3 வருட கால வெயிட்டிங்குக்கு வொர்த்தா எனை நோக்கிப் பாயும் தோட்டா.. ட்விட்டர் விமர்சனம்!

Recommended Video

Enai Noki Paayum Thota | Gautham menon watch ENPT with fans

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார், வேல ராமமூர்த்தி நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா மூன்று ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் இன்று வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியான அசுரன் படம் 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் ரிலீசையும் தியேட்டர்களில் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

எனை நோக்கிப் பாயும் தோட்டா குறித்து படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே காணலாம்.

ஐசரி கணேஷுக்கு நன்றி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முன் வந்து எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ததற்கு நன்றி என்றும் படம் அருமையாக இருக்கிறது என்றும் கெளதம் மேனன் டச் மற்றும் தனுஷின் நடிப்பு வேற லெவல் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி ரெஃபரென்ஸ்

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் தளபதி விஜய்யின் ரெஃபரென்ஸ் உள்ளதாகவும், அந்த காட்சி வரும் இடத்தில் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிப்பதாகவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சிம்பு ரசிகர்கள்

கெளதம் மேனனின் எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியாகியுள்ள நிலையில், நடிகர் தனுஷுக்கும் இயக்குநர் கெளதம் மேனனுக்கும் சிம்பு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அச்சம் என்பது மடமையடா மாதிரி இருக்கு

கெளதம் மேனன் ஸ்டைல் வசனங்கள் சுப்பரா இருக்கிறது. பாடல்கள் அற்புதம், மேகா ஆகாஷின் அறிமுக நடிப்பு அழகாக இருக்கிறது ஆனால், கொஞ்சம் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா மாதிரியும் இருக்கு என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

3 வருஷ வெயிட்டிங்குக்கு வொர்த்

நிச்சயமாக 3 வருஷ வெயிட்டிங்குக்கு வொர்த் என்றும் படத்தின் முதல் பாதி, காதல், காமம் மற்றும் ரொமான்ஸ் கலந்து செல்வதாகவும் இந்த ரசிகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

செகண்ட் ஹாஃப் மொக்கை

எனை நோக்கிப் பாயும் தோட்டா முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மொக்கை என்றும், நடிகர் தனுஷின் நடிப்பு வேற லெவல் என்றும் இந்த நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார்.

ஒரு சீன் கூட போரடிக்கல

ஒரு சீன் கூட போரடிக்கல.. மாஸ் சீன், லவ், ஆக்‌ஷன் சீன்ஸ்.. வசனங்கள்னு ஆல் ஏரியாவும்..கபாலி எப்டி போனானோ அப்டியே திரும்ப வந்துருக்கான்னு சொல்லு Moment For GVM. தர்புகா BGM & Songs வெறித்தனம் என இந்த ரசிகர் படத்திற்கான தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X