Dhurandhar X Review: தூள் கிளப்பியதா துரந்தர்?.. ரன்வீர் சிங், சாரா நடிப்பு எப்படி? எக்ஸ் விமர்சனம்!

மும்பை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்‌ஷய் கன்னா மற்றும் சஞ்சய் தத் என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள துரந்தர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ரன்பீர் கபூரின் அனிமல் படத்தை போல ரன்வீர் சிங்குக்கு ஒரு அட்டகாசமான ஆக்ரோஷமான படமாக துரந்தர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆக்‌ஷன் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு எக்ஸ் தளத்தில் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த வாரம் இந்தியில் வெளியான தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸை அதிரடியாக 6 நாட்களில் கடந்த நிலையில், அடுத்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக துரந்தர் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhurandhar X Review in Tamil  Ranveer Singh  Sara Arjun movie is a blockbuster  fans says
Photo Credit:

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் இந்த படத்துக்கு கொடுத்துள்ள ரேட்டிங் மற்றும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

சுனாமி லோடிங்: இது ஒரு பக்காவான பைசா வசூல் படம், தியேட்டர்களில் எல்லாம் துரந்தர் சுனாமி அலை வீசப்போகிறது. ரன்வீர் சிங் இந்த படத்தில் வெறித்தனமான ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் என இந்த நெட்டிசன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

செம பயங்கரமான கதை: இதுவரை படத்தை 2 மணி நேரம் பார்த்துவிட்டேன், ரொம்பவே நீளமான கதையாக இருந்தாலும், எங்கேயும் போரடிக்கவில்லை. அந்தளவுக்கு திரைக்கதை மற்றும் ஸ்க்ரீன்ப்ளே விறுவிறுப்பாக செல்கிறது. ஃபைனான்ஸ் தீவிரவாதத்தை இந்த படம் தொட்டிருக்கும் இடம் ரொம்பவே பயங்கரமான பல உண்மைகளை எடுத்து சொல்வது போல உள்ளது. கண்டிப்பாக இது பிளாக்பஸ்டர் படம் தான் என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

V என்றால் Versatility: தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை போலவே இந்தியில் ரன்வீர் சிங்கில் பெயரில் உள்ள V என்றால் Versatility என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்று நடித்த பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களின் செமையான எடிட் வீடியோவையும் சேர்த்துப் போட்டு துரந்தரை கொண்டாடி வருகின்றனர்.

கிளாமரில் அசத்தும் சாரா அர்ஜுன்: பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுக்க ரன்வீர் சிங் போன்ற டாப் ஹீரோவுடனே ஜோடி போட்டு நடித்துள்ளார் சாரா அர்ஜுன். படத்தில் ரன்வீர் சிங்குடன் செம கெமிஸ்ட்ரியை ஒர்க்கவுட் செய்து நடித்துள்ளார் என்றும் கிளாமரில் அசத்தியுள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அனிமல் படம் போல துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X