twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Maaran Review...தனுஷின் மாறன் எப்படி இருக்கு...சூப்பரா?சுமாரா?

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள் : தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ராம்கி, போஸ் வெங்கட்

    இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்

    இயக்கம் : கார்த்திக் நரேன்

    டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 11 ம் தேதி நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அத்தரங்கி ரே/ கலாட்டா கல்யாணம் படத்தை தொடர்ந்து ஓடிடி.,யில் ரிலீசாகி உள்ள தனுஷின் மற்றொரு படம்.

    Recommended Video

    Maaran Movie Review by Poster Pakiri | Dhanush | Malavika Mohanan | Karthick Naren | Filmibeat Tamil

    நேர்மையான பத்திரிக்கையாளரான ராம்கி, பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதே சமயத்தில் பிரசவத்தின் போது அவரது மனைவியும் உயிரிழக்கிறார். வழக்கமான தமிழ் சினிமாவில் வருவதை போல் அம்மா, அப்பாவாக இருந்து தங்கையை வளர்க்கிறார் ஹீரோவான மாறன் கேரக்டரில் நடித்துள்ள தனுஷ்.

    தனுஷின் இன்ட்ரோ சீனே பாரில் ரவுடிகளுடன் சண்டை, போதையில் போலீசிடம் சிக்கி, ஹீரோயின் மாளவிகா வந்து மீட்டு செல்வது தான். பழைய சினிமாக்களில் வருவதை போல் தீ பார்த்து டென்ஷனாகி, மயங்கி விழுகிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது. அப்பாவை போலவே நேர்மையான பத்திரிக்கையாளராக உண்மையை எழுதியதால் பல வேலைகளில் இருந்து துறத்தப்படுகிறார். புதிய நிறுவனத்தில் வேலை, வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பாப்புலர் பத்திரிக்கையாளராகிறார்.

    போலீஸ் ஃபிரண்ட் கேட்டதால் அரசியல்வாதியான சமுத்தியக்கனி செய்யும் ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேட்டை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து எழுதுகிறார். இதனால் அரசியல் பகையை சம்பாதிக்கிறார் தனுஷ். இதனால் தங்கையை கடத்தி, தீ வைத்து எரிக்கிறார்கள் ரவுடிகள். தனுஷிற்கு ஏன் தீ என்றால் அலர்ஜி என்பதற்காக இந்த பிளாஷ்பேக். வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் போல், இந்த படத்தில் தங்கை சென்டிமென்ட் பாடலாக சிட்டுக்குருவி பாடல் வைக்கப்பட்டுள்ளது. தங்கை இறந்த சோகத்தில் குடித்து குடித்து விழுந்து கிடக்கும் ஹீரோவை, ஹீரோயின் தைரியம் சொல்லி கொலையாளிகளை கண்டுபிடிக்க சொல்கிறார். தங்கையை கொலை செய்தவர்களை மாறன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.

    ஹாட்ரிக் ஓடிடி தோல்வியை தவிர்ப்பாரா தனுஷ்? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது மாறன் திரைப்படம்!ஹாட்ரிக் ஓடிடி தோல்வியை தவிர்ப்பாரா தனுஷ்? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது மாறன் திரைப்படம்!

    மாறன் படம் எப்படி இருக்கு ?

    மாறன் படம் எப்படி இருக்கு ?

    ஃபர்ஸ்ட் ஆஃப் வழக்கமான தமிழ் சினிமாக்களில் வரும் நேர்மையான பத்திரிக்கையாளர். அவருக்கு பாசமான தங்கை. தனது நேர்மையால் பத்திரிக்கையாளர் சம்பாதிக்கும் அரசியல் எதிர்ப்புக்களால் அவரின் குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவது, கொலை செய்யப்படுவது என்பதாகவே உள்ளது. செகண்ட் ஆஃப்பில் தனுஷ் ஆரம்பத்தில் இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் என அறிமுகம் செய்ததால் அதை நிரூபிக்க சில ட்விஸ்ட்களை வைத்துள்ளனர்.

    ப்ளஸ்– மைனஸ் என்ன ?

    ப்ளஸ்– மைனஸ் என்ன ?

    இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் பற்றிய கதையை இன்னும் கொஞ்சம் வலுவாக சொல்லி இருக்கலாம். மிகவும் சுமாரான திரைக்கதை. பேனாவை கத்தியாக பயன்படுத்தி ரவுடிகளுடன் தனுஷ் சண்டை போடும் காட்சிகள் ஹீரோயிசத்தை காட்டுவதாக உள்ளது. அண்ணன்- தங்கை பாசம், காதல் ஆகியவற்றை அங்கங்கே இடைச்சொருகல்களாக வைத்துள்ளனர். பல காட்சிகளில் அப்பட்டமாக செயற்கை தனம் தெரிகிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் சுமார் ரகம். செகண்ட் ஆஃப் த்ரில்லிங்காக ஒரு முறை பார்க்கலாம்.

     மிஸ் செய்த விஷயங்கள்

    மிஸ் செய்த விஷயங்கள்

    சமுத்திரக்கனியின் வில்லத்தனத்தை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். அமீரை வில்லன் ரேஞ்சில் காட்ட முயற்சித்து அதையும் சொதப்பி வைத்துள்ளார்கள். பல இடங்களில் லாஜிக் ரொம்பவே இடிக்கிறது. அமீர்-தனுஷ் சண்டைக்காட்சியில் அமீர் பற்ற வைக்கும் தீயை தாண்டி வந்து ஹீரோயிசம் காட்டுகிறார் தனுஷ். ஆனால் அடுத்த செகண்ட்டே கண்ணில் மாவை தூவியதும் தடுமாறி நிற்கிறார். அப்போது தனுஷை சுற்றி கொழுந்து விட்டு எரிந்த தீ திடீரென காணாமல் போகிறது. வெறும் தரையில் எப்படி தீ எரிந்தது, எப்படி காணாமல் போனது என தெரியவில்லை.

    பாடல்கள் எப்படி இருக்கு

    பாடல்கள் எப்படி இருக்கு

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பொல்லாத உலகம் பாடல் அனைவரையும் கவர்வதாக உள்ளது. தங்கை சென்டிமென்ட் பாடல் கேட்கும் படி உள்ளது. ஆனால் படத்தின் பல இடங்களில் ஒலிக்கும் பேக்கிரவுண்ட் இசை வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் அம்மா...அம்மா பாடலை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.

    மாறன் ரேட்டிங் என்ன

    மாறன் ரேட்டிங் என்ன

    மாஸ்டர் படத்தில் தான் மாளவிகாவை பெயருக்கு ஹீரோயினாக வைத்திருந்தார்கள் என்றால், மாறனிலும் அதே நிலை தான். தங்கையாக வரும் ஸ்மிருதி வெங்கட், ஆடுகளம் நரேன், ராம்கி ஆகியோர் தங்கள் கேரக்டரை யதார்த்தமாக செய்திருக்கிறார்கள். மகேந்திரன் முதல் முறையாக போலீஸ் ரோலில் நடித்துள்ளார். ஆனால் டம்மி போலீசாகவே அவரை பயன்படுத்தி இருக்கிறார்கள். மொத்தத்தில் மாறன் ரொம்பவே சுமார் ரகம் தான். மக்கள் இந்த படத்திற்கு 5 க்கு 2.5 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

    English summary
    Dhanush starred Maaran movie released today in disney plus hotstar. Maaran directed by Karthik Naren and produced by sathyajyothi films. G.V.Pravash scored the background music. This movie was discussed about investigative journalism. Audience gave 2.5 out of 5 rating for this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X