Rocket Boys season 2 review: அரசியல் சண்டையில் சிக்கிய விஞ்ஞானிகளின் கதை.. ராக்கெட் பாய்ஸ்2 ரிவ்யூ!
ராக்கெட் பாய்ஸ் சீசன் 2
நடிகர்கள்: ஜிம் சர்ப், இஷ்வாக் சிங், சபா ஆசாத் மற்றும் அர்ஜுன் ராதாகிருஷ்ணன்
இயக்குனர்: அபய் பன்னு
சென்னை : ஜிம் சர்ப், இஷ்வாக் சிங் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடிப்பில் சோனி லிவ்வில் வெளியாகி உள்ள வெப் தொடர் தான் ராக்கெட் பாய்ஸ் சீசன் 2.
எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும், பரபரப்பு சிறிதும் குறையாமல் சுவாரஸ்யமாக உள்ளது.
ராக்கெட் பாய்ஸ் சீசன் 1
ராக்கெட் பாய்ஸ் சீசன் 1 கடந்த ஆண்டு சோனி லிவ்வில் வெளியானது. இந்த தொடர் ஒரு ஹிஸ்டாரிக்கல் தொடராகும். இதில் தனித்துவமாக காட்சி அமைப்புகள், நேர்த்தியான கதைகளம் என முதல் சீசனுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தத்தைத் தொடர்ந்து ராக்கெட் பாய்ஸ் சீசன் 2 சோனி லிவ்வில் வெளியாகி உள்ளது.
ரசிகர்களை திருப்திபடுத்தியதா?
முதல் சீசனைப் பார்த்து மிகவும் ஆர்வத்தில் இருந்த ரசிகர்களை இரண்டாவது சீசன் திருப்திபடுத்தியதா? இல்லையா? என்பதை இப்போது பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் வாங்கிய சில வருடங்களுக்கு பின் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்தொடரின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திர வாங்கிய பின் நடந்த அரசியல் சண்டைகள், அதிகார மாற்றங்கள், மற்ற நாடுகளின் உளவுத்துறை இந்தியாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தன.
ராக்கெட் பாய்ஸ் 2ன் கதை.
இந்த நேரத்தில் டாக்டர் ஹோமி பாபாவாகவும், டாக்டர் விக்ரம் சாராபாய் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் இவர்கள் மூன்று பேரும் இந்தியாவை ஒரு அணு சக்தி நாடாக மாற்ற எந்த மாதிரியான சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள் என்பது தான் ராக்கெட் பாய்ஸ் இரண்டாம் சீசனின் கதை.
உண்மைக்கதை
உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதால், அந்த தொடரின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இதில், ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் இருவரும் திறமையான சயின்டிஸ்டாகவும், அவர்களின் பின்னணி குறித்து விளக்கமாக சொல்லி விதம் கதைக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இதில், ஜிம் சர்ப் ஹோலி பாபா கதாபாத்திரத்திலும், இஷ்வாக் சிங் விக்ரம் சாரா பாய் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இருவருமே அவர்களின் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கனகச்சிதமாக நடித்திருந்தனர்.
பாராட்டுக்குரியது
ராக்கெட் பாய் சீசன் 2 வெப் தொடருக்கு அக்ஷப் ஓப்ராய் சினி போட்டோகிராபி பணிகளை மிகச்சரியாக செய்துள்ளார். மேலும், கதை சுதந்திர காலகட்டத்திற்கு பின் நடப்பதால், அந்த காலத்து உடை, வாகனம், இடம், செட் என எந்த இடத்திலும் சிறிதும் தோய்வின்றி அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தியது பாராட்டும் வகையில் உள்ளது.
மைனஸ்
இந்த தொடரைப் பொருத்தவரை மைனஸ் என்று சொல்லுவதற்கு எதுவும் இல்லை. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் 40 முதல் 50 நிமிஷம் இருந்ததால் ஒரு விதமான சலிப்பை ஏற்படுத்தி விட்டது. நேரத்தை சற்று குறைத்து இருந்தால், இந்த தொடரில் குறை என்று சுட்டிக்காட்ட எதுவுமே இருந்து இருக்காது.
ரசிகர்களுக்கு விருந்து
சித்தார்த் ராய் கபூர், மோனிஷா அத்வானி மற்றும் மது போஜ்வானி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் வார விடுமுறையில் ஸ்நெக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே பார்க்க உகந்த தொடராகும். ராக்கெட் பாய்ஸ் சீசன் 1 பார்த்து ரசித்த மக்களுக்கு நிச்சயம் இந்த சீசன் பிடிக்கும். இயக்குநர் அபய் பன்னு மீண்டும் ஒரு நல்ல வெப் தொடரை இயக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.இந்த வெப் தொடரை சோனி லிவ்வில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











