twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Dil Bechara Review: சிரித்துக் கொண்டே அழ வேண்டுமா.. சுஷாந்த் சிங்கின் இந்த இறுதி படத்தை பாருங்க!

    |

    Rating:
    4.0/5

    Star Cast: சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான்

    Director: முகேஷ் சாப்ரா

    மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி படமான தில் பேச்சாரா படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகிறது.

    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவான தில் பேச்சாரா OTT ரிலீசாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.

    இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். அப்படி ரிலீஸ் ஆகி இருந்தால், ஒட்டுமொத்த தியேட்டரும் கண்ணீருடன் தான் வெளியே வரும் காட்சியை கண்டிப்பாக பார்க்கலாம்.

    சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!

    என்ன கதை

    என்ன கதை

    ஆங்கிலத்தில் வெளியான The Fault in Our Stars திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது முடிவை முன்னதாகவே அறிந்து இந்த படத்தில் நடித்தாரோ என்ற சந்தேகமே படத்தை பார்க்கும் ஒவ்வொரு நொடிக் காட்சியிலும் தோன்றுகிறது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இருவர் காதலிப்பதும், அதில் நாயகன் இறுதியில் முன்னதாக மறைவதும் தான் கதை. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சோகத்தில் பிழியும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன.

    சுஷாந்த் சிங் நடிப்பு

    சுஷாந்த் சிங் நடிப்பு

    மேனியாக வருகிறார் சுஷாந்த் சிங், அப்படியே இளம் வயது மேடி மாதவனையே அவரது கதாபாத்திரம் நினைவு படுத்துகிறது. முழுப்பெயர் இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரு இடத்தில் கூட சலிப்புத் தட்டாத வகையில் ஒட்டுமொத்த எனர்ஜியையும் வெளியே கொண்டு வந்து நடித்துத் தள்ளுகிறார். கேன்சர் நோயால் தனது கால் போய்விட்டதை கேன்சர் நோயாளிகள் மத்தியில் காட்டும் காட்சி கண்களில் நீரை வரவழைக்கிறது என்றால், கடைசியில், தனது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை தானே காண வேண்டும் என தனது நண்பன் மற்றும் காதலியை பேச வைக்கும் காட்சி நெஞ்சை பிழிந்து எடுக்கிறது.

    அறிமுக ஹீரோயினா இவர்

    அறிமுக ஹீரோயினா இவர்

    இந்த படத்தில் கிஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சனா சங்கி, அறிமுக ஹீரோயின் என்றே சொல்ல முடியாத அளவுக்கு நடித்து தள்ளி இருக்கிறார். சோகமான கேன்சர் நோயாளியாக இருக்கும் போதும் சரி, சின்ன சின்ன ஆசைகளை செய்ய முடியாத நிலையில் இருக்கும் அவர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வருகைக்கு பின்னர் டோட்டலாக மாறுவதும், இடைவேளை காட்சியில், மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்புவதுமாக வேற லெவல் ஆக்டிங்கில் மிரட்டி உள்ளார்.

    சிறப்பு தோற்றத்தில் சைஃப் அலி கான்

    சிறப்பு தோற்றத்தில் சைஃப் அலி கான்

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஒரே காட்சியில் வந்து செல்கிறார். ஆனால், அந்த ஒரு காட்சி படத்தின் மிகவும் முக்கியக் காட்சியாகவும் பலரது வாழ்க்கைக்கு தத்துவமாகவும் அமைந்துள்ளது. அபிமன்யூ வீர் எனும் இசையமைப்பாளரை காண அடம்பிடித்து நாயகி கிஸ்ஸி தனது காதலன் மேனி மற்றும் அம்மாவுடன் மருத்துவர் ஆலோசனைகளை எல்லாம் மீறி பாரீஸ் செல்கிறார். அங்கே இசையமைப்பாளர் அபிமன்யூ வீராக சைஃப் அலி கான், ஒரு பித்து பிடித்த மனிதராக நடித்து இவர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்கிறார். உங்களின் அந்த பாட்டை ஏன் முடிக்கவில்லை என கிஸ்ஸி கேட்க, வாழ்க்கையின் சிறந்த விஷயங்களுக்கு முடிவே கிடையாது என பதில் அளிக்கிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இந்த உலகில் என்றுமே நிலைத்து இருப்பார் என்பதை அந்த வசனங்கள் சொல்வது போலத்தான் தோன்றுகிறது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    தில் பேச்சாரா படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகராகவே படம் முழுவதும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த்தை போல ஸ்டைலாக சிகரெட்டை வாயில் வைத்து இருப்பது, ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் ஒரு ஷார்ட் பிலிம் எடுப்பது. கடைசியாக மரணத்தின் விளிம்பில் தனது மனதுக்கு பிடித்த ரஜினிகாந்தின் கபாலி படத்தை பார்த்துக் கொண்டு இருப்பது என படம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நிறைந்து இருக்கிறார்.

    தமிழ் வசனம்

    தமிழ் வசனம்

    அதே போல ‘சரி' எனும் தமிழ் வசனம் படத்தில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. ஓகே என சொல்வதற்கு பதிலாக சரி என்ற தமிழ் சொல்லை நாயகிக்கு அறிமுகப்படுத்தும் இடத்தில் இருந்து, இறுதியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்த பிறகு, அவர்களது படம் திரையிடப்பட்டு, அதை அனைவரும் பார்க்கும் போது, ஸ்க்ரீனில் ‘சரி' என சுஷான்ந்த் சிங் சொல்வது வரைக்கும் அந்த வார்த்தைக்கே புதிய அர்த்தம் பிறந்தது போல இருக்கிறது.

    சந்தோஷமாக வாழ வேண்டும்

    சந்தோஷமாக வாழ வேண்டும்

    நிரந்தரமற்ற இந்த வாழ்வில், இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும், நமக்கு பிடித்தவர் மறைந்து விட்டால், நாம் துக்கத்தில் வாட வேண்டாம். அவர்கள் நினைவுகளுடன் நமது வாழ்க்கையை வாழலாம் என்ற மையக் கருத்தை சொல்லும் அழகான படத்தை கொடுத்துவிட்டு, படத்தின் கிளைமேக்ஸில் வருவதை போலவே சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் மறைந்து விட்டார். படத்தில் குறைகளே இல்லையா? என்று கேட்டால், குறைகளை விட உணர்வுகள் மேலோங்கி இருப்பதால் நிச்சயம் இந்த படத்தை பார்த்து சிரித்து அழலாம் சுஷாந்த் சிங்கிற்காக!

    English summary
    Sushant Singh Rajput’s last movie Dil Bechara released Disney plus hotstar and makes fans cry a lot with every fantastic scene.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X