மோடியின் பணமதிப்பிழப்புக்கு முட்டு கொடுத்திருக்காங்களா?.. இந்தி திணிப்புமா? துரந்தர் 2வுக்கு விளாசல்

சென்னை: நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இயக்குநர் ஆதித்ய தார் இயக்கி தயாரித்துள்ள படம் துரந்தர். இந்த படம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாவது பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் மார்ச் 18ஆம் தேதியே பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. மேலும் படம் இந்தியில் தான் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் நெட்டிசன்கள் படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு எதிரான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

நெட்டிசன் ஒருவர், " துரந்தர் 2 படம் ரொம்ப violent ஆக இருக்கு படம். Demonitezation பண்ணதுக்கு ஒரு உருட்டு உருட்டி இருக்காங்க பாருங்க. பக்தாஸ் உச்சத்திற்கு போவது உறுதி. 4 மணி நேரம் ஏன் டா ஜவ்வு மாதிரி இழுத்து இருக்கீங்க என்று கேட்க தோன்றியது என்றும், துரந்தர் 2 படத்தில் 2017ஆம் ஆண்டு உபி தேர்தலில் ஜெயிக்க பாகிஸ்தான் ஆட்கள் 60000 கோடி கள்ள நோட்டை புழக்கத்தில் விட நேரம் பார்த்துகொண்டு இருக்க 2016 நவம்பர் 8ஆம் தேதி demonitezation அறிவிக்கப்பட்டது என்று ஒரு காட்சி வருது.உடனே சிலிர்த்து போய் சில்லறையை விடுகிறார்கள். அடேங்கப்பா என்றும் பதிவிட்டுள்ளார்.

Dhurandhar 2 Faces Backlash Over Narendra Modi Demonetization Angle

அதேபோல், துரந்தர் - நம்ம ஜிக்கு ஒரு இடத்தில் elevation வெச்சி இருக்கான் பாருங்க ஆதித்ய தார். மோடி வந்த பின்னர் தான் நம்ம ஆளுங்களுக்கு பயம் அதிகம் ஆகிருச்சுன்னு ஒருத்தர் சொல்ல வடமாநிலத்தவர்கள் தியேட்டரை நனைக்க போகிறார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பொய் பிரச்சாரம்: அதேபோல், 90% உண்மைகளையும் 10% பிரச்சாரத்தையும் கொண்டு துரந்தரை இயக்கி இருந்தார் ஆதித்ய தார். தற்போது, 10% உண்மைகளையும் 90% பிரச்சாரத்தையும் கொண்டு துரந்தர் 2-ஐ இயக்கி உள்ளார். நிர்வாக ரீதியாக தோல்வியடைந்த பிரதமரை புகழ்ந்து தள்ளுவதற்காக "பணமதிப்பிழப்பு" போன்ற ஒரு மோசமான முடிவை நியாயப்படுத்தி உள்ளார் ஆதித்ய தார். துரந்தர் 2 படத்தின் மூலம் அப்பாவி மக்களை முட்டாளாக மாற்ற முயற்சிக்கிறார் ஆதித்ய தார்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Dhurandhar 2 Faces Backlash Over Narendra Modi Demonetization Angle

இந்தி திணிப்பு?: அதேபோல் மற்றொரு இணையவாசியோ, " இந்தியை திணிப்பதற்காக வேண்டும் என்றே படத்தின் டப்பிங் வெர்ஷனை வெளியிடாமல் இந்தி வெர்ஷனிலேயே ரிலீஸ் செய்துள்ளார்களே என்று எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மொத்தத்தில் துரந்தர் 2 படத்திற்கு ஒரு புறம் திரைக்கதையாக பாராட்டுகள் குவிந்தாலும், படம் அரசியலாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

More from Filmibeat

Read more about: ranveer singh review Dhurandhar 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X