Malaikottai Vaaliban Review: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
நடிகர்கள்: மோகன் லால், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி
இயக்கம்: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
இசை: பிரசாந்த் பிள்ளை
சென்னை: மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை விருது பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து. மலையாளம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

மலைக்கோட்டை வாலிபன்: ஜல்லிக்கட்டு, சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். வரலாற்றுப் படமான இதில் மோகன்லால், மலைக்கோட்டை வாலிபனாக நடித்துள்ளார். ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார்.
படம் எப்படி இருக்கு: வலிமை மற்றும் திறமை மிக்க போர்வீரன் மோகன்லாலை சுற்றியே கதை நகர்கிறது. ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற பிரபலமான நடனக் கலைஞரைக் கண்டதும் வாலிபனின் வாழ்க்கையில் ஓர் திருப்பம் ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் விளைவுகளையும், சவால்களையும் போர் வீரன் மோகன் லால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. மேலும், இந்த படத்தில், ஜப்பானின் சாமுராய் கலாச்சாரம் இந்தியாவில் எப்படி வேரூன்றியுள்ளது என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி உள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

கூடுதல் பலம்: இப்படத்தில் மோகன்லால் தவிர, சோனாலி குல்கர்னி, ஆண்ட்ரியா ரவேரா, டேனிஷ் சைட், ஹரீஷ் பெராடி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, கதா நந்தி மற்றும் ராஜீவ் பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. குறிப்பாக பி.எஸ்.ரஃபீக் எழுதி புன்னர கட்டிலே பூவனத்தில் என்ற பாடல் மனதை வருடும் வகையில் இருந்ததாக இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சிறப்பான படம்: பழைய தமிழ் நாட்டுப்புற நாடகங்களை நினைவுபடுத்தும் கதை சொல்லும் பாணியில் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். முதல் பாதியில் அதிரடியாட்டிய இப்படம் இரண்டாம் பாதிக்கு பின் மெதுவாக சென்றதால், இது மலையாளப்படமா என்று நினைக்க வைத்தது. ஆனால், அனைவருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் கதையை சொல்லி மீண்டும் தான் ஒரு வெற்றி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார் லியோ ஜோஸ் பெல்லிசேரி.


Click it and Unblock the Notifications











