இந்தியன் 2வை விட சூப்பரா இருக்கு.. பார்த்திபனின் டீன்ஸ் படம் எப்படி இருக்கு.. பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், ''டீன்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 13 இளம் வயதினரை மையமாகக் கொண்டு சாகசம் நிறைந்த த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது 'டீன்ஸ்' படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படம் குறித்து பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்
செம ட்விஸ்ட்: டீன்ஸ் படம் பெண் ஒருவர், இதுவரை தமிழ் சினிமாவிலேயே இல்லாத ஒரு ஜானரை பார்த்திபன் சார் செய்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் குழந்தைகளுக்கு அந்த கதாபாத்திரம் அப்படியே மனதில் பதிந்துவிடும். பலவிதமான ட்விஸ்டுகளுடன் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்று யோசிக்க வைத்தது, ஸ்கிரின் ப்ளே சூப்பராக வந்து இருக்கு, அதுபோல பின்னணி இசை சூப்பர். இது பேமிலி ஆடியன்சுக்காக எடுத்த படம் என்பதால் அனைவரும் பார்க்கலாம்.

பிளஸ் பாயிண்ட்: டீன்ஸ் படத்தோட பிளஸ் பாயிண்ட் வந்து ஸ்கிரின் ப்ளே மற்றும் பின்னணி இசை என அனைத்துமே அருமையாக இருக்கிறது. எந்த இடத்திலும் லாஜிக்கே இல்லையே என்று யோசிக்க வைக்கவில்லை. குழந்தைகளுக்கு இந்த படம் ரோலர் கோஸ்டர் போல படம் சூப்பரா வந்து இருக்கு. படத்தின் முதல் பாதியில் பல ட்விஸ்டுகள் இருந்தன. இரண்டாம் பாதியில் அதை உடைக்கும் போது, வேறு கதையாக தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் 13 குழந்தைகள் இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் அதை அப்படியே பக்காவாக நடித்திருந்தார்கள். டீன்ஸ் படத்தை பொருத்தவரையும் நெகட்டிவ் கமெண்டே சொல்ல முடியாது அந்த அளவிற்கு படம் ரியலாக இருந்தது. படத்தினுடைய சிஜி வேலைகள், பின்னணி இசை என அனைத்தும் சரியாக வந்து இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் படமாக இப்படம் இருந்தது.
இந்தியன் 2வை விட சூப்பர்: படம் பார்த்த மற்றொரு சினிமா பிரியர், கோடி கோடியா கொட்டித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்ல, நல்லா நடிக்க தெரிந்த திறமையான குழந்தைகளை வைத்து இப்படி கூட படம் எடுக்கலாம். இந்தியன் 2 படத்தை போய் பாருங்க, படத்தில் நிறைய லேக் இருக்கு, ஆனால், இந்த படம் அவ்வளவு நல்லா இருக்கு. மஞ்சும்மல் பாய்ஸ் பசங்கள யாருக்கு தெரியும் அவங்க நடிக்கலையா? நாங்க தமிழ் பசங்க பண்ண மாட்டோமா என்ன, இந்த படம் கேரளாவில் ஓடி வசூலை அள்ளும் பாருங்க. படத்தில் குறையே சொல்லமுடியாத அளவிற்கு அனைத்தும் தரமாக வந்து இருக்கு என்றார்.


Click it and Unblock the Notifications











