Silent Review: படம் பேரு தான் சைலண்ட்.. ஆனால், படம் சொல்லி அடிச்சி இருக்கு.. சைலண்ட் பட விமர்சனம்!

Rating:
2.5/5

இயக்குநர்:கணேஷா பாண்டி

நடிகர்கள்: ஆரத்யா, முரளி ராதாகிருஷ்ணன், நமீதா, மாரிமுத்து

இசை: சமய முரளி

சென்னை: SR Dream Studios சார்பில், எஸ். ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கிய திரைப்படம் சைலண்ட். இப்படத்தில் ஆரத்யா, முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா மாரிமுத்து என பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாகி உள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்ப்பு பெரும் அளவில் இருந்தது. சஸ்பென்ஸ், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் கதை ஆரம்பிக்கும் போதே, ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அந்தக் கொலை பற்றி போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, அதே பாணியில் அடுத்தடுத்த கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இந்த கொலைக்கு பின் புவனேஸ்வரி என்ற பெண் இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வர, அந்த பெண்ணை தேடி போலீசார் அலைகின்றனர். ஆனால், போலீஸ் தேடும் அந்த பெண், பெண்ணே அல்ல ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பது தான் சைலண்ட் திரைப்படத்தின் கதை.

silent  review

சைலண்ட் படத்தின் கதை: உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையால் பெண் தோற்றத்தில் இருக்கும் ஒருவன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் அம்மாவை காப்பாற்ற போராடுகிறான். ஒரு கட்டத்தில் தன் தாய் படும் வேதனையை பார்க்க முடியாமல், தன் அம்மாவை கருணை கொலை செய்துவிடுகிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? அவன் அடுத்தடுத்து கொலை செய்வதற்கு காரணம் என்ன என்பதை இயக்குநர் கணேஷா பாண்டி அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளை வைத்து நகர்த்தி இருக்கிறார்.

படத்தின் பிளஸ்: இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் புவனேஸ்வரி மற்றும் புவனேஸ்வரன் என்கிற ரோலில்,இயக்குநர் கணேஷா பாண்டியனே நடித்துள்ளார். மேலும், மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவரும் படத்திற்கு புதியவர்களாக இருந்தாலும் அவர்களின் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளனர்.

விமர்சனம்: சைலண்ட் படம் பார்த்த ரசிகர்கள், திருநங்கைகள் வாழ்க்கையிலும், சமூதாயத்திலும் எந்தமாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை படத்தின் இயக்குநர் தெளிவாக சொல்லி இருக்கிறார். படத்தின் இசை நன்றாக இருந்தது, குறிப்பாக அம்மா பாடல் ரசிக்கும் படி இருந்தது. அம்மாவிற்காக எதுவேண்டுமானாலும் சொல்லலாம், அம்மா பாசம், படத்தில் அழுத்தமாக அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடித்த அனைவரும் புதுமுகமாக இருந்தாலும், அனைவரும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த கணேஷா பாண்டி ஸ்கோர் செய்து விட்டார். இது ஒரு புது முயற்சியான படம், இந்த படத்தை குடும்பத்தோடு நிச்சயம் பார்க்கலாம் என்று தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X