Kara First Review: ’கர’ படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.. யாரு கொடுத்திருக்கா பாருங்க.. தனுஷ் ஹேப்பி!

சென்னை: எல்ஐகே திரைப்படத்தை தான் தமிழ் புத்தாண்டுக்கு தனுஷ் பார்த்துவிட்டு பாராட்டிவிட்டாரோ என ரசிகர்களே கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர். உண்மையில் தனுஷ் பாராட்டியது, 'கர' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவை தான்.

அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடிப்பில் வெளியான போர் தொழில் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்தார். அந்த படத்தை பார்த்து பிடித்துப்போன தனுஷ் தனக்கு ஒரு கதை பண்ண சொல்ல, விக்னேஷ் ராஜாவும் 'கர' படத்தை தனுஷுக்காக உருவாக்கியுள்ளார்.

Dhanush gives First Review to Kara Movie  he thanked Vignesh Raja with Genius word

வரும் ஏப்ரல் 30ம் தேதி 'கர' படம் வெளியாகவுள்ள நிலையில், திடீரென முதல் விமர்சனம் போல தனுஷ் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நல்ல நல்ல இயக்குநர்களை வசப்படுத்திய தனுஷ்: தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் நல்ல நல்ல இயக்குநர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் ஒரே ஒரு புத்திசாலியான நடிகர் யார் என்றால் அது தனுஷ் தான் என்கின்றனர். தனுஷ் தானே இயக்கி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்த நிலையில், அந்த ரூட்டில் இருந்து உடனடியாக மாறிவிட்டார். போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து என அடுத்தடுத்து தனுஷ் லைன் அப் தாறுமாறாக உள்ளது.

கர முதல் விமர்சனம்: தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது. ஒரு பக்கம் படத்தை புரமோட் செய்யும் விதமாக இயக்குநர் விக்னேஷ் ராஜா பேட்டி கொடுத்து வருகிறார். கர படம் எப்படி உருவானது என்றும் கல்ஃப் நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு நம்ம ஊரை எப்படி பாதித்தது என்கிற கதையில் தனுஷ் சாரை ரொம்பவே டார்க்காக காட்டி நடிக்க வைத்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், 'கர' படத்தை தமிழ் புத்தாண்டு அன்று முழுவதுமாக பார்த்த தனுஷ், "விக்னேஷ் ராஜா நீங்க ஒரு ஜீனியஸ்.. 'கர' படத்தை தந்ததற்காக நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இந்த முறை மிஸ் ஆகாது: தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வசூல் அள்ளினாலும் விமர்சனங்களை சந்தித்தது. தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் யூத் படம் போல ஹிட் அடிக்காமல் ஃப்ளாப் ஆனது. இட்லி கடை படமும் சொதப்ப, குபேரா படமும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. இந்நிலையில், போர் தொழில் பட இயக்குநர் கண்டிப்பாக தனக்கு வெற்றியை கொடுப்பார் என தனுஷ் மிகவும் நம்பிக்கையுடன் உள்ள நிலையில், சமீபத்தில் படத்தை பார்த்து முடித்த பின்னர் தனுஷுக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டதாகவும் அவரது நெருங்கிய சினிமா நண்பர்களும் படத்தை பார்த்துவிட்டு இந்த முறை மிஸ் ஆகாது என்று கூறியுள்ள நிலையில், தான் இப்படியொரு ட்வீட்டை தனுஷ் போட்டுள்ளார். தனுஷ் கொடுத்த வாய்ப்புக்கு விக்னேஷ் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X