Hanuman Twitter Review: தியேட்டரை அலறவிட்ட ஹனுமான்.. கடைசி 20 நிமிட காட்சி கூஸ்பம்ஸ்!

சென்னை: இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஹனுமான். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ளார். பிரம்மாண்டமான பொருட் செலவில் 12 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.. இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் சேர்ந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இன்று அதிகாலை இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர். அதன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Director Prasanth Varmas Hanuman movie twitter review

முதல் பாதி சூப்பர்: ஹனுமான் திரைப்படம் பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவர், ஹனுமான் படத்தின் முதல்பாதி சூப்பரா இருக்கு. அதே போல VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை சொல்லிய விதம் அருமை. பான் இந்திய சினிமாவில் தெலுங்கு சினிமா மீண்டும் இடம்பிடித்துள்ளது. தேஜ சஜ்ஜா, வரலட்சுமி மற்றும் கெடப் ஸ்ரீனு காமெடி ஹைலைட் என பதிவிட்டுள்ளார்.

மாஸ் கிளைமாக்ஸ்: படம் பார்த்த மற்றொரு இணையவாசி,ஹனுமான் கிளைமாக்ஸ் 30 நிமிடத்தை மீண்டும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி இருந்தது. மேலும், விஎஃப்எக்ஸ், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. ஹனுமனாக நடித்த தேஜ சஜ்ஜாவின் நடிப்பு சூப்பர், ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

கூஸ்பம்ஸ்: ஹனுமானின் தீவிர பக்தரான ஒருவர், படத்தை முதல் காட்சியை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டி உள்ளார். அதில், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் இருக்கையின் நுனியில் அமரவைத்துவிட்டது. தியேட்டர் மொத்தமும் ஜெய் ராம் கோஷம் ஒலித்ததை கேட்கும் போது, கூஸ்பம்ஸ் என்று தான் சொல்லவேண்டும்.இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் வர்மாவுக்கு மிகபெரிய நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநருக்கு நன்றி: படம் பார்த்த மற்றொரு ட்விட்டர்வாசி, பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனொன் நடிப்பில் ராமாயண கதையை தழுவி வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதை விடவும் பல மடங்கு ஹனுமான் படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. VFX, விஷூவல், வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு என எதையுமே குறை சொல்லும்படி இல்லை, அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X