வெற்றிமாறன் செஞ்சிட்டார்.. தனுஷ் வெறித்தனம் இல்ல அசுரத்தனம்.. அசுரன் நெட்டிசன்ஸ் ரிவ்யூ!
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது அசுரன் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு காலையில் இருந்து நன்றாக ரிவ்யூ வெளியாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது அசுரன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
என்ன விமர்சனம்
இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனம் இணையத்தில் வெளியாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். முதல்காட்சி பார்த்த விமர்சகர்கள் எல்லோரும் நன்றாகவே விமர்சனம் செய்து வருகின்றனர்.
செம பாஸ்
இவர் முதல் பாதி செமையாக இருக்கிறது. வெறித்தனமான இண்டர்வல். இரண்டாவது பாதி எப்படி இருக்கும் என்று காத்து இருக்கிறோம், என்றுள்ளார்.
பிளாக்பஸ்டர்
இவர், படத்தின் முதல் பாதி முடிந்துவிட்டது. மரணமாக இருக்கிறது. படத்தின் இரண்டாவது பாதிக்காக காத்து இருக்கிறோம். அதுவும் நன்றாக இருந்தால், இந்த படம் பிளாக்பஸ்டர் ஆகிவிடும், என்றுள்ளார்.
எப்பா என்ன இது
இவர் எப்பா என்ன இண்டர்வல்டா இது.. அசுரன் வந்துட்டான் , என்று டிவிட் செய்துள்ளார்.
தனுஷ் மொழி
திருநெல்வேலி பாஷ மனுஷன் கெத்து காட்டிருக்காரு😍🔥ஆக்டர் தனுஷ் ஜெயிச்சிட்டார்👌 ரசிகர்களுக்கு இது ஒரு தரமான ட்ரீடா இருக்கும், என்று இவர் கூறியுள்ளார்.
செம
இவர் இந்த படம் மூலம் தனுஷிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும். அதிலும் இண்டர்வல் காட்சி செம. அதில் அவரின் மாற்றம் சூப்பர். ஜிவி பிரகாஷ் இசை படத்தில் செம, அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு இதையே செய்யலாம், என்றுள்ளார்.
எபிக் படம்
வெற்றிமாறன் மீண்டும் ஒரு எபிக் படத்தை கொடுத்து இருக்கிறார்.
என்ன விமர்சனம்
இவர், முதல் பாதி செம., தனுஷ் இப்படி ஒரு படத்தில் நடிக்க பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். இண்டர்வெல் காட்சியை வரை படத்தில் ஹீரோ சிவசாமிக்கு ஹீரோத்தனமான காட்சிகள் இல்லை. இரண்டாவது பாதியும் நம்பிக்கை ஊட்டுகிறது, என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











