Raayan Positive Review: தனுஷின் தரமான சம்பவம்.. ராயன் படத்தில் இதெல்லாம் செம சூப்பரா இருக்கு!
சென்னை: ராஜ்கிரண், ரேவதியை லீடு ரோலில் வைத்து அவர்களின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்த ப. பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் பவர்பேக் பர்ஃபார்மன்ஸ் காட்டி ராவாக ஒரு படத்தை அதுவும் ராவணன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துக் காட்டி மிரட்ட இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமார் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சந்தீப் கிஷன் ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்துள்ளார்.

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நடிகராக 50 படங்களில் அசுரத்தனமான நடிப்பை கொட்டித் தீர்த்துள்ள தனுஷ் இயக்குநராக 2வது முறையும் ஷைன் ஆகியுள்ளார். ராயன் படத்தில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தனுஷ் எப்படி எல்லாம் ஸ்கோர் பண்ணார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ராயன் படத்தின் பாசிட்டிவ் அம்சங்கள்: ப. பாண்டி படத்தை விட டெக்னிக்கலாக ராயன் படத்தை தரமான தாறுமாறான கேங்ஸ்டர் படமாகவே தனுஷ் கொடுத்துள்ளார். படத்தில் லேக் அடிக்கக் கூடாது, ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் பாதியில் பெரிதாக ஆக்ஷன் பிளாக்குகள் வைக்காமல், கதையை போரடிக்காமல் நகர்த்திச் சென்ற தனுஷ் இரண்டாவது பாதி முழுக்கவே ஆக்ஷன் காட்சிகளை வைத்து அதிர வைத்துள்ளார்.
இசை அரக்கன்: தனுஷை தாண்டி இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை டைட்டில் கார்டில் ஏன் முதல் இடத்தில் வந்தது என்கிற கேள்வியை தனுஷ் ரசிகர்களே கேட்கமாட்டார்கள். அந்தளவுக்கு இசை அரக்கனாகவே படத்தை ஒட்டுமொத்தமாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். கடைசியில் கிளைமேக்ஸில் வரும் "அடங்காத அசுரன் நான்" பாடலுக்கு இடையே "உசுரே நீதானே" வரிகளை உள்ளே ஏ.ஆர். ரஹ்மான் வைத்த இடத்தை பார்த்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் கூட கூஸ்பம்ப்ஸ் ஆகிறது.

மெகா காஸ்டிங்: தனுஷ் தனக்கு மட்டுமே படம் முழுவதும் சீன்களை வைக்காமல் அண்டர்பிளே செய்து சரியான நேரத்தில் மட்டுமே எழுச்சி காண்பது சிறப்பாகவே உள்ளது. சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளியின் கெமிஸ்ட்ரி படத்திற்கு செம வைபாக உள்ளது. அதுவும் குவாட்டரை குடித்து விட்டு பளார் என சந்தீப் கிஷனுக்கு அபர்ணா அறை விடும் இடத்தில் வரும் "வாட்டர் பாக்கெட் மூஞ்சு" பாடல் தியேட்டரில் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், செல்வராகவன், சரவணன், வரலட்சுமி சரத்குமார் என படத்தில் ஏகப்பட்ட ஸ்டார் காஸ்டிங் இடம்பெற்றிருப்பதால் பர்ஃபார்மன்ஸில் பெரிதாக எங்கேயும் குறை தெரியவில்லை.
ராவான ராயன்: சமீப காலமாகவே ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்கள் மட்டுமே தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டத்தை வரவழைக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திக் கொண்டே இருந்த நிலையில், ராயன் படத்தில் கத்தியால் ஏகப்பட்ட சம்பவங்களை செய்து ராவான படத்தை தனது ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார் தனுஷ். தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா மட்டும் படத்தில் சண்டை செய்யவில்லை. துஷாரா விஜயன், செல்வராகவன் வரை சண்டை செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











