For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Devi 2 Review: இப்போ ஒண்ணுல்ல ரெண்டு... கான்ட்ராக்ட் போட்டு கபடியாடும் பேய்கள்... தேவி 2! விமர்சனம்

  |
  Devi 2 Movie Review: தேவி 2 படம் எப்படி இருக்கு மக்கள் கருத்து- வீடியோ

  Rating:
  2.5/5
  Star Cast: பிரபு தேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, ஆர் ஜே பாலாஜி
  Director: ஏ எல் விஜய்
  சென்னை: தனது நிறைவேறா காதல் ஆசையை தீர்த்துக் கொள்ள இரண்டு பேய்கள் போடும் கான்ட்ராக்ட் தான் தேவி 2.

  தேவி முதல் பாகத்தின் க்ளைமாக்சில் இருந்து ஆரம்பமாகிறது தேவி 2. முந்தைய பாகத்தில் குடியிருக்கும் மும்பை வீட்டில் ரூபியின் அட்டூழியம் மீண்டும் ஆரம்பமாகிவிடுமோ என்ற அச்சம் பிரபுதேவாவை ஆட்டுவிக்கிறது. இதனால் தனது குழந்தையை மாமனார், மாமியாருடன் ஊருக்கு அனுப்பி வைத்து, ஒரு ஜோசியக்காரரின் ஐடியா படி, மொரிசியஸ் நாட்டுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, தமன்னாவுடன் அங்கு செல்கிறார் பிரபு தேவா.

  Devi 2 review: A comeback performance by the movie team

  ரூபியின் ரெக்கமண்டேஷன் படி, அங்கு சுற்றித் திரியும் இரண்டு பேய்கள் பிரபுதேவா உடம்புக்குள் புகுந்துகொள்கின்றன. இந்த விஷயம் தமன்னாவுக்கு தெரிய வருகிறது. தங்களுடைய நிறைவேறாத காதல் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தமன்னாவுடன் கான்ட்ராக்ட் போடுகின்றன இரண்டுபேய்களும். அப்புறம் நடக்கும் லகலக ஆட்டம் தான் தேவி 2.

  முதல் பாகத்தில் ஒரு பேய். இந்த பாகத்தில் இரண்டு பேய். தேவியின் கதை களம் மும்பை. தேவி 2வின் கதை களம் மொரிசியஸ். அந்தப் படத்தில் தமன்னாவுக்கு பேய் பிடிக்கும். பிரபு தேவாவுடன் பேய் கான்ட்ராக்ட் போடும். இந்த படத்தில் உல்டாவாக பிரபுதேவாவுக்கு பேய் பிடிப்பதால், தமன்னா ஒப்பந்தம் போடுகிறார். அவ்வளவு தான் வித்தியாசம். மற்றப்படி இரண்டும் ஒன்றும் தான்.

  Devi 2 review: A comeback performance by the movie team

  பேயை காட்டாமல் பேய் படம் எடுப்பது எப்படி என்று இயக்குனர் விஜய்யிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அந்தளவிற்கு இருக்கு ஆனா இல்லை என்ற அளவில் பேய் வந்து போகிறது. பேயைக் காட்டா காமெடி தான் படத்தின் மையம் என முடிவு செய்துவிட்ட பிறகு லாஜிக் எல்லாம் எதுக்கு. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கலகலப்பாக நகர்கிறது படம். குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படம் கட்டாயம் பிடிக்கும்.

  பிரபு தேவாவுக்கு முகத்தில் தான் வயசு தெரிகிறது. மற்றப்படி தான் ஒரு கிங் ஆப் டான்ஸ் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். கிருஷ்ணா, அலெக்ஸ், ரங்கா ரெட்டி என மூன்று ரோல்களையும் சூப்பராக செய்து, அசத்துகிறார். மாஸ்டரின் ரசிகாஸ்க்கு நிச்சயம் பிடிக்கும்.

  Devi 2 review: A comeback performance by the movie team

  போன படத்தில் பிரபு தேவா செய்ததை, இந்தப் படத்தில் தமன்னா செய்து அசத்தி இருக்கிறார். காமெடி, சோகம், கோபம், கிளாமர் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக அந்த ஒரு பாட்டு போதும், ரசிகர்கள் முழு திருப்தியோட வீட்டுக்கு போவாங்க.

  Devi 2 review: A comeback performance by the movie team

  நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் வரும் ரோலில் நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. கிளாமர், டான்ஸ் என கலக்கியிருக்கிறார். அதேபோல் மூன்றாவது ஹீரோயினாக வரும் டிம்பிளும் நல்ல அறிமுகம்.

  தமன்னாவுடன் சேர்ந்து காமெடி செய்திருக்கிறார் கோவை சரளா. காஞ்சனா அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஒர்க்கவுட் ஆகியுள்ளது. கொஞ்ச நேரமே வந்தாலும், சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறார் ஆர்ஜே பாலாஜி. அஜ்மல் உள்பட வில்லன் கும்பலில் வரும் அனைவரும் செம பிட்.

  Devi 2 review: A comeback performance by the movie team

  சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் எல்லாமே ஆட்டம் போட வைக்குது. ரொம்ப பயமுறுத்தாம சாஃப்டாக பின்னணி கோர்த்திருக்கிறார். அதனால் பயப்படாம படம் பார்க்கலாம்.

  அயனங்கா போசின் கேமரா மொரிசியஸ் தீவை மிக அழகா படம் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு பிரேமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு. ஆண்டனியோட எடிட்டிங் படத்தை போரடிக்காமல் கொண்டு போகுது.

  முதல் பாகத்தில் ஒர்க்கவுட் ஆனதால, நிறைய காட்சிகளை அப்படியே வெச்சிருக்கார் இயக்குனர். ஆனால் ரிப்பீட்டடா பாக்கும் போது, அது சலிப்பையே ஏற்படுத்துது. ஆர்ஜே பாலாஜிக்கு இன்னும் கொஞ்சம் அதிக ஸ்பேஸ் கொடுத்திருந்தா, காமெடி நிறைய கிடைத்திருக்கும்.

  தேவி 2 பெருசா சந்தோஷப்படுத்தனாலும், ஏமாற்றத்தை கொடுக்கல.

  English summary
  The tamil movie Devi 2, sequel of Devi, starring Prabhudeva, Tamanna, directed by AL Vijay is a complete family entertainer.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X