Devara Review: தேவரா விமர்சனம்.. தேஞ்சிப்போன ரெக்கார்டு.. அதே பழைய பழிவாங்கல் கதை.. பாவம் என்டிஆர்!

Rating:
2.5/5

நடிகர்கள்: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான்
இசை: அனிருத்
இயக்கம்: கொரட்டலா சிவா

சென்னை: இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள தேவரா திரைப்படம் உலகம் முழுவதும் ஏகப்பட்ட திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்திய அளவுக்குக் கூட எந்தவொரு பெரிய பட்ஜெட் படங்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது தேவரா படத்திலும் கண்கூடாக தெரிகிறது.

devara  review  jr ntr

க்ரீன் மேட், சிஜி, மெகா பட்ஜெட் என காசை வாரி இரைத்திருந்தாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் கொரட்டலா சிவா கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டு விட்டார் என்பது தான் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை முதல் நாளிலேயே கடுப்பாக்கியுள்ளது. தேவரா படத்தின் நிறை மற்றும் குறைகள் குறித்து தெளிவாக இந்த விமர்சனத்தில் முழுமையாக பார்க்கலாம் வாங்க..

தேவரா கதை: சரக்கு கப்பல்களில் கொள்ளையடிக்கும் கூட்டத்தை சேர்ந்த நபராக தேவரா எனும் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முருகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள முரளி ஷர்மாவுக்கு கடத்தல் பொருட்களை தனது கூட்டத்தினருடன் சேர்ந்து விற்று சட்ட விரோத பிசினஸ் செய்து வருகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் இதெல்லாம் தவறு என்பதை அறிந்துக் கொள்ளும் தேவரா அந்த தொழிலை கை விடுகிறார். ஆனால், தேவராவின் கூட்டத்தில் இருக்கும் பைரா (சைஃப் அலி கான்) அதனை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும் கடைசியில் என்ன ஆகிறது என்பதும் தான் இந்த தேவரா படத்தின் கதை. 1970களில் நடக்கும் கதையாக ஃபிளாஷ்பேக்கிற்குள் ஃபிளாஷ்பேக் வைத்தெல்லாம் இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார்.

படம் எப்படி இருக்கு?: வழக்கம் போல ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் டபுள் ஆக்‌ஷனில் தனது சிறப்பான நடிப்பால் மிரட்டி எடுத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் அவருடைய வைப் வேறெலெவலில் திரையை தீப்பிடிக்க வைக்கிறது. ஆனால், அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு கதை நகராமல் ஒரே இடத்தில் உருண்டுக் கிடப்பது தான் பெரிய ஏமாற்றமாகி விடுகிறது.

ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் மற்றும் ஹீரோயின் ஜான்வி கதாபாத்திரமோ வலுவாக எழுதப்படவில்லை. கமர்ஷியல் மசாலாக்களை தேவையில்லாமல் படம் முழுவதும் கொரட்டலா சிவா வழக்கத்தை விட கூடுதலாகவே இந்த படத்தில் தூவி இருக்கிறார். பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் வெறும் பில்டப்புக்காகவே பயன்படுகிறது.

devara  review  jr ntr

பிளஸ்: அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு தான் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடிக்கிறது. அண்டர்வாட்டர் சீக்வென்ஸ், ரத்னவேலுவின் ஒளிப்பதிவு எல்லாமே தரமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை படத்திற்கு பெரியளவில் பலம் சேர்க்கவில்லை.

மைனஸ்: முதல் பாதியை விட 2ம் பாதி படம் எங்கே எதை நோக்கி நகர்கிறது என்றே புரியவில்லை. அதிகப்படியான கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகும் இயக்குநர் எந்தவொரு கதாபாத்திரத்துக்கும் ஆழமாகவோ அழுத்தமாகவோ திரைக்கதையை வடிவமைக்காதது தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அந்த ஆயுத பூஜை பாடல் உள்ளது. ஜான்வி கபூர் ரசிகர்களுக்கு சுட்டாமல்லி பாடலும் கை கொடுத்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான வரா என்கிற லீடும் ரசிகர்களை சோதிக்கத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X