கள் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

பிரியா பவானி சங்கர் ஹேப்பி: கடைசியாக படத்தின் தயாரிப்பாளர் பிரியா பவானி சங்கருடன் வந்து இந்த படத்தில் இவங்களோட பர்ஃபார்மன்ஸ் வேறலெவலில் இருக்கு என சொல்ல ரொம்பவே ஹேப்பியாகி விட்டார் பிரியா பவானி சங்கர். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ரத்னம் மற்றும் இந்தியன் 2 படங்கள் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், இந்த படம் பிரியா பவானி சங்கருக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருள்நிதி ஹேண்ட்ஸம் ஹீரோ: தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இளம் நடிகர்களில் ரொம்பவே ஹேண்ட்ஸம் ஹீரோவாக அருள்நிதி அசத்துகிறார் என நடிகர் ஜான் விஜய் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், படம் தரமான சம்பவமாக வந்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











