twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Dikkiloona Review: சிரிப்பே வரலையே சந்தானம்.. டிக்கிலோனா டைம் மெஷின் காமெடி படம் எப்படி இருக்கு?

    |

    சென்னை: சினிமா படங்களை சின்னத்திரை லொள்ளு சபாவில் கலாய்த்த அதே வேலையையே நடிகர் சந்தானம் டிக்கிலோனாவில் செய்துள்ளார்.

    பேய் படங்களில் காமெடி கலந்து பிளேடு போட்டது போதாது என அடுத்ததாக டைம் மெஷின் கான்செப்ட்டை கையில் எடுத்து கலாய்ப்பதாக ரம்பம் போட்டுள்ளனர்.

    விஜய்யின் சாதி பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன்...பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்விஜய்யின் சாதி பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன்...பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்

    இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் உருவாகி உள்ள டிக்கிலோனா திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

    இன்னொரு டைம் மெஷின் படம்

    இன்னொரு டைம் மெஷின் படம்

    இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காமெடி டைம் மெஷின் திரைப்படமாக இருந்தாலும் அதில் சில லாஜிக்குகளை வைத்து பார்க்க ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருந்தனர். ஆனால், சந்தானத்தின் டைம் மெஷின் எதுக்குத்தான் இந்த கான்செப்ட்டை வைத்தனர் என்கிற கேள்வியை ரசிகர்கள் அனைவரையும் கேட்க வைத்திருக்கிறது.

    என்ன கதை

    என்ன கதை

    ஹாக்கி பிளேயராக வர நினைத்து குடும்ப சூழல் காரணமாக மின் வாரியத்தில் வேலை செய்யும் இபி மணியாக இருக்கும் சந்தானத்திற்கு மனைவி போன் செய்வதே ஒரு பெரிய டார்ச்சராக உள்ளது. மனைவி மற்றும் மாமனாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் எஸ்கேப் ஆக கார் டிக்கிக்கு அடியில் லேப் வைத்து நடத்தும் சில காமெடி பீஸ்கள் (விஞ்ஞானிகள்) கண்டு பிடிக்கும் கால இயந்திரத்தில் சென்று தனது திருமண வாழ்க்கையை மாற்ற முயற்சிக்க அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களுக்கு அதே வாழ்க்கையே போதும் என மீண்டும் சரி செய்ய முயலும் கதை தான் டிக்கிலோனா.

    டல்லடிக்கும் சந்தானம்

    டல்லடிக்கும் சந்தானம்

    தில்லுக்கு துட்டு படத்தில் எல்லாம் ஸ்மார்ட்டாக இருந்த நடிகர் சந்தானம் இந்த படத்தில் மேக்கப் கூட சரியாக போடாமல் ஏதோ நோஞ்சான் போலவே படம் முழுக்க காட்சி தருவது ஏன் என்றே தெரியவில்லை. மேலும், பழைய கவுன்ட்டர்களை இன்னமும் காமெடி என நம்பி யாரும் சிரிக்கலைன்னாலும் பரவாயில்லை நான் சொல்லியே தீருவேன் என பல இடங்களில் பேசி போரடிக்க வைக்கிறார்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    ஆல்பர்ட்டாக அந்த டைம் மெஷின் லேப்பில் மாப் போட்டு இருக்கும் நடிகர் யோகி பாபு தவறுதலாக மாப்பை கரண்ட் பாக்ஸில் வைக்க ஷாக் அடித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக மாறுவதை எல்லாம் பார்க்க நல்ல வேலை அவர் இப்போது உயிரோடு இல்லை. கால இயந்திரத்திற்கான ஃபார்முலாவையும் யோகி பாபு சொல்ல ஆடை இல்லாமல் சந்தானம் டைம் டிராவல் செய்கிறார்.

    பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்கள்

    பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்கள்

    டேடிஸ் லிட்டில் பிரின்ஸாக பெண்களை வளர்ப்பதால் தான் ஆண்கள் அவதிப்படுகின்றனர் என்கிற மோசமான வசனத்தையும் காட்சியமைப்பையும் வைத்து ஒட்டுமொத்தமாக பெண்களை இந்த படத்தில் இழிவுப்படுத்தி இருக்கிறார் நடிகர் சந்தானம். மேலும், பெண்களின் ஆடை பற்றிய வகுப்பெல்லாம் இப்போதும் எப்படி வொர்க்கவுட் ஆகும் என அவர் நினைப்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

    சிரிப்பே வரலை

    சிரிப்பே வரலை

    சந்தானம் படத்தில் லாஜிக் இல்லை என்றாலும் கதை இல்லை என்றாலும் அட்லீஸ்ட் காமெடியாவது இருக்குமே என ஒடிடியில் படத்தை பார்க்க உட்கார்ந்தவர்களுக்கு ஒரு சில இடங்களை தவிர ஒட்டுமொத்த படத்தில் சிரிப்பே வரலை என்பது தான் இந்த டிக்கிலோனாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இத்தனைக்கும் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், ராமதாஸ், ஷாரா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல லொள்ளு சபா நடிகர்கள் இருந்தும் காமெடி பெரிதளவில் கை கொடுக்கவில்லை.

    இரண்டு நாயகிகளின் நடிப்பு

    இரண்டு நாயகிகளின் நடிப்பு

    ஹாக்கி படம் என்றதும் நட்பே துணை நாயகி அனகாவையே புக் செய்து விட்டனர். இன்னொரு நாயகியாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் ஹீரோயின் ஷிரின் காஞ்ச்வாலா வந்து போகிறார். இருவருக்கும் நடிக்க பல இடங்களில் வாய்ப்புகள் தரப்பட்டாலும் இருந்தாதானே பாஸ் வரும் என்கிற ரீதியில் கஷ்டப்படுகின்றனர்.

    ஹாக்கியில் எதற்கு ஹர்பஜன்

    ஹாக்கியில் எதற்கு ஹர்பஜன்

    ஹாக்கி வீரராக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் சந்தானம் டைம் டிராவலில் கடந்த காலத்திற்கு சென்று திருமணத்தை நிறுத்த எதிர்காலத்தில் ஹாக்கி வீரராக மாறி விடுகிறார். ஆனால், அங்கேயும் பொண்டாட்டி டார்ச்சர் கதையை வைத்து ஹாக்கியில் சொதப்ப கடைசியாக ஹர்பஜன் ஹாக்கி கோச்சாக தோன்றி அட்வைஸ் கொடுக்கிறார். ஹாக்கியில் எதற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் என்கிற கேள்வியும் இயல்பாகவே எழத்தான் செய்கிறது. மொத்தத்தில் சந்தானம் ஒரு காமெடி காட்சியில் சொல்வதை போல "ஒரு முறை பார்க்கலாம்" என்று தான் டிக்கிலோனா சொல்ல வைக்கிறது. யுவன் சங்கர் ராஜா பயன்படுத்திய இளையராஜாவின் 'பேர் வைத்தாலும்" பாடல் கேட்க மட்டுமே நல்லா இருக்கு!

    English summary
    Actor Santhanam’s latest OTT release movie Dikkiloona struggles in comedy area also drain the movie elevation. Santhanam’s ‘eve’ teasing comments also make no sense in this funny time travel movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X