Pani Review: மனைவியை சீரழித்த இளைஞர்கள்.. பழி தீர்க்க காத்திருந்த கணவன்.. பனி விமர்சனம்!.

சென்னை: மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் தான் பனி. இப்படத்தை அவர் இயக்கியது மட்டுமில்லாமல் அதில் நடித்தும் இருக்கிறார். மேலும், இப்படத்தில், அபிநயா, சாகர் சூர்யா, வி.பி.ஜுனைஸ், பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர், சீமா என பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியாகி வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

மலையாளத் திரைப்படம் ''Pani'' ஒரு தாறுமாறான திரில்லர் படமாகும். இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜின் மனைவி அபிநயாவை சூப்பர் மார்க்கெட்டில் வைத்து ரெண்டு இளைஞர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார்கள். ஜோஜு ஜார்ஜ் ஒரு டானாக இருப்பதால், தன் மனைவி மீது கை வைத்த அந்த இரண்டு நபர்களை போட்டு தள்ளப்பார்க்கிறார். ஆனால், அந்த இளைஞர்களோ இவரை விட மோசமானவர்களாக இருப்பதால், ஹீரோவின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுகிறார்கள் கடைசியில் என்ன ஆனது என்பது தான் இத்திரைப்படத்தின் கதை.

joju george  abhinaya  pani review

பனி மலையாளப்படம்: பைக் மெக்கானிக்காக இருக்கும் இரண்டு இளைஞர்கள் மார்கெட் ஒன்றில் சுரேஷ் என்ற பெரியவர் பணத்திற்காக கொலை செய்துவிட்டு அங்கு வேலை செய்யாத ஏடிஎம்மில் போட்டுவிடுகின்றனர். கொலை நடந்த விஷயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வர, எதுவுமே தெரியாதது போல, அந்த இளைஞர்கள் நாங்க தான் கொலையை முதலில் பார்த்தோம் என்று சொல்லி போலீசை திசை திருப்புகின்றனர். இதையடுத்து, அந்த இளைஞர்களுக்கு போன் வருகிறது. அந்த போனில் நான் சொன்னபடியே சுரேஷை கொன்னுட்டீங்க, நானும் சொன்னபடியே உங்களுக்கு பத்து லட்ச ரூபாய் பணம் தருகிறேன். பணத்தை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளும் படி சொல்கிறான்.

பாலியல் கொடுமை: அந்த நேரம் பார்த்து, சூப்பர் மார்க்கெட்டிற்கு ஹீரோவின் மனைவி அபிநயா வர, அவரை பார்த்ததும் ரெண்டு இளைஞர்களுக்கும் ஆசை வருகிறது. இதனால அபிநயாவின் பின் சென்று யாரும் இல்லாத நேரமாக பார்த்து இடுப்பில் கை வைத்து தடவுகிறான். இதனால் ஆத்திரம் அடைந்த அபிநயா, பளார் என்று அடித்துவிட்டு, இந்த விஷயத்தை தன்னுடைய கணவரான ஜோஜு ஜார்ஜிடம் சொல்ல, அவர், அந்த இளைஞர்களை பொளந்து எடுத்து அங்கிருந்து மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். அடி வாங்கிய ரெண்டு இளைஞர்களும், இன்னும் எனக்கு அந்த பொண்ணு மேல இருக்கிற ஆசை போகவே இல்ல அவளை அடைஞ்சா தான் எனக்கு ஆசை தீரும் என்று சொல்லிவிட்டு, ஹீரோ வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து, வீட்டிற்குள் வந்து அபிநயாவை ரெண்டு இளைஞர்களும் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோவை எடுத்து வைத்துக்கொள்கிறார்கள்.

பழிக்கு பழி: இந்த விஷயத்தை கேள்விபட்ட ஹீரோ எப்படியாது. அந்த இளைஞர்களை பிடித்து கொன்றுவிட வேண்டும் என்று பல இடத்திலும் தேடி வருகிறான். ஆனால், யார் கண்ணிலும் சிக்காத அந்த இளைஞர்கள், ஜோஜு ஜார்ஜ் அம்மா மற்றும் நண்பன் என அடுத்தடுத்து கொலை செய்து வருகின்றனர். இதனால் ஒரு கட்டத்தில் ஜோஜு ஜார்ஜ் பொருமை இழந்து செல்போன் செல் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போக, இதை தெரிந்து கொண்ட அந்த இளைஞர்கள், வெளியில் இருந்தால் ஜோஜு ஜார்ஜ் கொன்றுவிடுவான் என தெரிந்து கொண்டு. போலீசில் சரண் அடைந்து விடுகின்றனர். இதனால், ஒரு திட்டம் போடும் ஜோஜு ஜார்ஜ், ஒரு கலவரத்தை உருவாக்கி அந்த இரண்டு இளைஞர்களையும் கடத்தி வந்து, அவர்களை கொன்று மனைவியை தொட்டதற்கு பழி தீர்த்துக்கொள்கிறான்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் தனது முதல் படத்திலேயே ஸ்கோர் செய்து இருக்கிறார். இது வழக்கமான பழி வாங்கும் கதைப்போல இருந்தாலும், அழுத்தமான திரைக்கதையை அமைத்து படத்தை விறுவிறுப்பாகி இருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது Sony Liv ஓடிடி தளத்தில் பார்க்கலாம். த்ரில்லர் படத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X