Thiruchitrambalam Twitter Review: தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா?

சென்னை: நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என்கிற கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

Recommended Video

Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review

வெளிநாடுகளில் முன்பாகவே படம் வெளியான நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் தாறுமாறா? அல்லது தடுமாற்றமா? என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. தியேட்டர்களில் திருவிழாவை போல ரசிகர்கள் பாலாபிஷேகம், பட்டாசு வெடித்தல், செண்டை மேளம் முழங்க டான்ஸ் என கொண்டாடி வருகின்றனர். யாரடி நீ மோகினி, உத்தமப்புத்திரன் படங்களை போல படு ஜாலியான படமாகவே திருச்சிற்றம்பலம் உருவாகி உள்ளதால் குடும்ப ரசிகர்களும் முதல் நாளே தனுஷ் படத்தை பார்க்க குவிந்துள்ளனர்.

பெயருக்கே சத்தம் தெறிக்குது

பெயருக்கே சத்தம் தெறிக்குது

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் டைட்டில் கார்டுக்கே ஸ்க்ரீன் அருகே தனுஷ் ரசிகர்கள் டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த தியேட்டரே காது கிழியும் அளவுக்கு சத்தத்தை எழுப்பி அலப்பறை செய்துள்ளனர். டெலிவரி பாயாக தனுஷின் அறிமுக காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தனுஷ் அனிருத் தரிசனம்

தனுஷ் அனிருத் தரிசனம்

ரோகிணி தியேட்டரில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து வந்து ரசிகர்களுடன் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 கொடுத்த காசுக்கு வொர்த்

கொடுத்த காசுக்கு வொர்த்

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இப்போது தான் பார்த்து முடித்தேன். படம் ரொம்ப நல்லா இருக்கு. கிரேட் என்டர்டெயின் மூவி. கொடுத்த காசுக்கு படம் வொர்த். தனுஷ் மற்றும் அனிருத்தின் காம்போ பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையை தீப்பிடிக்க வைத்துள்ளது என ஃபயர் எமோஜியை எல்லாம் போட்டு இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

போர் அடிக்குது

போர் அடிக்குது

இடைவேளை வரை படம் வந்துடுச்சு ரொம்பவே போர் அடிக்குது.. பார்த்த காட்சிகளே ரிப்பீட் ஆகி கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் கதையே இல்லை என இந்த நெட்டிசன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பாட்டு சூப்பர்

பாட்டு சூப்பர்

முதல் பாதி முழுக்கவே க்ரிஞ்சாக உள்ளது. மேகம் கருக்காதா பாடல் மட்டுமே கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். தனுஷ் ரசிகர்கள் ஆரம்பத்தில் வரும் விமர்சனங்களை பார்க்கவே கூடாது, படத்தை மட்டும் முதலில் என்ஜாய் பண்ணுவோம் என கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X