LIK Public Review: கம்பேக் கொடுத்தாரா விக்னேஷ் சிவன்.. எல்ஐகே பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிரிதி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. படத்தை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படம் பார்த்த இணையவாசி ஒருவர், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த திரைப்படத்தை பார்க்க வந்தேன். ஆனால், படம் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக இருந்தது. முதல் பாதி ஓரளவு slow-ஆ இருந்தாலும், இரண்டாம் பாதி மிகவும் engaging ஆகவும் powerful ஆகவும் இருந்தது. கதை புதுமையாக இருப்பதோடு, 2040-ல் உலகம் எப்படி இருக்கும் என்பதை ஒரு புதிய கோணத்தில் காட்டுகிறது. பசுமை உலகம், தொழில்நுட்ப கட்டுப்பாடு, மனிதர்கள் மொபைல் இல்லாமல் வாழும் ஒரு சூழல். இவை எல்லாமே ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை கொடுக்கிறது. இதற்கு முன்னாடி பார்த்த concepts போல இருந்தாலும், presentation மிகவும் fresh ஆக இருக்கு. முக்கியமாக, மனிதர்கள் மனிதர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி connect ஆக வேண்டும் என்பதைக் மிகவும் அழகாக படம் சொல்லுகிறது. இன்றைய காலத்தில் எல்லாமே AI மீது depend ஆகி வரும் சூழலில், "AI-ஐ உதவிக்காக பயன்படுத்துங்கள், ஆனால் அதை நம்பி வாழாதீர்கள்" என்பதையே படம் வலியுறுத்துகிறது.

Vignesh Shivan  LIK Review                                            LIK
Photo Credit:

கண்டிப்பாக பிடிக்கும்: படம் பார்த்த மற்றொருவர் இந்த ஜெனரேஷன் மட்டும் இல்லாமல், அடுத்த ஜெனரேஷனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு meaningful படம் இது. மொத்தத்தில், இது ஒரு நல்ல கருத்தை கொண்ட, visually மற்றும் concept-wise strong ஆன படம். இன்றைய காலத்திலுள்ள Gen Z தலைமுறைக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். அந்த அளவுக்கு இந்த படம் கனெக்ட் ஆகும். இந்த படத்துக்கு 10-ல் 9 மதிப்பெண் கொடுக்கலாம். அந்த அளவுக்கு படம் நல்ல இருக்கு. குறிப்பாக VFX மிகவும் அருமையாக வந்திருக்கு. இந்த திரைப்படத்திற்காக விக்னேஷ் சிவன் 4 வருடங்கள் காத்திருந்தார். நிச்சயம் இந்த படம் ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்றார்.

சீமான் மாஸ்: படம் பார்த்த பெண் ஒருவர், படத்தில் சீமான் அவர்களின் நடிப்பு மிகவும் சூப்பர். Cinematography கண்ணுக்கு மிகவும் அழகாக இருந்தது. ஒவ்வொரு frameமும் ரசிக்கும் படி இருந்தது. இந்த படம் science + love mix என ஒரு யூடினிக்கான படம். அனிருத் இசை இந்த படத்துக்கு பெரி பலம். முக்கியமாக, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் அட்டகாசமாக perform பண்ணிருக்காங்க. அவர்களோட கெமிஸ்ட்ரி மற்றும் நடிப்பு ரசிக்க வைத்துள்ளது. இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம். ஆனா வயதானவர்களுக்கு இந்த concept முழுமையாக கனெக்ட்டாவது கொஞ்சம் சந்தேகம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X