Dhurandhar 2 Public Review: துரந்தர் 2 பப்ளிக் விமர்சனம்.. தியேட்டர்ல பார்க்க பக்காவான படமா?
சென்னை: நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வெளியான துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இது உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களுக்கு இதன் இரண்டாம் பாகத்தின் மீதான ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இப்படி இருக்கையில் துரந்தர் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.
ரசிகர் ஒருவர் கூறும்போது, " துரந்தர் 2 மொத்தம் 4 மணி நேரம் என்றாலும் படத்தின் வேகம் 4 மணி நேரம் அமர்ந்திருப்பது போன்ற எண்ணத்தை கொடுக்கவில்லை. மாறாக படம் சிறப்பாக உள்ளது. அதுவும் ரன்வீர் சிங் நடிப்பு எல்லாம் சிறப்போ சிறப்பு, தியேட்டரில் பார்க்க வேண்டிய படம், ஓடிடியில் படத்தைப் பார்த்தால் அந்த அளவுக்கு இருக்காது என்று தெரிவித்தார்.

அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, " படத்தில் குறையே இல்லை, இசை நன்றாக உள்ளது. நடிப்பு நன்றாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் வந்து பாருங்கள். இடைவேளை காட்சியில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. கிளைமாக்ஸில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. ரிவஞ்ச் கொடுக்கும் காட்சி நன்றாக உள்ளது. மாதவனின் நடிப்பு மிக அருமை என்று தெரிவித்துள்ளார்.
மோடி தான் ஹீரோ: மற்றொருவர் கூறும் போது, முதல் பாகம் பார்த்துவிட்டு இரண்டாம் பாகம் பார்க்க வந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். முதல் பாகத்தில் என்னடா ரன்வீர் சிங் இப்படி இருக்கிறாரே என்று யோசிக்கத் தோன்றும், அதற்கு எல்லாம் இந்த படத்தில் காரணத்தை சொல்லி உள்ளார்கள். படத்தின் கதாநாயகன் என்றால் பிரதமர் மோடிதான். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்படி இந்திய ராணுவமும் உளவுத்துறையும் இருந்தது, அதற்கு பின்னர் எப்படி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. படம் ரொம்பவும் நன்றாக உள்ளது. மூன்றாவது பாகத்திற்கு கூட ஏதாவது லீட் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிக் கொடுக்காமல், இரண்டு பாகத்துடனே முடித்துள்ளார்கள். 4 மணி நேரம் போனதே தெரியவிலை" என்று தெரிவித்துள்ளார்.
மாதவன்: ரன்வீர் சிங் தான் படத்தின் பலம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், ஆனால் மாதவனுக்கும் அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் டிவிஸ்ட் இருந்து கொண்டே உள்ளது. கிளைமாக்ஸில் பயங்கரமான ட்விஸ்ட் இருக்கிறது. அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 4 மணி நேரத்திற்கு படம் ஒர்த் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு: ரசிகை ஒருவர் கூறும்போது, " படம் நல்லா இருக்கு, இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏன் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து சொல்லி இருப்பது நன்றாக உள்ளது. நான் எந்த காட்சியையும் சொல்லி படத்தை ஸ்பாய்லர் செய்ய விரும்பவில்லை. படத்தை தியேட்டரில் பாருங்கள் அப்போதுதான் படம் உங்களுக்குப் புரியும், படத்தை உணர முடியும். படத்தில் தொய்வு என்பதே இல்லை, இதற்கு அடுத்து என்ன வரும் இதற்கு அடுத்து என்ன வரும் என்று யோசிக்க வைக்கிறது. தியேட்டரில் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்



Click it and Unblock the Notifications











