கேஜிஎப், பாகுபலி வரிசையில் மற்றொரு பிரம்மாண்டம் ‘சலார்’.. பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக இன்று திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படம் பற்றி பயில்வான் ரங்கநாதன் தரும் விமர்சனம் என்ன என்று பார்க்கலாம்.

இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாறன் மற்றும் ஜெகபதி பாபு,ஸ்ரேயா ரெட்டி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசை அமைத்து இருக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Director Prashanth Neels Salaar Movie Review by Bayilvan Ranganathan

பான் இந்திய திரைப்படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று உலக முழுவதும் கோலாகலமாக வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்: சலார் திரைப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில், கேஜிஎப் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், நம்ம ஊர் ஷங்கர் போல பிரம்மாண்ட இயக்குநர். ஷங்கர் படத்தில் பிரம்மாண்டம், காதல், ஆக்ஷன் இருக்கும். ஆனால், பிரசாந்த் நீல்,எப்போதுமே வரலாற்றை பின்னணியாக கொண்ட பிரியட் காலத் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் திரைப்படத்தில் வேறு ஒரு வரலாற்றை புதிதாக எழுதினார் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. 1500 கோடியை வசூலித்து உலக சினிமாவையே திக்குமுக்காட வைத்தது. இப்படத்தில் நடித்த யாஷ் மாஸ் நடிகராகிவிட்டார்.

மதிக்காத பிரபாஷ்: சலார் படத்தில் பிரகாஷ் கதாநாயகனா நடித்து இருக்கிறார். பாகுபலி என்ற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த பிரபாஷ் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இதனால், பிரபாஷ் படப்பிடிப்புக்கு எப்போது வேண்டுமானாலும் வருவார் எப்போது வேண்டுமானாலும் போவாராம், பிரசாத் நீல் மதிக்கவே மாட்டாராம், ஆனால், கேஜிஎப் 2 படத்தின் வெற்றிக்கு பிறகுதான் பிரபாஷ் இயக்குநர் பேச்சையே கேட்டாராம்.

சலார் படத்தின் கதை: இன்று வெளியாகி உள்ள சலார் திரைப்படத்தின் கதை என்ன வென்றால் அம்மா வாங்கிய சத்தியத்திற்காக வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வருகிறார் பிரபாஷ். ஒரு கட்டத்தில், ஸ்ருதிக்கு ஆபத்து நெருங்க, காட்டு மிருகமாய் மாறுகிறார். இறுதியில் பிருத்வி ராஜூக்கும் பிரபாசுக்கும் என்ன தொடர்பு, அம்மா பிரபாஸிடம் வாங்கிய சத்தியம் என்ன, ஸ்ருதி ஹாசனுக்கும் இவர்களுக்கும் என்ன பிரச்சனை என்பதை, ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரசாத் நீல்.

தரமான இசை: மேலும், பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். மேலும்,போர்க்கள காட்சி, செட் வடிவமைப்பு,வசனம், ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், மியூசிக் என அனைத்தும் மிரட்டும் வகையில் உள்ளது.

மற்றுமொரு பிரம்மாண்ட படம்: கேஜிஎப் மகத்தான வெற்றியால் சலார் படத்தின் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சலார் திரைப்படம் கேஜிஎப், பாகுபலி வரிசையில் மற்றொரு பிரம்மாண்டமான ராஜ்ய வம்ச திரைப்படமா இருக்கும். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ட்விஸ்ட் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கிறது. இதனால் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியே தியேட்டரில் ரசிகர்கள் ஆராவாரம் செய்து பார்க்கத் தகுந்த திரைப்படம் சலார் என்று பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சன்ததை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X