2 நாட்கள் ஆகிவிட்டது.. இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.. சமுத்திரக்கனி படத்தை பாராட்டும் இயக்குநர்!

சென்னை: சமுத்திரக்கனியின் விநோதய சித்தம் படம் 2 நாட்கள் ஆன போதும் அந்த படம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என பிரபல இயக்குநர் பாராட்டியுள்ளார்.

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கியிருக்கும் திரைப்படம் விநோதய சித்தம்.

இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேரம் என்ற கதாப்பாத்திரம்

நேரம் என்ற கதாப்பாத்திரம்

இந்த படம் ஓடிடி தளமான ஜீ 5 தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நேரம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. படம் முழுக்க சமுத்திரக்கனியையும் தம்பி ராமைய்யாவையும் மைய்யப்படுத்தியே உள்ளது.

இன்னும் மனதை விட்ட அகலவில்லை

இன்னும் மனதை விட்ட அகலவில்லை

இந்நிலையில் இப்படத்தை பார்த்த பிரபல இயக்குநரான சேரன் படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தம்பி.. இரண்டு நாட்கள் ஆகிவிட்டது உன் படம் பார்த்து இன்னும் மனதை விட்டு அகலவில்லை.. வாழ்க்கை பற்றிய உறவுகள் பற்றிய ஒவ்வொருவரின் ஈகோ பற்றிய பல சந்தேகங்களை நகைச்சுவை வசனங்களால் உடைத்தெறிந்து திரைப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறீர்கள் நீங்களும் தம்பி ராமையா அண்ணனும்... வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார்.

கட்டிப்போட்டாய் இரண்டு மணி நேரம்..

கட்டிப்போட்டாய் இரண்டு மணி நேரம்..

மற்றொரு பதிவில், புதியகதை.. பாடல் சண்டை என சத்தம் எழுப்பும் எதுவும் இல்லை... ஆனால் கட்டிப்போட்டாய் இரண்டு மணி நேரம்.. காட்சிக்கு காட்சி தெறிக்குது.. தியேட்டர்ல வந்திருந்தா போட்டியில் வந்து நிற்கும் அனைத்து படங்களும் பின் தங்கும் அளவு கைதட்டல் எகிறி இருக்கும்.. Zee 5 க்கே ஒரு சிறந்தபடம்.. என குறிப்பிட்டுள்ளார் சேரன்.

பாஸிட்டிவ் விமர்சனங்கள்

பாஸிட்டிவ் விமர்சனங்கள்

வழக்கமான சமுத்திரக்கனியின் படத்தை காட்டிலும் இந்த படம் மாறுபட்டு இருப்பதாகவும் வாழ்க்கையின் நிதர்சனங்களை கூறியிருப்பதாகவும் படம் குறித்து பாஸிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். இந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாததால் பின்னணி இசையிலேயே ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

ஓடிடி தளத்தில் உடன்பிறப்பே

ஓடிடி தளத்தில் உடன்பிறப்பே

இதனிடையே சமுத்திரக்கனியின் மற்றொரு படமான உடன்பிறப்பே படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. ஜோதிகாவின் 50வது படமான உடன் பிறப்பே படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் இப்படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X