Dhurandhar 2 First Review: பாலிவுட்டில் ஒரு பாகுபலி.. துரந்தர் 2 முதல் விமர்சனம் வெளியாகிடுச்சு!
சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்சார் குழுவுடன் படத்தை பார்த்ததாக விமர்சகர் உமைர் சந்து கூறியுள்ள முதல் விமர்சனம் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் நடக்கும் பெட்ரூம் ஸ்டோரிகளை அதிகளவு ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி வரும் உமைர் சந்து பொதுவாகவே பாலிவுட் படங்களை பெரிதாக கொண்டாடாமல் தென்னிந்திய படங்களையே வெகுவாக பாராட்டி வருவார்.

ஆனால், இந்த முறை டோலிவுட் திரைப்படமான பாகுபலி திரைப்படம் எந்தளவுக்கு ஒரு பிரம்மாண்ட படமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைத்ததோ அந்தளவுக்கு துரந்தர் 2 திரைப்படம் கர்ஜிக்கும் என தனது முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
துரந்தர் 2 முதல் விமர்சனம்: கடந்த ஆண்டு வெளியான துரந்தர் திரைப்படம் வெறும் இந்தியில் மட்டுமே வெளியான நிலையில் கூட 1000 கோடி வசூலை அசால்ட்டாக ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படம் 3000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரந்தர் The Revenge திரைப்படத்துக்கு ஒட்டுமொத்தமாக 5 ஸ்டார்களை கொடுத்துள்ள உமைர் சந்து இந்த காலத்து பாகுபலி 2 என்றும் ஓவர்சீஸ் சென்சாரின் போது படத்தை பார்த்துவிட்டு மிரண்டே போய்விட்டேன் என தனது முதல் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
முதல் படமே தரமான சம்பவம்: துரந்தர் திரைப்படமே மிகப்பெரிய சம்பவத்தை கடந்த ஆண்டு செய்தது. பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே போய் அடிப்போம் என்கிற வசனங்களுடன் வெளியான படத்தை இந்தியர்கள் பெருமளவில் கொண்டாடினர். யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போக முழு காரணமே துரந்தர் 2 படத்தின் ரிலீஸ் தான் என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பாகுபலி 2, புஷ்பா 2 படங்களை போல துரந்தர் 2 திரைப்படம் இந்த மார்ச் மாதம் வசூல் சூறாவளியாக சுழன்று அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











